மரங்களில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள்: வாகன ஓட்டுனர்களின் பரிதாப நிலை.!

|

அமேசான் வலைதளத்தை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக அனைத்துப் பொருட்களும் இந்த தளங்களில் எளிமையாக கிடைப்பதால் பொதுமக்கள் இதை அதிகளவு பயன்படுத்துகின்றனர். மேலும் அமேசான் நிறுவனம் சரியான நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்கிறது.

பற்றிய விரிவானத் தகவல்களைப் பார்ப்போம்.

இந்நிலையில் டெலிவரி ஆர்டர்களை முந்தி எடுப்பதற்காக அமேசான் ஆர்டர்களை முந்தி எடுப்பதற்காக அமேசான் வாகனஓட்டுனர்கள் ஸ்மார்ட்போன்களை மரங்களில் கட்டி தொங்கவிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இதைப் பற்றிய விரிவானத் தகவல்களைப் பார்ப்போம்.

கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன

அதாவது அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருக்கும் விநியோக நிலையங்கள் மற்றும் கடைகள் அருகே, மரங்களில்ஸ்மார்ட்போன்கள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன. மேலும் வித்தியாசமான இந்த நடவடிக்கையின் பின்னணியை விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

சபாஷ்: பப்ஜி உட்பட 118 சீன செயலிகளுக்கு இந்தியா தடை- பெற்றோர்களே என்ஜாய்!சபாஷ்: பப்ஜி உட்பட 118 சீன செயலிகளுக்கு இந்தியா தடை- பெற்றோர்களே என்ஜாய்!

கொரோனா மிகப் பெரிய பாதிப்பை

அதன்படி கொரோனா மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது, மேலும் இதனால் அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பின்பு வேலையின்மையால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஊழியர்களுக்கு சிறிய

இந்த சூழலில் பணம் இல்லாமல் சிரமப்படும் ஊழியர்களுக்கு சிறிய வருமானம் கூட மிகப்பெரிய உதவியாய் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு அமேசான் ஓட்டுனர்கள் நூதன முயற்சியில் இறங்கியுள்ளனர்.

விசிட்டிங் கார்டை நட்டுவச்சா செடி வளரும் அதிசயம்! நெட்டிசன்ஸ்கள் பாராட்டு!விசிட்டிங் கார்டை நட்டுவச்சா செடி வளரும் அதிசயம்! நெட்டிசன்ஸ்கள் பாராட்டு!

கணினி தேர்வு செய்யும், அதுவும் ஓட்டுனர்களின் செல்போன் சிக்னலை

இந்த அமேசான் செயலியைப் பொறுத்தமட்டில், பொருட்கள் விநியோகம் செய்யும்போது, அந்த நேரத்தில் அருகில் இருக்கும் டெலிவரி ஓட்டுனர்களைத் தான் கணினி தேர்வு செய்யும், அதுவும் ஓட்டுனர்களின் செல்போன் சிக்னலை வைத்து செய்யப்படும். குறிப்பாக யாருடைய செல்போன் சிக்னல் மிக அருகில் இருக்கிறதோ, அந்த குறிப்பிட்ட ஓட்டுனருக்கு டெலிவரி வழங்கப்படும்.

செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை

அதன்படி பதிவு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை விநியோக நிலையங்கள் அருகில் உள்ள மரங்களில் சில ஓட்டுனர்கள்தொங்கவிடுத்து, வேறு டெலிவரிக்குச் சென்றுவிடுவர். அவர்களின் மற்றொரு செல்போன் எண் மரங்களில் இருக்கும் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். டெலிவரி ஆர்டர் இறுதியானதும், விரைவாக வந்து அடுத்த டெலிவரியை எடுத்துக் கொள்வர்.

 $15 கிடைக்கும் என்று

குறிப்பாக ஒரு டெலிவரிக்கு $15 கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மோசமான இந்த பொருளாதார சிக்கலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவே ஓட்டுனர்கள் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அமேசான் நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மெற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Drivers Are Hanging Smartphones in Trees to Get More Work: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X