இனி இறந்தவர்களுடன் பேசலாம்: அமேசான் அறிமுகம் செய்யும் அமானுஷ்ய அம்சம்- நீங்க யாருடன் பேசனும்?

|

"நினைவுகளை பாதுகாப்பதற்கான" ஒரு அம்சத்தை அமேசான் அலெக்சா பயன்பாட்டில் கொண்டுவர இருக்கிறது. நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வில் அமேசான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் "இழப்பின் வலியை அகற்ற முடியாது. நிச்சயமாக நினைவுகளை நிலைக்கச் செய்ய முடியும்" என அமேசான் இந்த பயன்பாடு குறித்து தெரிவித்துள்ளது.

அமேசானின் மெய்நிகர் உதவியாளரான அலெக்சா

அமேசானின் மெய்நிகர் உதவியாளரான அலெக்சா

இறந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசுவது என்பது முடியாத காரியம். ஆனால் அமேசானின் மெய்நிகர் உதவியாளரான அலெக்சா விரைவில் அதற்கான வழியை கொண்டுவர இருக்கிறது. அமேசான் Amazon's Re: MARS (Machine Learning, Automation, Robots and Space) மாநாட்டில், அலெக்சாவின் மூத்த துணைத் தலைவர் ரோஹித் பிரசாத் அமேசான் அலெக்சாவில் தொடங்க இருக்கும் அம்சத்தை உறுதி செய்தார். மிகவும் மிகையாக சிந்திக்க வேண்டாம் அது எப்படி சாத்தியம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

குரலை பிரதிபலிக்கும் அம்சம்

குரலை பிரதிபலிக்கும் அம்சம்

எந்த குரலையும் பிரதிபலிக்க அனுமதிக்கும் வகையிலான அம்சத்தை அலெக்சாவில் அமேசான் கொண்டுவர இருக்கிறது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான ஆடியோப் பதிவை கேட்கும் அலெக்சா அதே குரலை பிரதிபலித்து பயனர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த அம்சம் எப்படி சாத்தியமாகும்?

இந்த அம்சம் எப்படி சாத்தியமாகும்?

அமேசானின் மூத்த துணைத் தலைவரும், அலெக்சாவின் தலைமை விஞ்ஞானியுமான ரோஹித் பிரசாத் இதுகுறித்து கூறுகையில், "ஸ்டுடியோவில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான ரெக்கார்டிங் மற்றும் மணிநேரங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட உயர்தர குரலை கொண்டு இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் தற்போது நாம் சந்தேகத்துக்கு இடமில்லாத AI பொற்காலத்தில் வாழ்கிறோம். இதனால் எங்கள் கனவுகள் மற்றும் அறிவியல் புனைகதைகளை நினைவாகி வருகின்றன" என குறிப்பிட்டார்.

அமேசான் வெளியிட்ட டெமோ வீடியோ

அமேசான் வெளியிட்ட டெமோ வீடியோ

இதுகுறித்து CNBC தெரிவித்த தகவலின்படி, அமேசான் இந்த செயல்பாடு குறித்து டெமோ வீடியோ ஒன்று ஒளிபரப்பியது. அதில் "அலெக்சா, பாட்டி எனக்கு தி விஸார்ட் ஆஃப் ஓஸ் கதையை படித்து முடிக்க முடியுமா" என்று ஒரு குழந்தை கேட்கிறது. இதற்கு அலெக்சா வழக்கமான குரலில் குழந்தையின் கோரிக்கையை ஒப்புக் கொள்கிறது. தொடர்ந்து அலெக்சா அந்த குழந்தையின் இறந்த பாட்டியின் குரலை போலவே கதையை படிக்கத் தொடங்குகிறது.

எப்படி செயல்படுகிறது?

எப்படி செயல்படுகிறது?

Engadget தளத்தின் தகவல்படி., அலெக்சாவின் புதிய திறனின் மூலமாக, தனிப்பட்ட குரலின் ஒரு நிமிட ஆடியோவை பயிற்சி பெற்ற பிறகு அதே குரலின் பிரதபலிப்பை அலெக்சாவால் உருவாக்க முடியும் என அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் உருவாக்கியுள்ள தனித்துவ பேச்சுத் தொழில்நுட்பம் இதை செயல்படுத்துகிறது.

ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு

ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு

இந்த தொழில்நுட்பம் குறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பலரும் இதுகுறித்து பாராட்டும் விதமாக கருத்துகள் தெரிவித்து வந்தாலும், இந்த தொழில்நுட்பம் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படலாம் எனவும் ஒருவர் குறித்த தவறான தகவல்கள் இதன்மூலம் உருவாக்கப்படலாம் என கருத்துகளை தெரிவிக்கப்படுகின்றன.

அலெக்சா டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டென்ட்

அலெக்சா டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டென்ட்

அமேசான் இந்தியா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் இந்தியா அலெக்சா டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டென்ட்டை அறிமுகம் செய்தது. மேலும் 2019 ஆம் ஆண்டு உடன் ஒப்பிடும்போது அலெக்சாவின் பயன்பாடு 2020 ஆம் ஆண்டில் 67 சதவீதம் அதிகரித்ததாக அமேசான் தெரிவித்தது. அலாரம் வைத்துக் கொள்வது, இசை வாசிப்பது, ஸ்மார்ட் விளக்குகள் மற்றும் சாதனங்களை கட்டுபடுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இருக்கிறது. மெட்ரோ இல்லாத நகரங்களிலும் அலெக்சா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாய்ஸ் கமெண்ட் ஆதரவு

வாய்ஸ் கமெண்ட் ஆதரவு

அதேபோல் கிரிக்கெட் ஸ்கோர் நிகழ்நேர தகவல், பிரேக்கிங் செய்திகள் போன்ற பல்வேறு விஷயங்களுக்காக அறிந்து கொள்வதற்கு அலெக்சாவை தொடர்பு கொள்ளலாம். ஒரு நாளைக்கு சுமார் 19,000 முறைகள் அலெக்சா ஐ லவ் யூ எனவும் தினமும் 6000 முறை என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்பது அலெக்சாவில் அதிகமுறை பயன்படுத்திய வார்த்தையாக அமேசானின் கடைசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Source: bgr.in

Best Mobiles in India

English summary
Amazon Alexa Might Allows to Speak with your Dead Relative's Voice

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X