அமேசான் அலெக்ஸா – நாசாவின் அன்றாட வேலைகளை ஒருங்கிணைக்கும் சுட்டிப்பெண்!

“அலெக்ஸா அந்தப் பாட்டைப் போடு”, “ அலெக்ஸா உபெர்ல (Uber) கார் புக் பண்ணு” என்று நாம் வேலை வாங்கலாம். நம்முடைய குரலைப் புரிந்து கொண்டு அலெக்ஸா கொடுத்த வேலைகளைச் செய்து தருகிறது.

By GizBot Bureau
|

செயற்கை அறிவுத் தொழில் நுட்பம் உலகை ஆட்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. அது நம் வீட்டுக்குள்ளும் வந்து அமர்ந்துவிட்டது. அவற்றுள் ஒன்றுதான் அமேசான் அலெக்ஸா (Amazon Alexa), மெய்நிகர் உதவியாளன் (intelligent virtual assistant) என இதனை அழைக்கலாம். நம் வீட்டிலிருக்கும் பணிப் பெண் நம்முடைய கட்டளைகளுக்கெல்லாம் அடி பணிந்து கொடுத்த வேலைகளைச் செய்வதைப் போல, இந்த அலெக்ஸாவும் சொன்ன வேலைகளைச் செய்கிறது.

அமேசான் அலெக்ஸா – நாசாவின் அன்றாட வேலைகளை ஒருங்கிணைக்கும் சுட்டிப்பெண்

“அலெக்ஸா அந்தப் பாட்டைப் போடு”, “ அலெக்ஸா உபெர்ல (Uber) கார் புக் பண்ணு” என்று நாம் வேலை வாங்கலாம். நம்முடைய குரலைப் புரிந்து கொண்டு அலெக்ஸா கொடுத்த வேலைகளைச் செய்து தருகிறது. இப்பொழுது நாசா நிறுவனம் தன்னுடைய அன்றாடப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் அலெக்ஸாவைப் பயன்படுத்துகிறது. உள்ளீடு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அலெக்ஸா நுண்ணுணர்வுடன் செயல்படுகிறது.

“நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிக் கொள்வதைப் போல இனி இது போன்ற டிஜிட்டல் உதவியாளர்களிடம் பேசுவதும் அன்றாட வழக்கமாகிவிடும்” எனக் கூறுகிறார் நாசா நிறுவனத்தின் ஜெட் புரொபல்சன் ஆய்வகத்தின் (JPL) தகவல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் பிரிவின் முதன்மை அலுவலர், டாம் சோடர்ஸ்டார்ம்.

“நீங்கள் உங்கள் வீட்டில் அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸபீக்கர் வைத்திருந்தால் கேட்டதெல்லாம் கிடைக்கும். “ நாசா மார்ஸ் அப்ளிகேசனை செயலுக்குக் கொண்டு வா” என்றவுடன், அந்த வேலையை அது நிறைவேற்றும். பிறகு செவ்வாய் கிரகம் தொடர்பான எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அதற்குச் சரியான பதில் குரல் எழுப்பும். என்கிறார் டாம் சோடர்ஸ்டார்ம். இது சர்வர் இல்லாமல் கணித்துச் செயல்படக் கூடியது மட்டுமல்லாமல் குறைந்த செலவில் நாம் விரும்பும் முடிவுகளைத் தரக்கூடியது” என்றும் அவர் கூறுகிறார்.

“ஜெட் புரொபல்சன் ஆய்வகத்தில் (JPL) பதிவு செய்யப்பட்ட 4,00,000 துணை ஒப்பந்தங்களை ஸ்கேன் செய்து நமக்குத் தேவையான ஒரு ஒப்பந்தத்தின் நகலை கணிப்பொறித் திரைக்கு மிக விரைவாகக் கொண்டு வந்து தருகிறது”

தகவல்கள் எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனை அடைவதற்கான கடவுச் சொல் என்ன? என்பதையெல்லாம் குறித்து அலெக்ஸா கவலைப்படுவதில்லை. பதிவுகளை மிக விரைவாக ஸ்கேன் செய்து நமக்குத் தேவையானவற்றைத் தேடித் தருகிறது. அலெக்ஸா போன்ற டிஜிட்டல் உதவியாளர்களுக்குப் புரிகின்ற வகையில் நம்முடைய குரல் அமைவதுதான் சவாலானதும் முக்கியமானதும் ஆகும்.” என்றும் கூறுகிறார் டாம் சோடர்ஸ்டார்ம்.

