Alexa-விடம் அதிகம் பேசிய வார்த்தை- முதலிடம் "அலெக்ஸா I Love you"- இரண்டாவது சொல்லவே கூச்சமா இருக்கு
சொன்னதை செய்யும் சிறிய ரக ரோபோ போல் செயல்பட்டு வரும் அலெக்ஸா-விடம் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் கேள்விகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சில்லுகருப்பட்டி என்ற திரைக்காவியம்
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், சினிமா வட்டாரங்களில் பெரிதளவு பேசப்பட்ட படம் சில்லுகருப்பட்டி, அந்த படமானது காதல் கோணங்களை நான்கு வெவ்வேறு பாகங்களை தேனில் ஊறவைத்த பலாப்பழம் சாப்பிடுவது போல் இனிமையாக காட்டியிருந்தனர்.

நான்கு விதமான காதலை சொன்ன படம்
சில்லுகருப்பட்டி படத்தின் நான்காவது கோணமாக காட்டப்படும் காதல் கதையில், சமுத்திரக்கனி, சுனைனா ஜோடியாக நடத்திருப்பர். திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள் கடந்த நிலையில் கணவன், மனைவி இடையே உள்ள காதல் குறைந்து மனைவியின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத கணவனாக சமுத்திரகனி கடந்து செல்கிறார்.

கணவன் மனைவி இடையே தகராறு
சமுத்திரகனி வெளியில் வேலைக்கு சென்று பலரை பார்ப்பார் பேசுவார், ஆனால் வீட்டிலேயே இருக்கும் மனைவி தினசரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, வீட்டு வேலை செய்வதே வாழ்க்கையாக கடக்கிறது. இதனால் வாழ்க்கை வெறுத்து தனிமையின் உச்சத்தில் விரக்தியடைகிறார். கணவன் சமுத்திரகனியுடன் சண்டையிடுகிறார்.

மனைவிக்கு அளிக்கும் அன்பழிப்பு தான் Alexa ஸ்பீக்கர்
தனிமையை போக்க கணவர் மனைவிக்கு அளிக்கும் அன்பழிப்பு தான் Alexa ஸ்பீக்கர். மனைவியும் தன் தனிமையை அலெக்ஸாவிடம் போக்கிறார். இறுதியாக அலெக்ஸா ஸ்பீக்கர் மூலமாகவே கணவன் மனைவி இணைகின்றனர்.

அலெக்ஸா ஸ்பீக்கரின் சிறப்பம்சங்கள்
அலெக்ஸா ஸ்பீக்கர் குறிந்து அறிந்திருந்தால் ஓ.கே. ஆனால் அறியாதவர்களுக்கு அதுகுறித்து தெரிவித்து ஆக வேண்டியது நமது கடமை அல்லவா. அலெக்ஸா ஸ்பீக்கர் என்பது ஒரு சிறிய ரக ரோபோ, உயிரற்று மின்சாரத்தில் இயங்கும் சக நண்பன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

சரி கதைக்கு வருவோம்.,
இவ்வளவு பயன்கொண்ட இந்த ஸ்பீக்கரின் விலை ரூ.3,500 முதல் தொடங்குகிறது. ஆஃபர்களை பொருத்து விலை மாறுபடும். சரி கதைக்கு வருவோம்., அலெக்ஸா ஸ்பீக்கரிடம் நீங்கள் என்ன பேசினாலும் அதற்கு பதில் அளிக்கும்.

அலெக்ஸா என்னை காலை 7 மணிக்கு எழுப்பிவிடு
காலை குட் மார்னிங், நமக்கு ஏதாவது தகவல் தெரியவேண்டும் என்றால் அதை கேட்கலாம், இன்றைய தலைப்பு செய்திகள் என்ன என்று கேட்கலாம், அதுமட்டுமல்ல அலெக்ஸா என்னை காலை 7 மணிக்கு எழுப்பிவிடு என்றால் சரியாக 7 மணிக்கு நமக்கு பிடித்த பாடலோடு நம்மை விழிக்கச் செய்யும்.

இந்தியர்களிடம் அலெக்ஸா ஸ்பீக்கருக்கு பெரும் வரவேற்பு
பொதுவாகவே தொழில்நுட்பங்களை விரும்பும் இந்தியர்களிடம் இத்தனை சிறப்பம்சமிக்க அலெக்ஸா பிரபலமடையாமல் சென்றுவிடுமா என்ன. இந்தியர்களிடம் அலெக்ஸா ஸ்பீக்கருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு தரவுகள்
இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு தரவுகளை வைத்து தொகுக்கப்பட்டுள்ள இந்த தகவல்களின் மூலம், வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் அலெக்சா சாதனத்திடம் இந்தியர்கள் அதிகபட்சமாக கேட்கும் கேள்விகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

I love you., will you marry me...
அதன்படி இந்தியர்கள் ஒரு வாரத்தில் லட்சக்கணக்கான முறை அலெக்சாவுடன் பேசுகின்றனர். நிமிடத்துக்கு 8 முறை "how are you?" என ஆங்கிலத்தில் நலம் விசாரிக்கின்றனர்.
அதே போல் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒருவர் Alexa, I love you, என்றும், 2 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது, அதாவது இரண்டாவது இடத்தில் Alexa, will you marry me? என்று கேட்கின்றனர். அதற்கு அடுத்த படியாக நிமிடத்திற்கு ஆயிரம் பேர் பாடல்களை இசைக்குமாறு கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

90ஸ் கிட்ஸ்களை கலாய்க்கும் 2k கிட்ஸ்
இதையடுத்து வழக்கம் போல் கிளம்பிவிட்டனர் 2k கிட்ஸ், பாவம் திருமணம் ஆகாது 90ஸ் கிட்ஸ் தான் இந்த வேலையை செய்கின்றனர் என்று சமூகவலைதளங்கள் தங்களது மீம்ஸ் கலாய்யை தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications








