TikTok விரும்பிக்கு வீடியோ எடுக்கும்போதே Layoff மெயில் அனுப்பிய Amazon
அமேசானில் (Amazon) பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் "எனது ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்" என்று டிக்டாக் (TikTok) வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போதே அவருக்கு Layoff மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், அவர் மெயிலை பார்த்து கண்கலங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த ஊழியர்களே, ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அமெரிக்க நிறுவனங்களான மைக்ரோசாப்ட் (Microsoft), மெட்டா (Meta), ட்விட்டர் (Twitter), அமேசான் (Amazon), ஃபேஸ்புக் (Facebook) உள்ளிட்டவையே அதிகப்படியான பணியாளர்களை நீக்கி வருகிறது.

ஆனால், இந்த பணிநீக்கம் ஊழியர்களுக்கு இடியாய் சென்று சேருகிறது. சொல்லப்போனால், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு நேரம் காலம் பார்க்காமல் Layoff மெயில் அனுப்பப்படுகிறது. அந்த வகையில், மெட்டா நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவருக்கு அதிகாலை 4 மணிக்கு மெயில் மூலம் Layoff நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதேபோல பல ஊழியர்கள் பணிக்கு கிளம்பும் வேளையில் பணிநீக்க மெயிலை பெற்றுள்ளனர். இந்த வரிசையில், அமேசானில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியருக்கு ஒருவருக்கு டிக்டாக் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போதே பணிநீக்க மெயில் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. ஜார்ஜியா நாட்டின் அட்லாண்டாவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் ஜெனிபர் லூகாஸ் (Jennifer Lucas) என்னும் பெண் 8 ஆண்டுகளாக்கும் மேலாக ஆட்சேர்ப்பு மேலாளராக (Recruiting Manager) பணிபுரிந்து வந்தார்.
சமீப காலமாக வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சமூக ஊடகங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால், விளாக் (vlog) எடுப்பது, பிளாகரில் (Blogger) தனது கருத்துகளை பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவையை தொடர்ந்து செய்து வந்தார். அதேபோல டிக்டாக்கில் வீடியோ எடுத்து பதிவிடுவதையும் வழக்கமாக வைத்து வந்தார்.
அந்த வகையில், தனது ஒருநாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பதிவிட திட்டமிட்டுள்ளார். அதன்படியே இரண்டு நாள்களுக்கு முன்பு டிக்டாக்கில் வீடியோ எடுக்க தொடங்கினார். அப்படி, காலையில் பெட்டில் இருந்து எழுவது, காபி குடிப்பது, பல் துலக்குவது உள்ளிட்டவையை செய்து முடித்தார்.
அதன்பின், வழக்கம்போல வேலையை தொடங்க டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை ஆன் செய்து இமெயில் பக்கத்தை திறந்தார். அந்த நேரத்தில், அவருக்கு பணிநீக்க மெயிலை அமேசான் நிறுவனம் அனுப்பியுள்ளது. இந்த மெயிலை பார்த்த உடன் ஜெனிபர் லூகாஸ் கண்கலங்குகிறார். ஆனால், வீடியோ எடுப்பதை நிறுத்தவில்லை.
இதையடுத்து, அந்த வீடியோவை அவரது சமூக ஊடக பக்கங்களில பகிர்ந்து தனது வருத்தத்தை பதிவு செய்தார். அதில், "நான் அடிக்கடி எனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் ஒன்று சொல்லுவேன். 2015ஆம் ஆண்டு அமேசானில் பணிக்கு சேர்ந்து, எனது கடின உழைப்பால் 6 முறை பதவி உயர்வு பெற்று ஆட்சேர்ப்பு மேலாளரானேன் என்று, இனிமேல் இப்படி சொல்ல முடியாது.
இப்போது நானும் பணிநீக்கம் செய்யப்பட்ட 9 ஆயிரம் பேர்களில் ஒருவள் என்று பதிவிட்டுள்ளார். அமேசான் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கப்போவதாக பிப்ரவரி மாதம் அறிவித்தது. அதன்படி படிப்படியாக பணிநீக்கம் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications