எங்களையும் சற்று சிந்தியுங்கள்?- அமேசான், பிளிப்கார்ட் வெளியேற கோரி போராட்டம்

|

அனைத்து பொருட்களும் ஆன்லைனில் தள்ளுபடியில் விலையில் கிடைக்கிறது என்று நாம் அனைவரும் அதிலேயே வாங்கி வருகிறோம். இதனால் அருகில் உள்ள கடைக்காரர்கள் அவர்களை சார்ந்துள்ள தொழிலாளிகள், அவர்களது குடும்பத்தார்கள் என ஏராளமானோர் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

ஒவ்வொரு பொருளிலும் பலரின் வாழ்வாதாரம்

ஒவ்வொரு பொருளிலும் பலரின் வாழ்வாதாரம்

ஒரு கடைக்கு பொருட்கள் இறக்குமதி செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. பொருட்கள் உற்பத்தி அதை கொள்முதல் செய்யும் நிறுவனம், அதை அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து எடுத்து செல்லும் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள், மொத்த வியாபாரிகள், அங்கிருந்து சில்லரை வியாபாரிகள் என பலரை சார்ந்தது. நாம் வாங்கும் 100 துவரைப்பருப்பிலும், 1 தேங்காயிலும் பல்வேறு குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது.

கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்

கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்

தற்போது இதை நின்ற இடத்தில் ஆன்லைனில் வாங்குவதன் மூலம் இவர்கள் அத்தனை பேரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது. அதோடு அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு இழக்கச்செய்கிறது. இன்று நாம் மளிவு விலையில் ஆன்லைனில் வாங்குகிறோம். அதையடுத்து பக்கத்தில் உள்ள பலசரக்கு கடை வியாபாரம் இன்றி மூடிவிட்டால். பின் ஆன்லைன் தான் ஒரே வழி என்று வரும். அப்போது மளிவு தள்ளுபடியெல்லாம் இல்லை ஒரே விலைதான் அவர்கள் நிர்ணயிப்பது தான் என்கின்றனர் பலசரக்கு வியாபாரிகள்.

சும்மா கிழி: மலிவு விலையில் அட்டகாச ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்சும்மா கிழி: மலிவு விலையில் அட்டகாச ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஆன்லைன் நிறுவனத்தில் பணி புரிபவர்கள்

ஆன்லைன் நிறுவனத்தில் பணி புரிபவர்கள்

ஆன்லைன் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் நிலை என்னவென்று பார்த்தால், பத்து பேரின் வேலை இழக்க செய்து ஒருவருக்கு வேலை அளிப்பது முறையாகாது. அந்த ஒரு நபருக்கும் உழைப்பிற்கு ஏற்ப சம்பளம் அல்ல, அதுதான் கார்பரேட் மூளை என்கின்றனர்.

வெளியேறு வெளியேறு என குரல் எழுப்பி போராட்டம்

வெளியேறு வெளியேறு என குரல் எழுப்பி போராட்டம்

புதுடெல்லியின் மிகப்பெரிய மொத்த பஜார் பகுதியில், பொதுவாக ஒருவருக்கொருவர் போட்டிப்போடும் வணிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வெளியேறு வெளியேறு என்று குரல் எழுப்பி போராட்டம் நடத்தினர். இது அமேசான்.காம், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களை வெளியேறக் கோரி நடைபெற்ற 700-க்கும் மேற்பட்ட போராட்டங்களில் ஒன்றாகும்.

ஜியோ புதிய ஆல் இன் ஒன் திட்டம் அறிமுகம்! முன்பைவிட 300% அதிக நன்மைகளுடன்!ஜியோ புதிய ஆல் இன் ஒன் திட்டம் அறிமுகம்! முன்பைவிட 300% அதிக நன்மைகளுடன்!

வியாபாரிகள் குற்றச்சாட்டு

வியாபாரிகள் குற்றச்சாட்டு

இந்தியாவின் கடைக்காரர்கள் உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக ஒன்று திரண்டு வருகிறார்கள். அதேபோல் உள்ளூர் வணிகங்கள் பாதுகாப்பிற்கான விதிகளை மீறி கொள்ளையடிக்கும் விலையில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைத்துள்ளனர். இந்த போராட்டத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்ப்போம்.

