Amazon Fab TV Fest Sale: ஸ்மார்ட் டிவிகளை தள்ளுபடியில் வாங்க சரியான நேரம் இதுதான்.!
அமேசான் தளத்தில் Amazon Fab TV Fest Saleஎனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் ஜூன் 25-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ், சியோமி, ரெட்மி, டிசிஎல், எல்ஜி, சோனி போன்ற பல முன்னணி நிறுவனங்களின் டிவிகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரெட்மி 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி( L43M6-RA/L43M7-RA) மாடலுக்கு தான் இப்போது அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவி முன்பு ரூ.34,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தற்போது அமேசான் அறிவித்துள்ள சிறப்பு விற்பனையின் மூலம் இந்த டிவியை ரூ.21,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைப் பார்ப்போம்.
அதாவது ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியில் Vivid பிக்சர் என்ஜின் உள்ளது. பின்பு ஏ பிளஸ் கிரேடு எல்இடி பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
அதேபோல் குவாட்-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த டிவியில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதி உள்ளது. குறிப்பாக இந்த டிவிக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு இந்த ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 43-இன்ச் ரெட்மி டிவி.

டால்பி ஆடியோ, டிடிஎஸ், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட ஆதரவுகளைக் கொண்ட 20W ஸ்பீக்கர்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு தனித்துவமான ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்.
ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். மேலும் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 43-இன்ச் ஸ்மார்ட் டிவி.


Click it and Unblock the Notifications








