Home
News

ஆஹா., ஆன்லைன் வகுப்பு, வேலைக்கு ஏற்ற அறிவிப்பு: முன்னணி லேப்டாப்களுக்கு சுமார் 30% தள்ளுபடி: அமேசான் அதிரடி!

கொரோனா பரவல் காரணமாக அலுவலகங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தி வருகிறது. இதற்கு இணைய சேவை, பணி சாதனங்கள் உள்ளிட்டவை பிரதானமாக இருக்கிறது. அலுவலகங்கள் மட்டுமின்றி கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கும் இணைய சேவை, சாதனங்கள் பிரதானமாக இருக்கிறது.

மடிக்கணினி விற்பனை சந்தையில் உயர்வு

மடிக்கணினி விற்பனை சந்தையில் உயர்வு

மடிக்கணினி விற்பனை சந்தையில் உயர்ந்து வருகிறது. கொரோனா விளைவாக கேட்ஜெட்ஸ்களின் விற்பனை சந்தையில் கணிசமாக வளர்ந்து வருகிறது என்றே கூறலாம். இந்த நிலையில் அமேசான் சிறந்த விலையில் மடிக்கணினி பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இங்கே பட்டியலிடப்பட்ட மடிக்கணினிகளை சிறந்த தள்ளுபடி விலையில் பெறலாம்.

முன்னணி பிராண்ட்களுக்கு தள்ளுபடி

முன்னணி பிராண்ட்களுக்கு தள்ளுபடி

அமேசானில் ஆப்பிள், டெல் மற்றும் ஹெச்பி போன்ற முன்னணி பிராண்ட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் மேக்புக் ப்ரோ அமேசானில் 18% தள்ளுபடியில் கிடைக்கிறது. தற்போது ஆப்பிள் மேக்புக் ப்ரோவை அமேசானில் ரூ.96,990-க்கு பெறலாம். அதுமட்டுமின்றி ஹெச்பி பெவிலியன் சாதனம் ரூ.49,990 மற்றும் ஆசஸ் விவோபுக் 14 (2020) சாதனம் ரூ.23,990 என்ற விலையிலும் கிடைக்கின்றன. அமேசானில் கிடைக்கும் அனைத்து மடிக்கணினிகள் மற்றும் அதன் சமீபத்திய விலைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

டெல் இன்ஸ்பிரான் 3501 லேப்டாப்

டெல் இன்ஸ்பிரான் 3501 லேப்டாப்

டெல் இன்ஸ்பிரான் 3501 லேப்டாப் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 15.6 இன்ச் (39.62 செமீ) அளவில் கிடைக்கிறது. அதேபோல் இது முழு எச்டி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. டெல் இன்ஸ்பிரான் 3501 லேப்டாப் ஆனது அமேசான் தளத்தில் ரூ.51,990-க்கு கிடைக்கிறது. 9% தள்ளுபடி இந்த லேப்டாப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் சுமார் ரூ.5,135 விலை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

லெனோவா திங்க்பேட் இ14 (2021)

லெனோவா திங்க்பேட் இ14 (2021)

லெனோவா திங்க்பேட் இ14 (2021)., இந்த லெனோவா திங்க்பேட் இ14 லேப்டாப் 22% தள்ளுபடி விலையில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ஆனது அமேசான் அறிவிப்பில் ரூ.49,990 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் முந்தைய விலை ரூ.64,038-க்கு விற்கப்பட்டது., இந்த தள்ளுபடி விற்பனையில் லேப்டாப் ரூ.49,990-க்கு கிடைக்கிறது. இதன்மூலம் லேப்டாப் சுமார் ரூ.14,048 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் மேக்புக் ப்ரோ

ஆப்பிள் மேக்புக் ப்ரோ

ஆப்பிள் மேக்புக் ப்ரோ சாதனமானது சிறந்த தள்ளுபடி விலையில் அமேசானில் கிடைக்கிறது. ஆப்பிள் மேக்புக் ப்ரோ அமேசான் தளத்தில் 18% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் முன்னதாக ரூ.1,17,900 என விற்கப்பட்டது. தற்போது இந்த லேப்டாப் ஆனது சுமார் ரூ.96,990-க்கு விற்கப்படுகிறது. அதாவது இந்த லேப்டாப்புக்கு ரூ.20,910 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எம்ஐ நோட்புக் ஹரிஜான் எடிஷன் 14 இன்டெல் கோர் ஐ5- 10210யூ

எம்ஐ நோட்புக் ஹரிஜான் எடிஷன் 14 இன்டெல் கோர் ஐ5- 10210யூ

எம்ஐ நோட்புக் ஹரிஜான் எடிஷன் 14 லேப்டாப்புக்கு அமேசானில் 19% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஐ நோட்புக் ஹரிஜான் எடிஷன் 14 இன்டெல் கோர் ஐ5- 10210யூ லேப்டாப் முந்தைய விலை ரூ.61,498 ஆக இருந்தது. தற்போது ரூ.11,499 விலை குறைக்கப்பட்டு வெறும் ரூ.49,999-க்கு விற்கப்படுகிறது.

ஆசஸ் விவோபுக் 14 (2020)

ஆசஸ் விவோபுக் 14 (2020)

ஆசஸ் விவோபுக் 14 லேப்டாப் அமேசான் தளத்தில் 25% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் முன்னதாக ரூ.31,990-க்கு விற்கப்பட்டது. தற்போது சுமார் ரூ.8000 விலைக்குறைக்கப்பட்டு இந்த லேப்டாப் ரூ.23,990-க்கு விற்கப்படுகிறது.

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம்

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம்

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 10th ஜென் இன்டெல் கோர் ஐ3 லேப்டாப்புக்கு அமேசானில் 25% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 10th ஜென் இன்டெல் கோர் ஐ3 லேப்டாப்பானது சுமார் ரூ.43,790-க்கு விற்கப்பட்டது. இந்த லேப்டாப்புக்கு ரூ.10,800 விலைக்குறைக்கப்பட்டு தற்போது ரூ.32,990-க்கு கிடைக்கிறது.

எச்பி பெவிலியன் எக்ஸ்360 லேப்டாப்

எச்பி பெவிலியன் எக்ஸ்360 லேப்டாப்

எச்பி பெவிலியன் எக்ஸ்360 லேப்டாப் அமேசாந் தளத்தில் 18% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் முன்னதாக ரூ.60,840-க்கு விற்கப்பட்டது. தற்போது எச்பி பெவிலியன் எக்ஸ்360 லேப்டாப்புக்கு ரூ.10,850 விலைக்குறைக்கப்பட்டு ரூ.49,990-க்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Amazon Announced Upto 30% Off on Laptops: Apple, Dell, Hp and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X