அமேசான் நிறுவனரை பாதுகாக்க புல்லட் புரூப் கட்டிடம்

அமேசான் நிறுவனத்தின் அலுவலகம் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரில் உள்ளது.

|

அமேசான் நிறுவனத்தின் அலுவலகம் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தை முழுவதுமாக புல்லட் புரூப் கட்டிடமாக அதன் நிறுவனர் ஜெஃப் பிஜோஸ் மாற்றியுள்ளார். இதன்மூலம் ராணுவமே வந்து இந்த கட்டிடத்தை தாக்கினாலும் எந்தவித சேதமும் ஏற்படாதாம்.

அமேசான் நிறுவனரை பாதுகாக்க புல்லட் புரூப் கட்டிடம்

சமீபத்தில் ஒரு முன்னணி ஊடகம் இதுகுறித்து கூறியபோது பிஜோஸ் தனது $120 பில்லியன் சொத்துக்களை பாதுகாக்க, இந்த புல்லட் புரூப்பிற்காக $180,000 செலவு செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. அவருடைய சொத்து மதிப்பை கணக்கிடும்போது இதற்காக செலவு செய்த தொகை குறைவுதான் என்றும், பலவிதமான மிரட்டல்கள் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அமேசான் நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு $1.6 மில்லியன் தொகையை பாதுகாப்பிற்காக மட்டுமே செலவு செய்து வருகின்றது.

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

இதேபோல் ஆப்பிள் நிறுவனமும் அதன் சி.இ.ஓ டிம் குக் அவர்களை பாதுகாப்பது உள்பட பாதுகாப்பிற்கு மட்டும் $310,000 செலவு செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆரக்கிள் தனது சி.இஓ லாரி எல்லிசனை பாதுகாக்க கடந்த ஆண்டு $1.6 மில்லியன் தொகையை செலவு செய்தது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனமும் அதன் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களின் பாதுகாப்பிற்காக $20 மில்லியன் தொகையை செலவு செய்துள்ளது. சமூக வலைத்தளத்தின் ஜாம்பாவான இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு அளித்த பாதுகாப்பை விட நான்கு மடங்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியா நாடு

சவுதி அரேபியா நாடு

அமேசான் நிறுவனத்தின் பாதுகாப்பு மேலதிகாரி காவின் டி பெக்கர் என்பவர் அந்நிறுவனத்தின் பாதுகாப்பு குறித்து கூறியபோது சவுதி அரேபியா நாடு பிஜோஸ் அவர்களின் ஸ்மார்ட்போனை ஹேக் செய்து அவருடைய பர்சனல் விபரங்களை கைப்பற்றியதாகவும், அதனை மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

 வாஷிங்டன் போஸ்ட்

வாஷிங்டன் போஸ்ட்

இதுகுறித்து பிஜோஸ் நடத்தி வரும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஆதாரங்களுடன் கூடிய கட்டுரை வெளியாகியிருப்பதாகவும், அவர்களுடைய செய்தியாளர் ஜமால் என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். எங்களுடைய துப்பறியும் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் பிஜோஸ் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சவுதி அரேபியா ஹேக் செய்ததை ஆதாரபூர்வமாக கண்டுபிடித்துள்ளதாகவும் பெக்கர் குறிப்பிட்டுள்ளார்.

 மர்மமான முறையில் மரணம்

மர்மமான முறையில் மரணம்

பிஜோஸ் அவர்கள் தனது காதலியும் முன்னாள் தொலைக்காட்சி ஆங்கார் லாரன் சான்செச் அவர்களுக்கு அனுப்பிய போன் மெசேஜ் லீக் ஆனது இப்படித்தான் என்பதும் தங்களது ஆய்வில் தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சவுதி அரேபியா பத்திரிகையாளர் காசோகி கடந்த 2018ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு என்றும் கூறப்படுகிறது. ஆனால் பிஜோஸ் தகவல்களை ஹேக் செய்ததாக கூறப்படுவதை சவுதி அரேபியா மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Amazon built 'bulletproof panels' to protect Bezos: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X