இனி தமிழ்மொழியில் அலெக்சாவுடன் பேசலாம் வாங்க.!
இப்போது அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய அமேசான் எக்கோ ஸ்பீக்கரிடம் அலெக்ஸா ஒப்பன் க்ளியோ என்று குரல் கட்டளையிட்டால் போதும்.
அமேசான் நிறுவனம் தற்சமயம் புதிய வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி மெய்நிகர் உதவியாளரான அலெக்சாவை இந்தியா வாடிக்கையாளர்கள் பல்வேறு இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக celo-என்ற தொழில்நுட்பத்தின் கீழ் இந்த அமேசான் அலெக்சாவைப் பயன்படுத்த முடியும், மேலும் இந்த அலெக்சா 2017-துவகத்தில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் ஆங்கிலம் உட்பட சில இந்திய மொழிகளில் அலெக்சாவை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
அலெக்சா பொறுத்தவரை தற்சமயம் தழிழ், இந்தி, கன்னடம், பெங்காலி, மராட்டி, குஜராத்தில, தெலுங்கு போன்ற மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்ட மொழிகளில் நீங்கள் அலெக்சாவுடன் மிக எளிமையாக பேச முடியும். மேலும் மொழிவழக்குகளின் தன்மையை அலெக்சா மிக அருமையாக அறிந்துகொள்ளும் என்று கூறப்படுகிறது.
அமேசான் எக்கோ ஸ்பீக்கர்கள் மட்டுமின்றி பல மின்னணு சாதனங்களிலும் இவ்வசதி உள்ளது. க்ளியோ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் உள்ளூர் மொழிகள் பற்றிய தகவல்கள், தரவுகள் சேகரிக்கப்பட்டு அவை அலெக்சாவை மேம்படுத்த உதவும்.

இப்போது அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய அமேசான் எக்கோ ஸ்பீக்கரிடம் அலெக்ஸா ஒப்பன் க்ளியோ என்று குரல் கட்டளையிட்டால் போதும். பின்பு ஏதேனும் ஒரு மொழியைக் கூறி அதனுடன் மிக எளிமையாக பேசமுடியும்.
நாம் சாதாரணமாக நமது நண்பர்கள், குடும்பத்தினரிடம் பேசுவது போலவே பேசி, சொற்கள், தொடர்களை அலெக்சாவிற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் இவற்றைப் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நேரடியாக உள்ளூர் ஒலிப்பு முறைகள், சொல் தேர்வுகள் போன்றவற்றை மக்களிடம் இருந்தே பெறுவது இதன் சிறப்பம்சமாகும். மேலும் செய்தி மற்றும் பல்வேறு தகவல்களை இதன் மூலம் இனி எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








