வீட்டுக்கே மது டெலிவரி செய்ய அமேசான் நிறுவனத்திற்கு அனுமதி.!

|

அமேசான் தளத்தில் மக்கள் அதிகளவு பொருட்களை வாங்குகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் தளத்திற்கு போட்டியாக இந்த அமேசான் நிறுவனம் புதிய புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது. அதன்படி மேற்கு வங்கம் மாநிலத்தின் அமேசான்,பிக்பேஸ்கட் நிறுவனங்கள் வீட்டிற்கே மது டெலிவரி செய்வதற்கு மாநில அரசிடம் அனுமதி பெற்றுள்ளன.

மது டெலிவரியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக

மேலும் இத்தனை நாட்களாக மளிகைப் பொருட்களை மட்டுமே டெலிவரி செய்துவந்த பிக்பேஸ்கட் நிறுவனம் முதல்முறையாக
மது டெலிவரியில் களமிறங்கியுள்ளது. அதேபோல அமேசான் நிறுவனமும் முதல்முறையாக மது டெலிவரியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக
தெரிகிறது.

அமல்படுத்தப்பட்டதால் மதுக்

இந்த கோரோனா பாதிப்பை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுக்கடைகள் மூடப்பட்டன. பின்பு மதுப்பிரியர்களின் கோரிக்கையை ஏற்று மது டோர் டெலிவரிக்கு மாநில அரசுகளால் திட்டமிடப்பட்டது. ஆனாலும் டோர் டெலிவரி செய்வது பற்றி பரிசீலிக்கும்படி
உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியது.

ஒப்போ ரெனோ 2எப் மற்றும் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!ஒப்போ ரெனோ 2எப் மற்றும் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

முதன்முதலாக ஜார்கண்ட் மாநிலத்தின் மது டோர்

தொடர்ந்து ஸ்விகி, ஜொமாட்டோ ஆகிய உணவு டெலிவரி நிறுவனங்கள் மது டெலிவரிக்கு முன்மொழிந்தன. பின்பு முதன்முதலாக ஜார்கண்ட் மாநிலத்தின் மது டோர் டெலிவரிக்கு அனுமதியளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒடிசா மாநிலத்திலும் அனுமதியளிக்கப்பட்டதால் ஸ்விகி, ஜொமாட்டோ நிறுவனங்கள் மது டெலிவரி மேற்கொண்டு வருகின்றன.

மது டெலிவரி செய்து

பின்பு மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, சிலிகுரி பகுதிகளில் மட்டும் மது டெலிவரி செய்ய அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்விகி, ஜொமாட்டோ நிறுவனங்கள் மது டெலிவரி செய்து வருகின்றன. இந்த நிலையில் வீட்டிற்கு மது டெலிவரி செய்ய பிக்பேஸ்கட் மற்றும் அமேசானுக்கும் தகுதி இருப்பதாக தோன்றியதால் அவ்விரு நிறுவனங்களும் மேற்கு வங்க மதுக் கழகம் (BevCo) அழைப்பு விடுத்துள்ளது.

கூகுள் பே-க்கு சிக்கலா?- உயர்நீதிமன்றத்தின் கேள்வி- ரிசர்வ் வங்கி அளித்த பதில்!கூகுள் பே-க்கு சிக்கலா?- உயர்நீதிமன்றத்தின் கேள்வி- ரிசர்வ் வங்கி அளித்த பதில்!

இதுகுறித்து அமேசான்

எனவே விரைவில் இந்த இரண்டு நிறுவனங்களுகம் மது டெலிவரியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அமேசான் சார்பில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை, இருந்தபோதிலும் பிக்பேஸ்கட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஹரி மேனன் எப்போது தொடங்குவோம் என உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் எங்கள் நிறுவனத்திற்கு இது முதல்
அனுபவம் என்று தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Amazon Gets Permission To Deliver Beer, Wines, Alcohol & Spirits In India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X