கேபிள் TV, செட்-டாப் பாக்ஸ் கதை முடிந்தது.. ரூ.5,499-க்கு 4K வீடியோ.. வாய்ஸ் ரிமோட்.. ஓடிடி ஆப்.. எந்த மாடல்?
கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ் ஆகியவற்றை தூக்கி சாப்பிடும்படி அமேசான் பயர் டிவி ஸ்டிக் 4K செலக்ட் (Amazon Fire TV Stick 4K Select) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. 4K ரெசொலூஷன் வீடியோ, டால்பி ஆடியோ மட்டுமல்லாமல், அலெக்சா வாய்ஸ் ரிமோட் கிடைக்கிறது. ஓடிடி ஆப்கள், ஆடியோ, வீடியோ பீச்சர்கள் போன்ற ஸ்மார்ட் டிவியில் இருக்கும் ஒட்டுமொத்த பீச்சர்களும் கிடைக்கின்றன. அமேசான் பயர் டிவி ஸ்டிக் 4K செலக்ட் மாடலின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
உங்களது டிவியில் எச்டிஎம்ஐ போர்ட் இருந்தால் போதும், இந்த அமேசான் பயர் டிவி ஸ்டிக் 4K செலக்ட் மாடலை அதில் பொருத்தி பயன்படுத்தி கொள்ளலாம். இதில் பிரீமியம் டிவிகளில் கிடைக்கும் பீச்சர்கள் கிடைக்கும், அதுமட்டுமல்லாமல், அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கொடுக்கப்படும். இன்டர்நெட் இருந்தால் போதும் பயன்படுத்தி கொள்ளலாம்.

செட்-டாப் பாக்ஸ், கேபிள் டிவி கனெக்சன் இல்லாமலேயே வீடியோக்களை பார்க்க முடியும். 4K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் போன்ற வீடியோ பீச்சர்களின் சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக ஸ்மார்ட் ஹோம் கன்ட்ரோல்களை கொடுக்கிறது. பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), ஆப்பிள் டிவி (Apple TV) போன்ற ஒட்டுமொத்த ஓடிடிகளை பயன்படுத்தலாம்.
அலெக்சா வாய்ஸ் ரிமோட் (Alexa Voice Remote) மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் வாய்ஸ் கான்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். இதுபோக இதிலும் குயிக் அக்சஸ் பட்டன்கள், வால்யூம் கன்ட்ரோல்கள் கிடைக்கின்றன. மேலும், பிளே மியூசிக், கேமரா கன்ட்ரோல் போன்ற பீச்சர்களின் அக்சஸ் இதில் கிடைக்கிறது. முழு பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.
அமேசான் பயர் டிவி ஸ்டிக் 4K செலக்ட் அம்சங்கள் (Amazon Fire TV Stick 4K Select Specifications): இந்த பயர் டிவி ஸ்டிக்கில் வழக்கம்போல பயர் டிவி ஓஎஸ் (Fire TV OS) மற்றும் குவாட் கோர் (Quad Core) ப்ராசஸர் கிடைக்கிறது. டூயல் பேண்ட் வை-பை 5 (Dual-band Wi-Fi 5) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ப்ளூடூத் 5.0 (Bluetooth: 5.0) கனெக்டிவிட்டி உள்ளது. ஸ்பீக்கர்கள், ஹெட்போன் சப்போர்ட் கிடைக்கும்.
ஐஆர் கன்ட்ரோல் கொண்ட வாய்ஸ் ரிமோட் கிடைக்கிறது. இதில் டிவி, சவுண்ட் பார்களையும் கன்ட்ரோல் செய்ய முடியும். எச்டிஎம்ஐ அவுட்புட் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி இருக்கிறது. இதில் யுஎஸ்பி பவருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆடியோவை பார்க்கையில், டால்பி ஏசி-3, ஈ-ஏசி-2 உள்ளிட்டவை கிடைக்கின்றன. இதை எச்டிஎம்ஐ பாஸ் மூலம் மட்டுமே பெற்று கொள்ள முடியும்.
வீடியோ அவுட்புட்டை பார்க்கையில், 2160p ரெசொலூஷன், 1080p ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆகவே, 4K அவுட்புட் வரையில் பெற்று கொள்ளலாம். அதேபோல 720p ரெசொலூஷனும் இதில் கிடைக்கிறது. ஸ்மார்ட் வீடியோ பீச்சர்களை பார்க்கையில், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), எச்எல்ஜி (HLG) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த மாடலில் கிளவுட் ஸ்டோரேஜ் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, டிஜிட்டல் கன்டென்ட்களை வாங்கி கொள்ளலாம். 4K டிவிகள் மற்றும் 4K அல்ட்ரா எச்டி டிவிகளுக்கு பக்காவாக இருக்கும். வாய்ஸ்வியூ (VoiceView), ஸ்கிரீன் மேக்னிபையர் (Screen Magnifier) போன்ற அக்சஸிபிலிட்டி கிடைக்கிறது. 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது.
14 எம்எம் தடிமன் கிடைக்கிறது. வெறும் 42 கிராம் எடை மட்டுமே வருகிறது. பிளாக் கலரில் வாங்கி கொள்ளலாம். 1 வருட வாரண்டி கிடைக்கும். இந்த அமேசான் பயர் டிவி ஸ்டிக் 4K செலக்ட் மாடலின் விலை ரூ.5,499ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ் இல்லாமல், இதை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








