Just In
- 5 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 5 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 6 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 6 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- News
என்னது எடிட்டா? நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார்.. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அண்ணாமலை சவால்!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
ஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை!
ஏர்டெல் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை வாங்க அமேசான் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜியோ அறிமுகத்திற்கு பிறகு தொலைத் தொடர்பு நிறுவனங்கள்
தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பிரதானமாக திகழ்ந்த ஏர்டெல், ஜியோ அறிமுகத்திற்கு பிறகு சற்று சிக்கலை சந்தித்து வருகிறது என்றே கூறலாம். ஜியோ அதன் சலுகைகள் மற்றும் திட்டங்கள் மூலம் பெரும்பாலான வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது. 5-க்கும் மேற்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் இருந்த நிலையில் ஜியோ அறிமுகத்திற்கு பிறகு ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா என்றானது.

வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் சலுகை
ஜியோ தொடர்ந்து பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறது. அதற்கு போட்டியாக பிற நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் சலுகையோடு கூடிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அதுமட்டுமின்றி இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகின்றன. இதில் வோடபோன் கடுமையான பாதிப்பில் உள்ளது.

ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக் முதலீடு
தொடர்ந்து வாடிக்கையாளர்களை அதிகரிக்கும்படியான திட்டங்களை அறிவித்து வரும் ஜியோவில், கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தேதியன்று ஜியோ நிறுவனத்தில் 9.99 விழுக்காடு பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. இதன் மூலமாக ஜியோ நிறுவனத்திற்கு சுமார் ரூ.43,574 கோடி முதலீடு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சில்வர் லேக், விஸ்டா நிறுவனம்
அதேபோல் கடந்த மே 3-ம் தேதியன்று சில்வர் லேக் நிறுவனம் 1.15விழுக்காடு பங்குகளை வாங்கியது. இதனால் ஜியோ நிறுவனத்திற்கு சுமார் ரூ.5,656 கோடி முதலீடு கிடைத்தது. அதன்பின்பு கடந்த மே 8-ம் தேதியன்று விஸ்டா நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் 2.32 விழுக்காடு பங்குகளை வாங்கியது, இதன்மூலம் ஜியோ நிறுவனத்திற்கு ரூ.11,367 கோடி முதலீடு கிடைத்தது.

அமெரிக்காவைச் சேர்ந்த கே.கே.ஆர் நிறுவனம்
இதைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான கே.கே.ஆர் 2.32% பங்குகளுக்கு ஈடான ஜியோ இயங்குதளத்தில் 11,367 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்) அறிவித்தது.

கூகுள்., வோடபோன் ஐடியாவில் முதலீடு
ஜியோவில் பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே முதலீடு செய்துள்ளது. இதனால் ஜியோ தொடர்ந்து பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் ஜியோவுடனான போட்டி நிறுவனங்கள் கேள்விக்குறியாக வரும் நிலையில், கூகுள்., வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஒரே நாளில் வோடபோன் ஐடியா பங்குகள் அதிகரித்தது. வோடபோன் ஐடியாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5 சதவீத பங்குகள்
இந்த நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை கூகுள் வாங்க உள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் இதுபோன்ற எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஐடியா வோடபோன் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பிரதான தொலைத் தொடர்பு நிறுவனமாக திகழும் பாரதி ஏர்டெல்
இந்த நிலையில் இந்தியாவின் பிரதான தொலைத் தொடர்பு நிறுவனமாக திகழும் பாரதி ஏர்டெலில் அமேசான் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான பேச்சுவார்ததை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜியோ வருகைக்கு பிறகு கடும் சவால்கள்
2015 ஆம் ஆண்டு ஜியோ வருகைக்கு பிறகு கடும் சவால்களை சந்தித்து வரும் ஏர்டெல் இப்போது வரை ஜியோவுக்கு இணையான சலுகைகளை போட்டிப் போட்டுக் கொண்டு அறிவித்துக் கொண்டே வருகிறது. ஏர்டெல் குறிப்பாக வாடிக்கையாளர்களை அதிகரிக்கச் செய்வதை விட இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதில் பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது என்றே கூறலாம்.

ஜியோவை சமாளிக்க ஏர்டெல், வோடபோன் புது வியூகங்கள்
ஜியோவுக்கான முதலீடுகள் அதிகரித்து வருகிறது இதன்படி ஜியோ இந்தியாவில் அசுர வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜியோவை சமாளிக்க ஏர்டெல், வோடபோன் புது வியூகங்கள் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில் ஏர்டெலுக்கு கைக்கோர்க்கும் விதமாக அமேசான் ஏர்டெலில் முதலீடு செய்ய உள்ளது.

ஏர்டெலில் 2 பில்லியன் டாலர் முதலீடு
இதில் சுமார் ஏர்டெலிடம் உள்ள 2 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்க அமேசான் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ஏர்டெல் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகள் ஆகும்.

ஏர்டெல் மற்றும் அமேசான் இடையே பேச்சுவார்த்தை
இதுதொடர்பாக ஏர்டெல் மற்றும் அமேசான் இடையே பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது ஆரம்பக்கட்டத்தில் மட்டுமே உள்ளது எனவும் இதுதொடர்பாக உடன்பாட்டில் மாறுபாடு ஏற்படவும் முடிவு எட்டப்படாமல் போகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 6.5 பில்லியன் டாலர் முதலீடு
இ-காமர்ஸ் நிறுவனத்தில் சுமார் 6.5 பில்லியன் டாலர் முதலீடு செய்து இந்தியாவின் சந்தையை கவர்ந்து வரும் அமேசான் தற்போது ஏர்டெல் நிறுவனத்திடம் முதலீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை ரகசியமாகவே உள்ளது.

ஏர்டெல் பங்குகள் 3.8% உயர்வு
அமேசான் ஏர்டெல் முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் இந்தியாவில் ஏர்டெல் பங்குகள் 3.8% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச்சந்தையில் ஏர்டெல் நிறுவன பங்குகள் இன்று 3.8% உயர்ந்து வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

இணையான போட்டி நிறுவனம் வேண்டும்
ஒரே நிறுவனம் மட்டும் வளர்ச்சியடைந்து பிற நிறுவனங்கள் சிக்கலை சந்திக்கும் நிலை ஏற்பட்டால் அது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிக்கலை தரும். பிரதான நிறுவனம் தரும் சலுகைகள் மட்டுமே உறுதியாகிவிடும் எனவே இணையான போட்டி நிறுவனங்கள் இருந்தால் மட்டுமே அது வாடிக்கையாளர்களுக்கு பலனளிக்கும்.
source: livemint.com
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470