என்ன நேக்கா ஆட்டையை போட பாத்தப்பா.. டெலிவரி செய்யவேண்டிய போனை அபேஸ் செய்த Amazon டெலிவரி பார்ட்னர்..

|

டெல்லியில் அமேசான் டெலிவரி பார்ட்னராக வேலை செய்து வந்த மனோஜ் என்ற 22 வயது இளைஞன், நேக்காக பொய் சொல்லி வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்படவேண்டிய ஸ்மார்ட்போனை ஆட்டையப்போட்டிருக்கிறார். நேக்காக பொய் சொல்லியும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

அமேசான் ஈ-காமர்ஸ் தளத்தில் ஆர்டர்

அமேசான் ஈ-காமர்ஸ் தளத்தில் ஆர்டர்

அமேசான் ஈ-காமர்ஸ் தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிய வாடிக்கையாளரின் மொபைல் போனை டெலிவரி செய்யாமல் ஏமாற்றியதற்காகவும், வாடிக்கையாளரின் ஸ்மார்ட்போனை வெளிநபருக்கு விற்பனை செய்ததாலும் கைது செய்யப்பட்டுள்ளார். வாடிக்கையாளர் அமேசான் தளத்தில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்து, அதற்கான கட்டணத்தையும் சலுகை விலையுடன் முன்பே செலுத்தியிருக்கிறார்.

டெலிவரி நாளிற்காகக் காத்திருந்திருந்த வாடிக்கையாளர்

டெலிவரி நாளிற்காகக் காத்திருந்திருந்த வாடிக்கையாளர்

வாடிக்கையாளரின் ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட நாளிலும் டெலிவரியாகும் என்று வழங்கப்போல் அமேசானின் மெயில் வந்துள்ளது. வாடிக்கையாளருக்கு டெலிவரி நாளிற்காகக் காத்திருந்திருக்கிறார். வாடிக்கையாளரின் பார்சல் இன்று டெலிவரி செய்யப்படும் என்று வழக்கம்போல் மெசேஜ் வந்துள்ளது.

எந்த ஆவணமும் இல்லாமல் ஆதாரில் மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது? ஈஸி வழி இதுதான்..

நேரில் சென்று பொய் சொன்ன டெலிவரி பார்ட்னர்

நேரில் சென்று பொய் சொன்ன டெலிவரி பார்ட்னர்

ஆனால், பார்சலை டெலிவரி செய்ய வந்த அமேசானின் டெலிவரி பார்ட்னர் இளைஞர், பார்சலை டெலிவரி செய்வதற்குப் பதிலாக வாடிக்கையாளரின் ஆர்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று நேரில் சென்று தெரிவித்திருக்கிறார்.

பணம் மீண்டும் கிடைக்கும் என்று நேக்கா ஒரு பொய்

பணம் மீண்டும் கிடைக்கும் என்று நேக்கா ஒரு பொய்

வாடிக்கையாளர் பணம் செலுத்தி வாங்கிய ஸ்மார்ட்போனை அந்த இளைஞர் தன்னிடம் பதுக்கிக்கொண்டு வாடிக்கையாளரிடம் ஆர்டர் ரத்து செய்யப்பட்டது, உங்களின் பணம் மீண்டும் கிடைக்கும் என்று பொய் சொல்லியிருக்கிறார். டெலிவரி பார்ட்னர் சொன்ன கட்டுக்கதையை நம்பி வீட்டுக்கு வந்த வாடிக்கையாளரின் மொபைல் எண்ணிற்குச் சிறிது நேரத்தில் பார்சல் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது என்று மெசேஜ் வந்துள்ளது.

இனி LPG சிலிண்டர் வாங்க இது கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய முறை.!

மெசேஜ்-ஐ பார்த்து ஆடிப்போன வாடிக்கையாளர்

மெசேஜ்-ஐ பார்த்து ஆடிப்போன வாடிக்கையாளர்

மெசேஜ்-ஐ பார்த்து ஆடிப்போன வாடிக்கையாளர் சந்தேகத்தின் பெயரில் அமேசான் நிறுவனத்தை அழைத்து பணத்தைக் கேட்டு புகார் அளித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் தகவல்கள், அவரின் சாதனம் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளது. ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர் டெல்லி போலீசாரிடம் புகார் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளார்.

எதற்காக இந்த திருட்டு?

எதற்காக இந்த திருட்டு?

வழக்கை விசாரித்த போலீசார் டெலிவரி பார்ட்னரின் விபரங்களைச் சேகரித்து அவரை வளைத்துப் பிடித்து விசாரித்துள்ளனர். இறுதியில் தனக்கு பணத்தேவை இருந்ததால் வாடிக்கையாளரின் போனை தனக்கு தெரிந்த நபரிடம் பணத்திற்காக விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் ஸ்மார்ட்போனை மீட்டு வாடிக்கையாளரிடம் ஒப்படைத்துவிட்டு, மனோஜை கைது செய்துவிட்டனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon delivery boy in Delhi tells customer his order was cancelled, sells off phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X