டாம் சோடர்ஸ்டார்மின் கருத்துப்படி, பொது மக்களைச் சென்றடைவதற்கு முன்னால், தங்களுக்குள் தெளிவு ஏற்படுவதற்காக டெவலப்பர்கள் ஆறு வகையான தொழில் நுட்ப அலைகளை ( technology waves) நாடுகின்றனர்.

இவைகள், "New Habits" (like Always Connected workplace, gaming), "Applied AI" (Machine Learning, chatbots, automation, analytics); "Ubiquitous Computing" (mobile, smart devices, IoT, Augmented Reality); "Cyber Security challenges" (like Blockchain); "Accelerated Computing" (serverless, edge computing) மற்றும் "Software-Defined Everything" (Networks, DevOps, Open Source and application programming interface or APIs, etc) ஆகிய ஆறுவகையான தொழில் நுட்பங்களாகும்.

மேற்கண்ட ஆறு தொழில் நுட்பங்களில் தேவையானவற்றைச் சரியான விகிதத்தில் இணைத்துப் பயன்படுத்துவது முக்கியமானதாகும்.

ஜெட் புரொபல்சன் ஆய்வகத்தில் (JPL) அலெக்ஸா மற்றும் இணையத் தொடா்புக்கான சென்சார்களுடன் (IoT sensors) கூடிய ஒருங்கிணைந்த கூட்ட அரங்கம் உள்ளது. இதனால் கேள்விகளுக்கான பதில்களை மிக விரைவாகப் பெற முடிகிறது.

8ஜிபி ரேம் கொண்ட ஒன்ப்ளஸ் 6-ன் இந்திய விலை மற்றும் விற்பனை அறிவிப்பு.!8ஜிபி ரேம் கொண்ட ஒன்ப்ளஸ் 6-ன் இந்திய விலை மற்றும் விற்பனை அறிவிப்பு.!

NASA-JPL செயல் அதிகாரிகளின் கருத்துப்படி, “செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் (AI) வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொள்ளாது, மாறாக, மனிதர்களின் வேலைகளுக்குத் துணையாக நிற்கும்” என்கின்றனர்.

“மருத்துவத்துறை, ரீடெய்ல் மற்றும் மின் வணிகம், ஆட்டோமொபைல்ஸ், போக்குவரத்து உட்பட அனைத்துத் துறைகளிலும் செயற்கை அறிவு (AI) நுட்பம் மிகப்பெறும் மாற்றங்களைக் கொண்டு வரவிருக்கிறது. இத் தொழில் நுட்பத்திற்குத் தங்களை மாற்றிக் கொள்ளாத துறைகள் பின் தங்கிவிடும்” என டாம் சோடர்ஸ்டார்ம் எச்சரிக்கிறார்.

செயற்கை அறிவு நுட்பத்தால் இயக்கப்படும் டிஜிட்டல் உதவியாளர்கள்( digital assistants) உற்பத்தித் திறனைப் பெறுக்குவதற்கு முக்கியக் காரணியாக அமைவர்.

“மனிதர்கள் 80% திறனுடையவர்கள், இயந்திரங்கள் 80% திறனுடையவை இரண்டும் இணைந்தால் 95% அளவுக்குத் திறனை வெளிப்படுத்த முடியும்” எனவும் இவர் கூறுகிறார்.

“செயற்கை அறிவு நுட்பத்தோடு இணைந்த கருவிகளையும் இயந்திரங்களையும் இனி எங்கும் காணலாம். இதுதான் இனி வரவிருக்கின்ற தொழில் நுட்பச் சூறாவளியாக இருக்கும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது, அதனை எதிர்கொள்வதற்குத் தயாராவதைத் தவிர வேறு வழியில்லை”. என எதிர்காலத் தொழில் நுட்பம் பற்றிய விழிப்புணர்வைத் தருகிறார், டாம் சோடர்ஸ்டார்ம்

Best Mobiles in India

Read more about:
English summary
Amazon Alexa Helping NASA Organise Daily Tasks, Make Sense of Data Sets

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X