டெலிவரி பாய் டூ ஆட்ட நாயகன்- மாபெரும் கிரிக்கெட் வீரரின் பிரமிப்பு பயணம்: அவ்வளவு தியாகம்., அவ்வளவு அடி

|

ஓமனின் அல் அமீரட்டில் டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று பி பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணி மோதியது. இதில் பலரை வியக்க வைக்கும் விதமாக ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய அங்கம் வகித்தவர் கிறிஸ் கிரீவ்ஸ். இவர் இந்த ஆட்டத்தில் மிக சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் பட்டத்தை வென்றதோடு பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்த முக்கிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை

ஸ்காட்லாந்து டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் வங்கதேசம் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டது. ஸ்காட்லாந்தின் வெற்றிக்கு முக்கிய அங்கமாக திகழ்ந்தவர் கிறிஸ் கிரீவ்ஸ். சில மாதங்களுக்கு முன்பு இவர் அமேசான் டெலிவரி ஊழியராக பணி புரிந்துள்ளார். இதுகுறித்து ஸ்காட்லாந்து கேப்டன் கைல் கொய்ட்சர் தெரிவிக்கையில், உலகக்கோப்பை தயாரிப்பில் ஈடுபடும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கிறிஸ் கிரீவ்ஸ் அமேசான் நிறுவன பார்சல் டெலிவரி ஊழியராக பணி புரிந்தார். தற்போது கிறிஸ் கிரீவ்ஸ் முழு வீச்சில் பயிற்சி எடுத்து உருவெடுத்துள்ளார் என கூறினார்.

அமேசான் டெலிவரி ஊழியர் பணி

அமேசான் டெலிவரி ஊழியர் பணி

அமேசான் டெலிவரி ஊழியர் பணியில் இருந்து ஆட்ட நாயகனாக மாறுகிறார் என்றால் எளிதான விஷயம் இல்லை எனவும் கிறிஸ் கிரீவ்ஸ் குறித்து பெருமையாக இருப்பதாகவும் மிகக் கடுமையாக உழைத்து இந்நிலைக்கு வந்ததாகவும் நிறைய தியாகம் செய்ததாகவும் ஸ்காட்லாந்து கேப்டன் கைல் கொயட்சர் குறிப்பிட்டார். அதேபோல் ஒரு மாதத்திற்கு முன்பு வரை எந்த போட்டிகளும் சரியாக விளையாடவில்லை, அசோசியட் அணிகளில் ஏணைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் எனவும் களம் வாய்ப்பு அமைந்தால் அவர்கள் அவர்களை நிரூபிப்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.

கிறிஸ் கிரீவ்ஸ்-ன் நம்பமுடியாத பயணம்

கிறிஸ் கிரீவ்ஸ்-ன் நம்பமுடியாத பயணம்

அவர்களுக்கு தேவையானது உயர்ந்த மட்டத்தில் அவர்களை வெளிப்படுத்த ஒரு தளம் என மீண்டும் வலியுறுத்தினார். ஐசிசி போட்டியல் ஸ்காட்லாந்து முதன்முறையாக டெஸ்ட் விளையாடும் அணியாகவே இருந்தது. டி20 உலகக் கோப்பைக்கான கிறிஸ் கிரீவ்ஸ்-ன் நம்பமுடியாத பயணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். 31 வயதான அவர் கிரிக்கெட்டின் மிக உயர்ந்த நிலைக்கு வருவதற்கு ஏணைய தியாகங்களை செய்திருக்கிறார்.

உண்மையில் ஏணைய தியாகம்

உண்மையில் ஏணைய தியாகம்

கிரீவ்ஸ் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் எனவும் அவர் உண்மையில் நிறைய தியாகம் செய்தார் எனவும் அவர் அமேசானுக்கு பார்சல் டெலிவரி செய்து கொண்டிருந்தார் எனவும் குறிப்பிட்டார். பேட் மூலம் அவர்கள் காண்பித்த மார்க் வாட் மற்றும் கிறிஸ் கிரீவ்ஸ் ஆகியோரின் செயல்திறனை பார்த்தால் அவர்கள் இந்த இடத்திற்கு செல்ல தியாகம் செய்ய வேண்டியிருந்தது என குறிப்பிட்டார்.

ஸ்காட்லாந்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்

ஸ்காட்லாந்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்

கிரீவ்ஸ் ஸ்காட்லாந்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் அல்ல எனவும் அவர் விளிம்பில் இருந்தால் எனவும் மிக கடினமாக உழைத்து தன்னை தக்க வைத்துக் கொண்டார் எனவும் குறிப்பிட்டார். இந்த வெற்றியை எங்களால் அடைய முடியும் என தாங்கள் நம்பியதாகவும் வங்காளதேசத்தை வென்றது சிறப்பு உணர்வு எனவும் நீண்ட காலமாக இந்த போட்டிக்கு திட்டமிட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

ஸ்காட்லாந்து அணி வெற்றி

இந்த ஆட்டத்தில் பேக் செய்த ஸ்காட்லாந்து அணி 53 ரன்கள் மட்டுமே 6 விக்கெட்களை இழந்தது. அடுத்ததாக களம் இறங்கிய கிறிஸ் கிரீவ்ஸ் 28 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி அடித்து 45 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து அதிரடியை காண்பித்த ஸ்காட்லாந்து அணி 140 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 18 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. வங்கதேசம் அணி 65 ரன்களில் இருந்த போது பந்து வீச வந்த கிறிஸ் கிரீவ்ஸ் அதிரடியாக பவுளிங் செய்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் வங்கதேசம் அணி 134 ரன்கள் தோல்வியை தழுவியது. வங்கதேசம் அணி ஸ்காட்லாந்திடம் தோல்வி அடைந்தது அந்நாட்டவர்களுக்கு மட்டுமின்றி பலரும் ஆச்சரியத்தை அளித்தது என்றே கூறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Delivery man to t20 World Cup 2021 Cricket Player: Allrounder Chris Greaves

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X