Home
News

இது ஸ்பீக்கரா.? சவுண்ட் சும்மா கிழி.. Amazon எக்கோ பாப் தெரியுமா பாஸ்?

இந்திய மார்க்கெட்டில் அமேசான் (Amazon) நிறுவனம் எக்கோ பாப் (Echo Pop) என்னும் ஒரு வித்தியாசமான கேட்ஜெட்டை (Gadget) அறிமுகம் செய்துள்ளது. இந்த அமேசான் கேட்ஜெட் வெட்டி வைத்த வெங்காயம் போல இருக்கலாம். ஆனால், அது செய்யும் வேலை வியக்கத்தக்க வகையில் இருக்கும்.

இதுகுறித்த முழு விவரம் இதோ. இப்போதெல்லாம் வீட்டு உபயோக பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வரையில் ஆன்லைனில் எளிதாக கிடைக்கிறது. ஆர்டர் செய்தால், அடுத்த நாளே வீடு தேடி வந்துவிடுவதால், நம்மிடையே நேரில் சென்று வாங்கும் பழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இது ஸ்பீக்கரா.? சவுண்ட் சும்மா கிழி.. Amazon எக்கோ பாப் தெரியுமா பாஸ்?

இதனை பயன்படுத்தி மிகப்பெரும் உற்பத்தி நிறுவனங்கள் புதுப்புது டிசைன்களில் பொருள்களை களமிறக்கி எளிதாக அமேசானில் விளம்பரம் செய்து வருகின்றன. இப்போது அமேசான் நிறுவனமும் பல்வேறு ப்ராடக்ட்களை விற்பனை செய்ய தொடங்கிவிட்டது. இந்த நிறுவனத்தின் அலெக்சா (Alexa) வாய்ஸ் அசிஸ்டன்ட் மிகப்பெரும் வரவேற்பை பெற்று, விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

அதோடு, அலெக்சா தொடர்பான ஸ்பீக்கர்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இதனால் வித்தியாசமான டிசைன்களில் அமேசான் நிறுவனம் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்டுடன் கூடிய ஸ்பீக்கர்களை தொடர்ந்து அறிமுகம் செய்துவருகிறது. அந்த வரிசையில், இப்போது அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்டுடன் கூடிய எக்கோ பாப் ஸ்பீக்கரை களமிறக்கியிருக்கிறது. இதன் டிசைன் மற்றும் அம்சங்கள் வேற லெவலில் இருக்கிறது.

அமேசான் அலெக்சா பவர்ட் எக்கோ பாப் அம்சங்கள்: இதுவொரு ஃபரண்ட் பேஸிங் (Front-Facing) டிசைனில் உருவாக்கப்பட்ட சிங்கிள் ஸ்பீக்கராகும். அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. அதோடு ஏஐ (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அலெக்சா உடன் அமேசான் பிரைம் மியூசிக் (Amazon Prime Music), ஹங்கமா (Hungama), ஸ்பாட்டிபை (Spotify), ஜியோசாவன் (JioSaavn), ஆப்பிள் மியூசிக் (Apple Music) ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அதோடு ப்ளூடூத் மூலம் (Bluetooth) ஸ்மார்ட்போன், லேப்டாப் உடன் இணைத்து ஆடியோ டிவைஸாகவும் பயன்படுத்தலாம். விப்ரோ (Wipro), சிஸ்கா (Syska), சியோமி (Xiaomi) ஆகிய நிறுவனங்களின் டிவி (TV), ஏசி (AC), லைட்ஸ் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை கட்டுப்படுத்தலாம். அதாவது, அலெக்சா, "ஸ்விட்ச் ஆன் தி ஏசி" என்று கமெண்ட் செய்தால் ஏசி ஆனாகிவிடும். இப்படி பல எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை கமெண்ட் செய்து கட்டுப்படுத்த முடியும்.

அதேபோல குழந்தைகளுக்காக கதைகள் சொல்வது, விடுகதை போடுவது, ஆங்கில மொழிப் பாடங்களை எடுப்பது உள்ளிட்டவை எக்கோ பாப் ஸ்பீக்கர் மூலம் செய்துகொள்ள முடியும். கிரிக்கெட் ஸ்கோர் என்ன, வீட்டின் கரண்ட் பில் எவ்வளவு என்பதை நீங்கள் கேட்டாலே பாப் ஸ்பீக்கர் சொல்லிவிடும். இப்படி பல்வேறு அம்சங்களை பாப் ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது.

இந்த பாப் ஸ்பீக்கரின் விலையை பொறுத்த வரையில் ரூ.4999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரீன் (Green), பர்பிள் (Purple), பிளாக் (Black) மற்றும் வைட் (White) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Amazon Alexa-powered smart speakers Echo Pop launched in India Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X