சில்லரை விற்பனையின் எதிர்காலம் ஆபத்து

சில்லரை விற்பனையின் எதிர்காலம் ஆபத்து

1.3 பில்லியன் நுகர்வோர் கொண்ட ஒரு நாட்டின் சில்லறை விற்பனையின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. அங்கு வால்மார்ட் மற்றும் அமேசான் நிறுவனம் பில்லியன் டாலர்கள் கணக்கில் முன்னேற்றம் அடைந்துக் கொண்டே வருகின்றனர்.

இது இரண்டாவது பதிப்பு

இது இரண்டாவது பதிப்பு

ஆங்கிலேயே ஆட்சிக்கு பிறகு தற்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை கிழக்கிந்திய நிறுவனத்தின் இரண்டாவது பதிப்பாகும் என்று டெல்லி போராட்டத்தில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் பிரவீன் காண்டேல்வால் கூறுகிறார்.

மூன்றாம் கட்ட சந்தையை மேற்கொள்வதாக அறிக்கை

மூன்றாம் கட்ட சந்தையை மேற்கொள்வதாக அறிக்கை

விலை நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையை இந்திய அரசு அக்டோபரில் அறிவித்தது. அமேசான் மற்றும் வால்மார்ட் சமீபத்தில் ப்ளூம்பெர்க் நியூஸுக்கு அளித்த அறிக்கையில், தங்களின் செயல்பாடுகள் இந்திய சட்டங்களுக்கு இணங்குவதாகவும், இந்தியாவில் ஆன்லைன் நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு சந்தையாக மட்டுமே செயல்படுகின்றன என்றும் கூறினார். ஆனால் முதல் தரப்பு என்னவென்று சிந்தியுங்கள், ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் கையில் உடனே எடுப்பது மொபைல்தான் ஆன்லைன் வியாபாரம் தான் என்கின்றனர்.

அரசியல் சக்தியாக காட்டும் வணிகர்கள்

அரசியல் சக்தியாக காட்டும் வணிகர்கள்

இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் சுமார் 70 மில்லியன் சிறு வணிகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியாவின் கடைக்காரர்கள் சங்கம் தங்களை ஒரு வலுவான அரசியல் சக்தியாக(வாக்காளர்கள்) காட்டுகிறது. அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் வாக்காளர் தளத்தில் வர்த்தகர்கள் ஒரு முக்கிய அங்கம்.

ஆன்லைன் நிறுவனங்கள் முதலீடு

ஆன்லைன் நிறுவனங்கள் முதலீடு

அமேசான் நிறுவனம் சீனாவிலிருந்து வெளியேறியது மற்றும் அமெரிக்காவில் வால்மார்ட்டின் ஈ-காமர்ஸ் செயல்திறன் தீர்மானகரமாக இல்லாத காரணத்தால், இரு நிறுவனங்களும் வளர்ச்சியின் முக்கிய அம்சமாக இந்தியாவை குறிவைத்து இங்கு குடியேறியுள்ளனர் எனவும் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் இந்தியாவில் 5.5 பில்லியன் டாலர் செலவிடுவதாக உறுதியளித்துள்ளார், அதே நேரத்தில் வால்மார்ட் 16 பில்லியன் டாலர் பிளிப்கார்ட்டில் ஒப்பந்தம் செய்துள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

வீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கைவீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை

 வணிகர்கள் குற்றச்சாட்டு

வணிகர்கள் குற்றச்சாட்டு

இப்போது கடைக்காரர்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் அதிகபட்ச விலை மற்றும் அதீத தள்ளுபடியால் விதிகளை மீறுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். கடைக்காரர்கள் சங்கம் தீபாவளி விற்பனையில் 60% வீழ்ச்சியைக் கண்டதாகக் கூறினாலும், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆறு நாள் திருவிழாவிலிருந்து சாதனை வருவாயைப் புரிந்துள்ளன. ஆடம்பர பொருட்களுக்கு ஆன்லைன் என்றால் பரவாயில்லை அத்தியாவசிய பொருட்களுக்கே ஆன்லைன் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது என கடைக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Source: livemint.com

Pic courtesy: social media

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon, Flipkart Face the Ire of 70 Million Indian Shopkeepers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X