Home
News

எங்கிருந்தாலும் நல்லா இருமா- மறுமணம் செய்து கொண்ட அமேசான் சிஇஓ முன்னாள் மனைவி: அவர் சொன்ன ஒரே வார்த்தை!

அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கன்ஸி ஸ்காட் சியாட்டிலை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான டான் ஜூவெட் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ்

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கன்ஸி ஸ்காட் சியாட்டிலை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான டான் ஜூவெட் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கடந்த 1993 ஆம் ஆண்டு மெக்கன்ஸி ஸ்காட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்து கொண்ட அடுத்த ஆண்டு இருவரும் இணைந்து அமேசான் நிறுவனத்தை தொடங்கினர். அமேசான் ஆரம்ப கட்டத்தின் ஊழியர் குழுவில் மெக்கன்ஸியும் ஒருவராக இருந்தார்.

ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்ஸி ஸ்காட்

ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்ஸி ஸ்காட்

பின் அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்ஸி ஸ்காட் ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டில் தங்கள் உறவை முடித்துக் கொள்ள முடிவு செய்து விவாகரத்து செய்து கொண்டனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் இருவரும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை எடுத்தனர்.

விவாகரத்து பெற்ற மெக்கன்ஸி

விவாகரத்து பெற்ற மெக்கன்ஸி

இருவரும் ஒருமித்த முடிவு எடுத்து விவாகரத்து பெற்ற பிறகு அமேசான் பங்குகளில் 25 சதவீத அளவை மெக்கன்ஸிக்கு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அளித்தார். இதையடுத்து மெக்கன்ஸி உலகின் 21 ஆவது பணக்காரராக உருவெடுத்தார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸிடம் இருந்து விவாகரத்து பெற்ற மெக்கன்ஸி தற்போது மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

மறுமணம் செய்து கொண்ட மெக்கன்ஸி

மறுமணம் செய்து கொண்ட மெக்கன்ஸி

உலக பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் மெக்கன்ஸி ஸ்காட் சியாட்டிலை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான டான் ஜுவெட் என்பவரை திருணம் செய்து கொண்டார். இந்த திருமண அறிவிப்பு Giving Pledge என்ற தொண்டு நிறுவனத்துக்கு எழுதிக் கொடுத்த உறுதிப்பத்திரம் வாயிலாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

டான் ஜூவெட் கருத்து

டான் ஜூவெட் கருத்து

எனது வாழ்நாளில் எனது செல்வத்தின் பெரும்பகுதியை வழங்க திட்டமிட்டுள்ளேனஅ என்று ஒரு கடிதம் எழுதுவது விந்தையாக உள்ளது எனவும் தனக்கு மிகவும் தெரிந்த தாராளமான மற்றும் கணிவான ஒருவரை நான் திருமணம் செய்து கொண்டேன் என டான் ஜூவெட் குறிப்பிட்டுள்ளார்.

சியாட்டில் வசிக்கும் மெக்கன்ஸி

சியாட்டில் வசிக்கும் மெக்கன்ஸி

53 பில்லியன் டாலர் மதிப்புள்ள மெக்கன்ஸி, 2019 ஆண்டில் கிவிங் உறுதிமொழியில் கையெழுத்திட்டபோது, தனது செல்வத்தில் பாதியை தொண்டுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளார். ஃபோர்ப்ஸ் இதுகுறித்து தெரிவிக்கையில், ஸகாட்டின் குழந்தைகள் படிக்கும் ஒரு தனியார் பள்ளியான லேக்லைட் பள்ளியில் இந்த ஜோடி சந்தித்ததாகவும், டான் அங்கு வேதியல் ஆசரியராக பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கன்ஸி 2019 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்ட பிறகு, உலகின் பணக்காரர்களில் ஒருவராக உருவெடுத்தார் மெக்கான்ஸி, அதேபோல் மெக்கான்ஸி செல்வத்தில் பாதியை ஏழைகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்தார். தற்போது டான்-ம் அவருடன் உறுதிமொழியில் இணைந்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட உறுதிமொழியில் மெக்கன்ஸி நான்கு குழந்தைகளுடன் சியாட்டில் தனது கணவருடன் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

டான் ஒரு சிறந்த மனிதர்., வாழ்த்துகள்

டான் ஒரு சிறந்த மனிதர்., வாழ்த்துகள்

அதேபோல் தனது முன்னாள் மனைவி மறுமணம் குறித்து அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் கூறியதாக அமேசான செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், மெக்கன்ஸி திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் டான் ஒரு சிறந்த மனிதர் எனவும் இருவரும் திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் கூறியதாக தெரிவித்தார்.

அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ ஆன்டி ஜெஸி

அமேசான் நிறுவனம் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இந்தநிலைியல் அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ், தனது பொறுப்பில் இருந்து விலக இருக்கிறார். அதேபோல் பெசோஸ் இடத்துக்கு அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ ஆன்டி ஜெஸி வர இருக்கிறார். 3 ஆம் காலாண்டில் இந்த பதிவி மாற்றம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ராஜினாமா

தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ராஜினாமா

1994 ஆம் ஆண்டு ஜெப் பெசோஸ் இதை புத்தகம் விற்பனை மையமாகவே தொடங்கினார். தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்தாலும் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்கும் ஆன்டி ஜெஸி

புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்கும் ஆன்டி ஜெஸி

அமேசான் வெப் சர்வீசை தொடங்கி கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் கிளவுட் பிளாட்பார்மாக உருவாக்கியவர் தற்போது புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்கும் ஆன்டி ஜெஸிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1997 ஆம் ஆண்டு அமேசானில் சேர்ந்தார்.

நிர்வாக தலைவராக அங்கம் வகிக்கும் பெசோஸ்

நிர்வாக தலைவராக அங்கம் வகிக்கும் பெசோஸ்

தனக்கு ஏணைய ஆற்றல் இருக்கிறது. டே ஒன் ஃபண்ட், தி பெசாஸ் எர்த் ஃபண்ட் போன்ற சில விஷயங்களில் ஈடுபட வேண்டிய நேரம் இது. ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பு இது இல்லை எனவும் நிர்வாக தலைவராக அமேசானில் தொடர்ந்து அங்கம் வகிப்பேன் எனவும் ஜெப் பெசோஸ் குறிப்பிட்டுள்ளார்.

Pic Courtesy: givingpledge.org

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon CEO Jeff Bezos Ex Wife Scott Marries Dan: Here the Reaction of Jeff Bezos
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X