ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!

|

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோர்ட் சிஇ 2, சிஇ 2 லைட், நோர்ட் 2 மற்றும் பேக் மேன் பதிப்பு உள்ளிட்ட பல ஒன்பிளஸ் நோர்ட் தொடர் போன்கள் இந்தியாவில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 மற்றும் சிஇ 2 லைட் ஆகிய இரண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்ட்களுக்கு ரூ.1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றன. அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் 2 மற்றும் நோர்ட் 2 எக்ஸ் பேக் மேன் பதிப்பு ஆகிய இரண்டையும் ரூ.6000 வரை கூப்பன் தள்ளுபடியுடன் வாங்கலாம். புதிய விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

தள்ளுபடி விலையில் ஒன்பிளஸ் சாதனம்

தள்ளுபடி விலையில் ஒன்பிளஸ் சாதனம்

தள்ளுபடி விலையில் ஒன்பிளஸ் சாதனம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு அமேசான் இந்தியா தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் தொடர்களை வாங்கலாம். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 மற்றும் சிஇ 2 லைட் ஆகிய இரண்டு சாதனங்களையும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களை பயன்படுத்தி வாங்கலாம். ரூ.1500 தள்ளுபடியோடு இந்த சாதனத்தை வாங்கலாம். ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனுக்கு அமேசான கூப்பன் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த சாதனத்துக்கு ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் 2 எக்ஸ் பேக் மேன் பதிப்பு சாதனத்துக்கு ரூ.6000 வரை கூப்பன் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இருட்டில் ஒளிரும் நியான் பேக் பேனல்

இருட்டில் ஒளிரும் நியான் பேக் பேனல்

ஒன்பிளஸ் நிறுவனம் இருட்டில் ஒளிரும் நியான் பேக் பேனலுடன் கூடிய புதிய நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் PAC-MAN கேமால் ஈர்க்கப்பட்ட ஒரு கஸ்டம் தீம், UI அனிமேஷன்கள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்தில் ப்ரீ-டூ-பிளே Pac-MAN 256 கேமும் ப்ரீ-இன்ஸ்டால்டு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் பின்புறம் PAC-MAN லோகோ மற்றும் கேமில் பேக்-மேன் என்கிற கதாபாத்திரம் உட்கொள்ளும் சிறிய புள்ளிகளையும் காண முடிகிறது. அதேபோல் இந்த சாதனத்தின் பேக் பேனல் இருட்டில் ஒளிரவும் செய்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன்

ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன்

ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன் ஆனது 6.4-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் எச்டிஆர் பிளஸ் ஆதரவு, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் மாடலின் பின்புறம் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர நைட்ஸ்கேப் அல்ட்ரா மோட்,போர்ட்ரெயிட் மோட், நைட் போர்ட்ரெயிட் மோட், டூயல் வியூ வீடியோ, 4கே வீடியோ பதிவு ஆதரவு என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 அம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் 2 அம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பொருத்தவரை இது 6.43' இன்ச் எப்.எச்.டி. பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 8 ஜிபி மற்றும் 128 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் மாடலாக வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 உடன் இயங்கும் ஆக்சிஜன் ஓஎஸ் உடன் செயல்படுகிறது. 50 எம்பி பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 2-மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 32 எம்பி செல்பி கேமரா போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இது 4500 எம்.ஏ.எச். பேட்டரி உடன் வார்ப் சார்ஜ் 65 ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Announced Huge Discount on Oneplus Nord Smartphone include Nord 2, Nord Ce 2 Lite and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X