காய்கறி கடைக்காரரிடம் கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கிய இளைஞர்.! அமேசானால் சிக்கிய சுவாரஸ்சியம்.!

போலீசார் வைத்த பொறியில் அப்பாவி போல் சென்ற அந்த ஏமாற்று பேர் வலி இளைஞர் தானே வலி வந்து சிக்கி கொண்டார். இந்த நடந்த சம்பவம் தற்போது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

|

எஸ்பிஐ வங்கியிருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்ட்டில் பணம் மோசடி செய்து, அமேசானில் பொருள் வாங்கிய நபரை போலீசார் அவருடைய பாணியிலியே சென்று மடக்கி பிடித்தனர்.

காய்கறி கடைக்காரரிடம்  கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கிய இளைஞர்.!

போலீசார் வைத்த பொறியில் அப்பாவி போல் சென்ற அந்த ஏமாற்று பேர் வலி இளைஞர் தானே வலி வந்து சிக்கி கொண்டார். இந்த நடந்த சம்பவம் தற்போது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காய்கறி கடைக்காரர்:

காய்கறி கடைக்காரர்:

காஞ்சிபுரம் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்து இருப்பவர் ஹரிகிருஷ்ணன் (47). இவர் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) கடன் அட்டை வைத்து பயன்படுத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த கடந்த மாதம் 17ம் தேதி ஹரி கிருஷ்ணணுக்கு போனில் அழைப்பு வந்துள்ளது.

இதில் எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாக ஒருவர் கூறியுள்ளார். கடன் அட்டை காலவதியாகி விட்டது என்று கூறியுள்ளார். இதை புதுப்பித்து தருவதாகவும் அந்த மர்ம நபர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, கிரெட்டிட் கார்டு எண், சிவிவி எண், செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண் ஆகியவற்றை நம்பி கூறியுள்ளார் ஹரிகிருஷ்ணன்.

பணம் மாயம்:

பணம் மாயம்:

சிறிது நேரத்தில் ஹரிகிருஷ்ணன் வங்கி கணக்கில் இருந்து ரூ. 8499 பணம் எடுக்கப்பட்டதாக அவருக்கு மொபைலில் குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும் அமேசானில் ஆன்லைனில் பொருள் வாங்கப்பட்டதாகவும் எஸ்எம்ஸ் வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

போலீஸ்காரர் உறவினர்:

போலீஸ்காரர் உறவினர்:

இதுகுறித்து சென்னையில் போலீஸ்காரராக உள்ள தனது உறவினர் விஜயபிரசாத்திடம் கூறியுள்ளார். மேலும் அந்த மோசடி பேர் வழியை பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

போலீசார் வைத்த வலை:

போலீசார் வைத்த வலை:

இந்நிலையில் அந்த மோடி பேர் வழிக்கு அமேசானில் இருந்து பேசுதாக போலீகாரர் விஜயபிரசாத் அதே போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் அருகே உள்ள நடராஜபுரம் வந்தால், பார்சலை பெற்றுக் கொள்வதாகம் தெரிவித்துள்ளார். விஜயபிரசாத் சாவலாக்கம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார்களை உதவிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அட்டை பெட்டியிடன் காத்திருப்பு:

அட்டை பெட்டியிடன் காத்திருப்பு:

நடராஜபுரம் சென்ற போலீசார் அமேசான் டெலிவரி பாய் போல அட்டை பெட்டியுடன் ஒரு மணி நேரம் காத்து இருந்தனர். அப்போது, நீங்கள் தான் அமேசானில் இருந்து பார்சல் கொண்டு வந்து இருக்கின்றீர்களா என்று அப்பாவி போல் ஒரு இளைஞர் பேசியுள்ளார். அப்போது சுதாரித்து கொண்ட போலீசார் அந்த இளைஞரை லாபமாக மடக்கி பிடித்தனர்.

போலீசார் விசாரணை:

போலீசார் விசாரணை:

போலீசார் விசாணையில் சிக்கிய இளைஞர் சாவலாக்கம் அருகே உள்ள கோடிதண்டலம் பகுதியை சேந்தவர் என்றும். எஸ்பிஐ வங்கியில் கிரெடிட் கார்டு பெற்று தரும் முகவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து போலீசாரின் அறிவுரையின் பேரில் விஸ்வகாஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்று சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றது.

Best Mobiles in India

English summary
amazon delivery exposes credit card fraudster vegetable vendor : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X