எல்லா கோட்டையும் அழிங்க., முதல்ல இருந்து ஆரம்பிப்போம்- அமேசான் ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி!

|

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஆன்லைன் வகுப்புகள், வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது என்பது அவசியம். அமேசான் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாரத்தில் எத்தனை நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என்ற முடிவை அந்தந்த குழுவினரே எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கான அறிவிப்பு புதுப்பிப்பு

ஊழியர்களுக்கான அறிவிப்பு புதுப்பிப்பு

அமேசான் ஊழியர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தது 3 நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவு விடப்பட்டிருந்தது. அதேபோல் ஊழியர்கல் முன்னதாக கொடுக்கப்படும் அறிவிப்பின் அடிப்படையில் குழு நடத்தும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தது. தற்போது அந்த உத்தரவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்காக வெளியிட்ட அறிவிப்பு

வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்காக வெளியிட்ட அறிவிப்பு

அமேசான் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்காக வெளியிட்ட அறிவிப்பை புதுப்பித்து வழங்குகிறது. ஜனவரி 3, 2021 முதல் வாரத்தில் மூன்று நாட்களாவது அலுவலகத்திற்கு வர வேண்டும் என நிறுவனம் முடிவு செய்திருந்தது. உலகம் முழுவதும் வீட்டில் இருந்தே வேலை செய்வது என்பது இயல்பாக மாறி வருகிறது. அதன்படி அமேசான் நிறுவனம் குறித்த தகவல்களில் அமேசான் அனைத்து ஊழியர்களையும் ஜனவரி 2022-ன் தொடக்கத்தில் அலுவலகத்திற்கு அழைத்து வருவதில் எந்த திட்டமும் இல்லை என கீக்வயர் இணையதளத்தில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆன்டி ஜெஸி

தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆன்டி ஜெஸி

சியாட்டலை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய கூட்டு நிறுவனம் ஒரு வாரத்திற்கு ஊழியர்கள் எத்தனை நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என்பதை அந்தந்த குழு தீர்மானிக்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆன்டி ஜெஸி தெரிவித்துள்ளார்.

வாரத்திற்கு 3 நாட்கள் அலுவலகம் வர வேண்டும்

வாரத்திற்கு 3 நாட்கள் அலுவலகம் வர வேண்டும்

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி தொலைதூர வேலை கொள்கையில் ஊழியர்களுக்கு தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் எந்தந்த தினங்களுக்கு யார் அலுவலகங்களில் வந்து வேலை பார்க்க வேண்டும் என்பதை குழு முடிவு செய்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாரத்திற்கு 3 நாட்கள் ஊழியர்கள் கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் என்ற தீர்மானம் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு முழு அளவில் சேவை

வாடிக்கையாளர்களுக்கு முழு அளவில் சேவை

தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டி ஜெஸி, அமேசானில் பெரும்பாலும் தொலைதூரத்தில் வேலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பிறர் அலுவலக முறைகளில் வேலை செய்வார்கள் எனவும் குறிப்பிட்டார். எவ்வாறு ஆகினும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் முடிவுகளுக்கு வழிநடத்துவோம் என தெரிவிக்கப்படப்பட்டுள்ளது. கீக்வைர் வலைதளத்தின்படி, எங்கு வேலை செய்கிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு சேவை வழங்குகிறோம் என்பதை வைத்தே அனைவரும் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஊழியர்கள் எங்கிருந்து வேலை பார்ப்பார்கள் என்பதை அந்தந்த குழு தலைவர் அறிவிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நிர்வாக தலைவரான ஜெஃப் பெசோஸ்

நிர்வாக தலைவரான ஜெஃப் பெசோஸ்

அமேசான் சிஇஓ-வாக ஆன்டி ஜெஸி பதவி ஏற்றார். இவர் 1997 ஆம் ஆண்டு அமேசானில் இணைந்தார். தனக்கு ஏணைய ஆற்றல் இருக்கிறது. டே ஒன் ஃபண்ட், தி பெசாஸ் எர்த் ஃபண்ட் போன்ற சில விஷயங்களில் ஈடுபட வேண்டிய நேரம் இது. ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பு இது இல்லை எனவும் நிர்வாக தலைவராக ஜெஃப் பெசோஸ் குறிப்பிட்டார்.

அடுத்த ஜனவரி வரை திறப்பதாக இல்லை

அடுத்த ஜனவரி வரை திறப்பதாக இல்லை

அதேபோல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அடுத்த ஜனவரி வரை திறப்பதாக இல்லை என நிறுவனம் தரப்பில் தெரிவிக்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் கொரோனா காலக்கட்டத்தை தொடர்ந்து நமது வேலைகளை நாம் புதிய வழியில் தொடர வேண்டியதிருப்பதாக நிறுவனம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் அமெரிக்காவில் பல மாகாணங்களில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஒரு விருப்பத்தை திறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon CEO Message to Employees: Amazon Update its Work From Home Policy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X