பற்றி எரிந்த வீடு.. 'ஹீரோ' போல் 6 பேரின் உயிரை காப்பாற்றிய Amazon Alexa: நடந்தது என்ன?

|

அமேசானின் குரல் சேவை கருவியான அலெக்சா ஆறு பேரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றி உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், இது உண்மை தான்.

இந்த தகவலை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து அமேசான் அலெக்சாவை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப கருவிகள்..

வளர்ந்து வரும் தொழில்நுட்ப கருவிகள்..

வளர்ந்து வரும் தொழில்நுட்ப கருவிகள் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றியது என்பது இது முதல்முறையல்ல.

ஆப்பிள் சாதனங்கள் இதுபோன்ற பல நிகழ்வுகளை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக ஸ்மார்ட்வாட்ச்கள் பலரின் உயிரை காப்பாற்றியதாக செய்திகள் கேள்விப்பட்டிருப்போம்.

தற்போது இந்த பட்டியலில் அமேசான் அலெக்சா சாதனமும் இணைந்திருக்கிறது.

6 பேரையும் காப்பாற்றிய அலெக்சா..

6 பேரையும் காப்பாற்றிய அலெக்சா..

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் வசதித்து வருகின்றனர். இந்த குடும்பத்தில் நான்கு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

அமேசானின் குரல் சேவையான அலெக்சா, இந்த குடும்பத்தை சேர்ந்த 6 பேரை தான் காப்பாற்றியுள்ளது.அதுவும் வீடு முழுவதும் எரிந்த தீயில் இருந்து இந்த 6 பேரையும் அலெக்சா காப்பாற்றி இருக்கிறது.

மேரிலேண்டில் உள்ள Montgomery County Fire மற்றும் Rescue துறை, இந்த தகவலை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் மூலம் தெரிவித்துள்ளது.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 6 பேர்..

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 6 பேர்..

மேரிலேண்டில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அவர்களது வீட்டில் உறங்கியுள்ளனர். நள்ளிரவு 2 மணியளவில் திடீரென வீடு முழுவதும் தீ பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது.

உறங்கிக் கொண்டிருந்ததால் யாரும் இதை கவனிக்கவில்லை. வேகமாக தீப்பிடித்து வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்திருக்கிறது.

இந்த இடத்தில் தான் தொழில்நுட்ப கருவியான அமேசான் அலெக்சா தனது செயல்பாட்டை தொடங்கி இருக்கிறது.

எச்சரிக்கை ஒலி எழுப்பிய அலெக்சா..

எச்சரிக்கை ஒலி எழுப்பிய அலெக்சா..

வீடு முழுவதும் தீப்பிடித்து புகை மண்டலம் சூழத் தொடங்கி இருக்கிறது. இதை அமெசான் அலெக்சா உணர்ந்திருக்கிறது. உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்பி வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி உள்ளது.

அதிகமாக எச்சரிக்கை ஒலி எழுப்பியதை அடுத்து ஒலியின் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளனர். எழுந்து பார்த்த குடும்பத்தினர் பற்றி எரிந்த தீயை அதிர்ச்சியடைந்துள்ளனர். வீடு முழுவதும் புகை சூழ்ந்துள்ளது.

தக்க சமயத்தில் ஒலி எழுப்பிய அலெக்சா..

தக்க சமயத்தில் ஒலி எழுப்பிய அலெக்சா..

வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து வெளியேற இடமே இல்லாத நிலையில் வீட்டின் கேரேஜ் வழியாக குடும்பத்தினர் அனைவரும் வெளியேறி உள்ளனர்.

அலெக்சா மற்றும் வீட்டில் இருந்த புகை அலாரங்கள் இரண்டும் ஒலி எழுப்பியதாக கூறப்படுகிறது.

அலாரம் எழுப்ப சற்று தாமதமாகி இருந்தாலும் வீடு முழுவதும் புகை நிரம்பி மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிப்பு உருவாகி இருக்கும் என கூறப்படுகிறது.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தகவல்

இந்த நிகழ்வு குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதில் "அலெக்சா உயிரை காப்பாற்றியது, அதிகாலை 2 மணியளவில் வீடு தீப்பற்றி புகை பரவியது. 4 பெரியவர்கள் மற்றும் 2 சிறியவர்கள் கடுமையான புகையை எதிர்கொண்டனர். ஸ்மோக் அலாரங்கள் மற்றும் அலெக்சாவின் முன் எச்சரிக்கை காரணமாக தீயில் இருந்து ஒரு குடும்பம் பாதுகாக்கப்பட்டது." என குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரை காப்பாற்றிய அலெக்சாவுக்கு பாராட்டுகள்..

உயிரை காப்பாற்றிய அலெக்சாவுக்கு பாராட்டுகள்..

இரண்டு எலக்ட்ரிக்கல் சார்ஜர்கள் பொருத்தப்பட்டிருந்தன எனவும் ஒரு எலக்ட்ரிக் பைக் மற்றும் எலக்ட்ரிக் லான்மவர் பேட்டரி சார்ஜ் செய்த நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் எரியக்கூடிய வெப்ப மூலப் பொருட்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தான் தீப்பற்றி இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,75,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வீடு இதில் சேதமடைந்ததாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. உயிரை காப்பாற்றிய அலெக்சாவுக்கு பாராட்டுகள் வெகுவாக குவிந்து வருகிறது.

அலெக்சா எப்படி எச்சரிக்கை ஒலி எழுப்பியது?

அலெக்சா எப்படி எச்சரிக்கை ஒலி எழுப்பியது?

அமேசான் அலெக்சாவில் புகை அலாரங்கள் மற்றும் கார்பன் மோனோக்சைட் அலாரங்கள் இருக்கிறது. புகை அதிகமாக சூழும்பட்சத்தில் இது அலாரம் ஒலித்து எச்சரிக்கை எழுப்பும்.

அலெக்சாவை மொபைலுடன் இணைத்திருக்கும் பட்சத்தில் நீங்கள் வீட்டில் இல்லாதபோதும் உங்கள் மொபைலுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.

கூடுதலாக அலெக்சா கண்ணாடி உடைப்பு போன்ற ஒலிகளை கண்டறிந்தாலும் எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதுபோன்ற பல அம்சங்கள் அலெக்சாவில் இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Alexa saved the Lives of 6 Family members From Fire by Raising the Alarm

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X