சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை: அமேசான் லஞ்ச விவகாரம்- என்ன நடந்தது., எவ்வளவு தொகை?

|

அமேசான் இந்தியா அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து அதன் சட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் வழக்கறிஞர்கள், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அரசு ஊழலை எந்த விதித்திலும் சகித்துக் கொள்ளாது எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

விசாரணை நடத்த உத்தரவு

விசாரணை நடத்த உத்தரவு

அமேசான் நிறுவனமானது அதன் வர்த்தக இணைப்பில் இருக்கும் சில நிறுவனங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கறிஞர் கட்டணமாக மட்டும் சுமார் ரூ. 8,500 கோடி வரை செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தொகையானது இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்தார், இதை தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த அமேசான் நிறுவனம் உத்தரவிட்டிருக்கிறது.

சட்டக் கட்டணத்திற்கு செலவு

சட்டக் கட்டணத்திற்கு செலவு

அதேபோல் இந்திய அரசைப் பொறுத்த வரையில் அரசாங்கத்தில் எந்த விதமான ஊழலையும் சகித்துக் கொள்ள முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருக்கின்றனர். அமேசான் நிறுவனம் ரூ. 8,500 கோடிக்கு மேல் சட்டக் கட்டணத்திற்கு செலவழித்து இருக்கிறது. அமேசான் நிறுவனங்களில் பொது கணக்குகளை அதிகாரிகளை மேற்கோள் காட்டியதில் தெரிவிக்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டது குறித்து விசாரணை

குற்றம் சாட்டப்பட்டது குறித்து விசாரணை

தி மார்னிங் கான்டெக்ஸ்ட் என்ற இணையதளத்தின் அறிக்கைபடி, அமேசான் இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது குறித்து விசாரணையைத் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

இந்த அமேசான் விவகாரம் ஆனது அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்து வகையில் இருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்படியும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அகில இந்திய வர்த்தக சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.

முறையற்ற செயல்கள் குறித்த குற்றச்சாட்டு

முறையற்ற செயல்கள் குறித்த குற்றச்சாட்டு

முறையற்ற செயல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதற்கு முழுமையாக ஆராய்வதாகவும் அமேசான் தரப்பில் மேற்கொள் காட்டியிருக்கிறது. உழலை எந்த விதத்திலும் சகித்துக் கொள்ளாது எனவும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

போட்டிப்போட்டுக் கொண்டு தயாரிப்புகள்

போட்டிப்போட்டுக் கொண்டு தயாரிப்புகள்

ஆன்லைன் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தயாரிப்புகளை வெளியிட்டு விற்பனை செய்து வருகின்றன. இதில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருப்பது பிளிப்கார்ட், அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகியவை ஆகும். ஒவ்வொரு தளங்களும் தங்களது பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. கடை கடையாக ஏறி இறங்கி, பிடித்ததை தேடி அலைந்து வாங்கிய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போது மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கே கொண்டுவந்து தருகிறார்கள். அதிலும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன என்றுதான் கூறவேண்டும்.

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம்

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம்

அமேசான் நிறுவனம் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ், தனது பொறுப்பில் இருந்து விலகிறார் எனவும் பெசோஸ் இடத்துக்கு அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ ஆன்டி ஜெஸி இருக்கிறார். 1994 ஆம் ஆண்டு ஜெப் பெசோஸ் இதை புத்தகம் விற்பனை மையமாகவே தொடங்கினார். தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்தாலும் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

8000-க்கும் மேற்பட்ட நேரடி பணியாளர்கள்

8000-க்கும் மேற்பட்ட நேரடி பணியாளர்கள்

சமீபத்தில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டு 35 நகரங்களில் 8000-க்கும் மேற்பட்ட நேரடி பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டது. மேலும் இந்நிறுவனம் அதற்கான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு சலுகை தின அறிவிப்புகளை வாடிக்கையாளர்களை கவர்ந்து வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Amazon Bribery Allegations: Government Going to take Action Against Amazon Bribe Charge

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X