Home
News

இந்தியாவுக்கு 100 ஐசியூ வெண்டிலேட்டர் கொடுக்குறோம்: அமேசான் அறிவிப்பு

அமேசான் நிறுவனம் 100 ஐசியூ வெண்டிலேட்டர் யூனிட்களை இந்திய அரசுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சாதனங்கள் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் அனுப்பப்படும் எனவும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனை பற்றாக்குறையை தணிக்கும் முயற்சியாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு 100 ஐசியூ வெண்டிலேட்டர் கொடுக்குறோம்: அமேசான் அறிவிப்பு

மெட்ரானிக் நிறுவனத்தின் பிபி980 யூனிட் கையிருப்பு இல்லாத காரணத்தால் அதன் 100 யூனிட்டுகள் அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது. யூனிட்கள் அவரச தேவை இருக்கும் மருத்துவமனைகள் அரசால் கண்டறியப்பட்டு வழங்கப்படும்.

கோவிட்-19 இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய மருத்துவமனைகளுக்கு மருத்துவ கட்டமைப்புகள் கிடைப்பதை உறுதி செய்கிறது. அமேசான் மட்டுமின்றி பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தியாவுக்கு உதவ முன்வந்திருக்கின்றனர்.

இந்தியாவுக்கு 100 ஐசியூ வெண்டிலேட்டர் கொடுக்குறோம்: அமேசான் அறிவிப்பு

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் மருத்துவ கட்டமைப்பு சரிந்து வருகிறது. மருத்துவ பற்றாக்குறைகள் ஏற்பட்டு வருகிறது. சியோமி, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள் சுமைகளை குறைக்கும் வகையில் உதவ முன்வந்திருக்கிறது.

கோவிட்-19 அவசரநிலைகளை எதிர்கொண்டு டுவிட்டரில் உதவி கோரும் பட்சத்தில் அந்த முறையீடுகளை நிவர்த்தி செய்ய ஒன்பிளஸ் ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதேபோல் சியோமி நிறுவனம் ரூ.3 கோடி நிவாரண தொகை அறிவித்திருக்கிறது.

மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தொடர்ந்து 1000-த்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வாங்குவதற்கு ரூ.3 கோடி நிதியுதவி வழங்குவதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. தேவைப்படும் இடங்களில் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு அல்லது மாநில அரசுகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியச் சந்தையில் ஆடியோ சாதனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் மிக முக்கியமான நிறுவனமான boAt நிறுவனம், மருத்துவமனைகளுக்கு உயர்தர ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வாங்குவதற்காக ரூ. 50 லட்சம் நன்கொடை அளித்துள்ளது. இது கோவிட்-19 மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் திறனை அதிகரிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலைமை மிகவும் மோசமடைந்து வருவது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைதெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் கொரோனா நிதியாக 135 கோடி ரூபாயை இந்தியாவிற்கும், யூனிசெப்புக்கும் வழங்குவதாக சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். அதிலும் தொற்று அபாயம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon Announced to Donate 100 ICU Ventilator Units to India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X