Home
News

Amazon-ல் பொளந்து கட்டும் ஆர்டர்.. iPhone 14, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max மீது அபார தள்ளுபடி!

ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் 15 சீரீஸ் அறிமுகமாகி, விற்பனையும் தொடங்கி விட்டது. வழக்கம் போல இந்தாண்டும் ஆப்பிள் ரசிகர்கள் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை போட்டிபோட்டுக்கொண்டு வாங்குகின்றனர்.

ஒருவேளை உங்களுடைய கவனம் புதிய ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15 Series) மீது இல்லை என்றால், அல்லது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும் அளவிற்கு உங்களிடம் பட்ஜெட் இல்லை என்றால்.. மாறாக கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 14 சீரிஸ் (iPhone 14 Series) மாடல்களை வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே அதற்கான சரியான நேரம்.

iPhone 14, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max மீது அபார தள்ளுபடி!

ஏனென்றால் பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 3 மாடல்கள் மீது ம் பிரத்யேக தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. இந்த மூன்று மாடல்களின் மீது என்ன அளவிலான தள்ளுபடி கிடைக்கிறது? இவைகளின் பழைய மற்றும் புதிய தள்ளுபடி விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

ஐபோன் 14 (iPhone 14) மீதான தள்ளுபடியும், அதன் முக்கிய அம்சங்களும்: அமேசான் வலைத்தளம் ஐபோன் 14 மீது 21% ஆரம்ப தள்ளுபடியை வழங்குகிறது. இதன் மூலம் உங்களால் ஐபோன் 14 மாடலை வெறும் ரூ.62999 க்கு வாங்க முடியும். நினைவூட்டும் வண்ணம் இந்த மாடலின் அசல் விலை ரூ.79900 ஆகும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஐஓஎஸ்16 (iOS 16) உடன் வருகிறது. மேலும் இது ஐஓஎஸ் 17 அப்டேட்டிற்க்கு (iOS 17 Update) தகுதியான மாடலாகவும் உள்ளது. இது எந்த வெளிச்சத்திலும் சிறந்த புகைப்படங்களை வழங்கும் மேம்பட்ட கேமரா செட்டப்புடன் வருகிறது.

இதில் 12எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 12எம்பி செல்பீ கேமரா உள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை ஆப்பிள் ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே கொண்டுள்ளது. கடைசியாக இது ஒரு நாள் முழுவதுமான பேட்டரி ஆயுள் மற்றும் 20 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது.

ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) மீதான தள்ளுபடியும், அதன் முக்கிய அம்சங்களும்: அமேசான் வலைத்தளமானது ஐபோன் 14 ப்ரோ மீதும் பிரத்யேக தள்ளுபடியை வழங்குகிறது. இதன்கீழ் பழைய விலையான ரூ.129900 க்கு பதிலாக ரூ.119900 க்கு ஐபோன் 14 ப்ரோ மாடலை வாங்க முடியும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் 14 ப்ரோ மாடலானது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 48எம்பி மெய் கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. கடைசியாக இது ஆப்பிளின் சொந்த ஏ16 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) மீதான தள்ளுபடியும், அதன் முக்கிய அம்சங்களும்: அமேசான் வலைத்தளம் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலின் மீது 7 சதவீத நேரடி தள்ளுபடியை வழங்குகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த மாடலின் அசல் விலை ரூ.1,49,900 ஆகும். ஆனால் அமேசானின் ஆரம்ப தள்ளுபடிக்கு பிறகு ஐபோன் 14 ப்ரோ மேக்ஸை ரூ.1,39,990 க்கு வாங்கலாம்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆனது ஏ16 பயோனிக் சிப் மற்றும் 6 கோர் ப்ராசஸர் உடன் வருகிறது. மேலும் இது 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை 48எம்பி மெயின் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Exclusive discount on iPhone 14 iPhone 14 Pro and iPhone 14 Pro Max Check Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X