19000-த்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: அமேசான் நிறுவனம் அறிவிப்பு!

|

அமேசான் நிறுவனம் தங்களது ஊழியர்களில் சுமார் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா தாக்கம்

உலக நாடுகளில் கொரோனா தாக்கம்

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா தடுப்பின் பிரதான நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சிறுகுறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால் பொருளாதார வீழ்ச்சி, வேலையாப்பின்மை என பல இன்னல்களை உலக நாடுகள் சந்தித்து வருகிறது.

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம்

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம்

வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என பல்வேறு கட்டாய விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் டெலிவரி சேவைகள்

ஆன்லைன் டெலிவரி சேவைகள்

பொதுமக்களிடம் ஆன்லைன் டெலிவரி சேவைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி மருத்துவ பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் என பல்வேறு வகை பொருட்களும் ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது.

டெலிவரி செய்பவர்களுக்கு விதிமுறைகள்

டெலிவரி செய்பவர்களுக்கு விதிமுறைகள்

பல்வேறு விதிமுறைகளோடு ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. டெலிவரி செய்பவர்கள் மாஸ்க் அணிந்து வருவது ஒவ்வொரு நிகழ்வுக்கு இடையிலும் சாணிட்டைஸர் பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடுகளோடு செயல்பட்டு வருகின்றன.

மகிழ்ச்சியோடு படிங்க: கிராமத்துக்கு செல்போன் டவர் அமைத்துக் கொடுத்த பிரபல வில்லன் நடிகர்!மகிழ்ச்சியோடு படிங்க: கிராமத்துக்கு செல்போன் டவர் அமைத்துக் கொடுத்த பிரபல வில்லன் நடிகர்!

19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

இந்த நிலையில் அமேசான் நிறுவன ஊழியர்களில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் சமீபத்தில் ஆன்லைன் டெலிவரி அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக ஒரு லட்சம் வேலைவாய்ப்பை அறிவித்தது.

செப்டம்பர் 19 ஆம் தேதி வரை

செப்டம்பர் 19 ஆம் தேதி வரை

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் 19 ஆம் தேதி வரை அமேசானில் பணிபுரியும் முன்கள பணியாளர்கள், உணவு சந்தை பணியாளர்கள் என 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

42 சதவீதம் குறைவுதான்

42 சதவீதம் குறைவுதான்

பொதுமக்களிடம் பரவும் கொரோனா பரவலை ஒப்பிடுகையில் அமேசான் ஊழியர்களிடையே 42 சதவீதம் குறைவாகதான் பாதிப்பு இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நவம்பர் மாத வாக்கில் இருந்து நாளொன்றுக்கு 50 ஆயிரம் ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: ndtv.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Confirms Over 19000 Employees Tested Corona Positive

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X