600 சீன பிராண்டுகளை தடை செய்த அமேசான் நிறுவனம்.! காரணம் என்ன?

|

மக்கள் அமேசான், பிளிப்கார்ட் போன்ற வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்த துவங்கி விட்டனர் என்றுதான் கூறவேண்டும். அதாவது கடை கடையாக ஏறி இறங்கி, பிடித்ததை தேடி அலைந்து வாங்கிய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போது மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் போதும் வீட்டிற்கே கொண்டுவந்து தருகிறார்கள்.

ஆன்லைனில் சில பொருட்கள் சலுகை விலையில் கிடைப்பதால் மக்கள் அதிகம் இதை

மேலும் ஆன்லைனில் சில பொருட்கள் சலுகை விலையில் கிடைப்பதால் மக்கள் அதிகம் இதை தான் விரும்புகின்றனர். அதுவும் இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட் தளங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் அமேசான் தனது வெப்சைட்டிலிருந்து சுமார் 600 சீன பிராண்டுகளை நீக்கி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

செய்யப்பட்டுள்ள சீன

மேலும் தடை செய்யப்பட்டுள்ள சீன பிராண்டுகளை சப்போர்ட் செய்த சுமார் 3000 வணிகர்களின் அக்கவுன்ட்களை அமேசான் க்ளோஸ் செய்து இருக்கிறது. குறிப்பாக போலி ரிவியூக்கள் மற்றும் பிற பாலிசி மீறல்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமேசான் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் பாக்கெட்டில் வெடித்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ் பளீர் பதில்- என்ன நடந்தது?வழக்கறிஞர் பாக்கெட்டில் வெடித்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ் பளீர் பதில்- என்ன நடந்தது?

சொல்ல வேண்டும் என்றால் தடை

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தடை செய்யப்பட்டுள்ள இந்த பிராண்ட் விற்பனையாளர்கள் ரிவ்யூகளை கொடுக்கும் வாடிக்கையளர்களுக்குபரிசு அட்டைகள் உட்பட வெகுமதிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. பின்பு இது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 'மினி' சகாப்தம் முடிவடைகிறதா? இனி அப்பிளில் மினி வெர்ஷன் கிடையாதா? என்னப்பா சொல்றீங்க?ஆப்பிள் ஐபோன் 'மினி' சகாப்தம் முடிவடைகிறதா? இனி அப்பிளில் மினி வெர்ஷன் கிடையாதா? என்னப்பா சொல்றீங்க?

டைசெய்யும்

சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் வெளியான தகவலின்படி, அமேசானின் கொள்கைகளை சில பிராண்டுகள் வேண்டுமென்றே மீறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக அமேசானின் 600 சீன பிராண்டுகளைத் தடைசெய்யும்முடிவானதும், உடனே பல சீன சிறுவனங்கள் ஈபே மற்றும் அலி எக்ஸ்பிரஸ் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அமேசானில் தடை செய்ய

ஆனாலும் அமேசானில் தடை செய்யப்பட்ட அனைத்து சீன பிராண்டுகளின் பெயர்கள் பற்றிய தகவல் இல்லை என்றாலும், அவற்றில் சில சீனாவில் மிகவும் பிரபலமானவைகள் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் Aukey Mpow, RavPower, Vava போன்ற பிராண்டுகள் நிரந்தரமாக தடைசெய்யப்பட்ட பெரிய பிராண்டுகள் என்று தகவல் வெளிவந்துள்ளது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை: அமேசான் லஞ்ச விவகாரம்- என்ன நடந்தது., எவ்வளவு தொகை?சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை: அமேசான் லஞ்ச விவகாரம்- என்ன நடந்தது., எவ்வளவு தொகை?

மக்களுக்கு சிறந்த தயாரிப்புகளையும் ம

அமேசான் நிறுவனம் மக்களுக்கு சிறந்த தயாரிப்புகளையும் மற்றும் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்க வேலை செய்கிறது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் இந்த தளத்தில் ஷாப்பிங் செய்யலாம் என அமேசான் நிறுவனம் கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart Big Billion Days Sale 2021: விற்பனையில் ரூ. 6,299 விலை முதல் சிறந்த பட்ஜெட் போன் வாங்க ரெடியா?Flipkart Big Billion Days Sale 2021: விற்பனையில் ரூ. 6,299 விலை முதல் சிறந்த பட்ஜெட் போன் வாங்க ரெடியா?

ளத்தில் ரிவியூக்கள் மற்றும்

அமேசான் தளத்தில் ரிவியூக்கள் மற்றும் நம்பகத்தன்மையை அடிப்படையாக வைத்தே சிலர் பொருட்களை வாங்குகின்றனர் என்றே கூறலாம். போலி ரிவியூக்கள் போன்றவற்றை தடுப்பதற்கு தெளிவான கொள்கைகள் எங்களிடம் உள்ளன என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கொள்கைகளை மீறுபவர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம், தடை செய்கிறோம், சட்ட நடவடிக்கைகள் எடுக்கிறோம் என அமேசான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart Big Billion Days Sale 2021: விற்பனையில் ரூ. 6,299 விலை முதல் சிறந்த பட்ஜெட் போன் வாங்க ரெடியா?Flipkart Big Billion Days Sale 2021: விற்பனையில் ரூ. 6,299 விலை முதல் சிறந்த பட்ஜெட் போன் வாங்க ரெடியா?

போலியான ரிவ்யூ உட்பட தெ

குறிப்பாக போலியான ரிவ்யூ உட்பட தெரிந்தே பலமுறை மற்றும் மீண்டும் மீண்டும் அரங்கேறிய கொள்கை மீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நலன் மற்றும் எங்கள்
உலகளாவிய விற்பனை சமூகத்தின் பெரும்பான்மையை உருவாக்கும், பின்பு நேர்மையான வணிகங்களுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம் என்று அமேசான் கூறியுள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அமேசான் கொள்கைகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon bans 600 Chinese brands What is the reason? : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X