டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்! என்ன நடந்தது தெரியுமா?

|

அமேசான் நிறுவனம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக டிக்டாக் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தக் கோரி தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்ட சிறிது நேரத்திலேயே அமேசான் நிறுவனம் தான் விதித்த கட்டலையிலில் இருந்து பல்டி அடித்துவிட்டது. இந்த குளறுபடிக்கு உண்மை காரணம் என்ன என்று பார்க்கலாம்.

அமேசான்

அமேசான் நிறுவனம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக டிக்டாக் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தக் கோரி தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. அமேசான் அனுப்பிய மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது எனத் தெரிவித்து தனது முடிவில் உடனடி மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இதனால் அமேசான் ஊழியர்களிடையே சில நேர குளறுபடி ஏற்பட்டுள்ளது.

கட்டாயமாக மொபைலில் டிக்டாக் பயன்படுத்த வேண்டாம்

அமேசான் நிறுவனம் தந்து ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயமாக மொபைலில் டிக்டாக் பயன்படுத்த வேண்டாம், உடனே போனில் ஆப்ஸை டெலீட் செய்யுங்கள் என்று வலியுறுத்தியுள்ளது. அப்படி அவசியம் எனில் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் பிரவுசர்களில் டிக்டாக் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆனால், அலுவலக சம்மந்தப்பட்ட மெயில் உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைலில் டிக்டாக் பயனப்டுதஹ் வேண்டாம் என்று கூறியுள்ளது.

SBI ATM- முக்கிய அறிவிப்பு: 8 டூ 8., இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க இது வேணும்!SBI ATM- முக்கிய அறிவிப்பு: 8 டூ 8., இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க இது வேணும்!

தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது

அப்படி இந்த தகவலைப் பெரிதாக நினைக்காமல், ஸ்மார்ட்போனில் டிக்டாக் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு, இனி அழுகலாக ரீதியான மின்னஞ்சல்கள் தொடர்ந்து அனுப்பப்படமாட்டாது என்று அமேசான் நிறுவனம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. அமேசான் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட தகவல்களின்படி, ஊழியர்களுக்கு இந்த மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது எனக் கூறி பல்டி அடித்துவிட்டார்.

கீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள்! பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!கீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள்! பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!

கவலைகொள்ள வேண்டாம்

மேலும் டிக்டாக் விவகாரத்தில் இன்னும் அமேசான் நிறுவனம் எந்தவித முடிவையும் எடுக்கவில்லை என்றும், எந்தவித மாற்றத்தையும் மாற்றம் செய்யவில்லை என்றும் கூறியுள்ளது. இப்படி டிக்டாக் பயன்பாட்டை கண்டு அனைவரும் அஞ்சுவது ஏன் என்று டிக்டாக் நிறுவனத்திடமே கேட்டபொழுது, பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பதில் அதிக கவனம் கொண்டுள்ளோம் தேவையில்லாத கவலைகொள்ள வேண்டாம் என்று பதிலளித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Bans, Then Un-Bans TikTok From Employee Mobile Devices : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X