போடு.. தகிட திகிட.. இப்படி ஒரு சலுகைக்காக தானே காத்துக்கிடந்தோம்.. மிஸ் பண்ணிடாதீங்க..
ஆன்லைன் வர்த்தக வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) மற்றும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் சேல் (Flipkart Big Billion Days Sale) அக்டோபர் 8ம் தேதி ஆரம்பமாக இருக்கும் நிலையில் அவ்விரண்டு தளங்களும் பேங்க் ஆஃபர் மற்றும் தள்ளுபடி தொடர்பான தகவல்களைத் தற்போது வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன்கள், தொலைக்காட்சிகள், கம்ப்யூட்டர், வயர்லெஸ் இயர் போன் போன்ற மின்னணு பொருட்களுக்கு இரண்டு இ-காமர்ஸ் (e-Commerce) தளங்களும் பெரிய சலுகை மற்றும் தள்ளுபடிகள் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேல் ஆரம்பமாவதற்கு முன்னரே அமேசானின் கிக் ஸ்டார்டர் டீல்ஸ் (Kickstarter Deals) மற்றும் பிளிப்கார்ட்டின் சேல்ஸ் லைவ் ப்ரோமோஷன் (Sales live Promotion) ஆகியவற்றில் தள்ளுபடிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

ஆரம்பக் காலத்தில் இந்த மாதிரியான தள்ளுபடிகளில் பொருட்கள் அதன் எம்ஆர்பி விலையை விட மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும். ஆனால் சமீப காலமாக இது போன்ற இ-காமர்ஸ் தளங்கள் வங்கிகளுடன் ஒப்பந்தம் வைத்துக் கொண்டு சில வங்கிகளின் டெபிட் (Debit) அல்லது கிரெடிட் (Credit) கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக சிறப்புத் தள்ளுபடிகளும் வழங்கி வருகின்றன.
இந்தக் கூடுதல் தள்ளுபடியை பெற விரும்புபவர்கள் சேல் ஆரம்பமாவதற்கு முன்னர் அந்தந்த வங்கிகளுக்கு சென்று ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஆக்டிவேட் (Activate) செய்து வைத்துக் கொண்டால் பெரும் தொகையைச் சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
எந்தெந்த வங்கிகள் amazon மற்றும் பிளிப்கார்ட் உடன் கைகோர்த்துள்ளது என்றும், உங்கள் வங்கிகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பது பற்றியும் வாங்க பார்க்கலாம்
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளில் 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது மட்டுமின்றி ஸ்மார்ட் போன் மாதிரியான மின்னணு சாதனங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் (exchange) மூலம் கூடுதல் தள்ளுபடிகளையும் பெற முடியுமாம். அதே போல, ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் ஆக்சிஸ் பேங்க் (Axis Bank), கோடக் பேங்க் (Kotak Bank), ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) ஆகியவற்றின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசானை போலவே ஃப்ளிப்கார்ட் தளத்திலும் எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் அது போன்ற மின்னணு சாதனங்களை மேலும் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும். கூடுதலாக பிளிப்கார்ட் தளத்தில் பொருட்கள் வாங்கும் பொழுது கிடைக்கும் சூப்பர் காயின்களை (Super Coins) வைத்து உங்களது அடுத்த வர்த்தகத்தில் பொருட்களை குறைவான விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
எப்போதும் போல அமேசான் பிரைம் மற்றும் பிளிப்கார்ட் பிளஸ் சந்தாதாரர்களுக்கு கூடுதல் சலுகைகள் இம்முறையும் கிடைக்கும். பொதுமக்களுக்கு கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 சேல் ஆரம்பிப்பதற்கு முன்பே, அதாவது அக்டோபர் 7ம் தேதி நள்ளிரவில், அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் தங்களது பிரைம் கணக்கு மூலம் சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும். ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் சந்தாதாரர்களுக்கும் இதுபோன்ற நன்மைகள் கிடைக்கும்.
இன்னும் எதுக்காக வெயிட் பண்றீங்க உடனடியாக போய் அமேசான் பிரைம் மற்றும் பிளிப்கார்ட் பிளஸ் கணக்கை ஆரம்பித்து பணத்தை சேமியுங்கள்.*


Click it and Unblock the Notifications








