இந்தியாவில் விமானத்தை இறக்கிய Amazon: ஜெயிச்சுட்டோம் மாறா! இவ்ளோ நன்மைகள் இருக்கா?
Amazon Air முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் ஐரோப்பிய நாடுகளில் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கிறது. வணிக நோக்கத்துடன் வேகமாக டெலிவரி செய்யும் வகையில் விமான சேவையை அமேசான் அறிமுகம் செய்துள்ளது. போயிங் 737- 800 விமானம் டெலிவரி சேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது இந்திய சந்தையில் இரண்டு சரக்கு விமானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது ஒவ்வொன்றும் 20,000 பேக்கேஜ்கள் வரை கொண்டு செல்லும்.

அறிமுகமான அமேசான் ஏர் சேவை
ஆன்லைன் விற்பனை தளங்களில் முன்னணியில் இருக்கும் அமேசான், இறுதியாக இந்திய பயனர்களுக்கு அதன் டெலிவரி அனுபவத்தை மேம்படுத்துவதற்கு என விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த சரக்கு விமான நிறுவனமான "க்விக்ஜெட்" உடன் இணைந்து நாட்டில் தனது சொந்த விமான சரக்கு சேவையைத் தொடங்கி இருக்கிறது. நிறுவனத்தின் இந்த விமான சேவை மூலம் பொருட்கள் இன்னும் விரைவாக டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது நாடாக இந்தியாவில் அறிமுகம்
அமேசான் ஏர் அறிமுகமான முதல் இடம் இந்தியா அல்ல என்பது கவனிக்கத்தக்க ஒன்று. மூன்றாவது நாடாக இந்தியாவில் சரக்கு விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான்.
அமேசான் ஏர் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டாவதாக ஐரோப்பாவில் தொடங்கப்பட்டது. இந்திய சந்தையில் அமேசானின் இரண்டு சரக்கு விமானங்கள் உள்ளன. இதில் ஒவ்வொன்றும் 20,000 பேக்கேஜ்கள் வரை எடுத்து செல்லும் என டெக் க்ரஞ்ச் அறிக்கை தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்தும்
அமேசானின் வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் தலைவர் அகில் சக்சேனா இதுகுறித்து கூறுகையில், அமேசான் ஏர் முக்கியமான நேரத்தில் இந்தியாவில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அமேசான் ஏர் இல் எங்களது முதலீடு என்பது வாடிக்கையாளர்களின் டெலிவரி அனுபவத்தை மேலும் மேம்படுத்தும்.
சரக்கு விமான சேவை அறிமுகத்தின் மூலம் இந்தியாவில் 1.1 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதேபோல் இது போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து போன்ற துணை வணிகங்களின் வளர்ச்சியையும் மேம்படுத்தும் என கூறினார்.
வேகமான டெலிவரி உடன் செலவும் மிச்சம்
அமேசான் நிறுவனம் போயிங் 737-800 விமானத்தை அதன் டெலிவரி சேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த விமானங்கள் க்விக்ஜெட் கார்கோ ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்த நிறுவனத்தின் தகவல்படி, அமேசான் பிராண்டட் விமானம் ஐதராபாத், பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களுக்கு வாடிக்கையாளர்கள் ஏற்றுமதியை கொண்டு செல்லும். இந்த நடவடிக்கையானது இந்தியாவில் விரைவாக டெலிவரி சேவைகளை வழங்க உதவுவதோடு மட்டுமில்லாமல், செலவையும் மிச்சப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த மகிழ்ச்சியில் அமேசான்
அமேசான் குளோபல் ஏர் நிறுவனத்தின் துணைத் தலைவர் சாரா ரோட்ஸ் இதுகுறித்து கூறுகையில், அமேசான் ஏர் சேவையை இந்தியாவில் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். உலகின் 70 இடங்களில் அமேசான் ஏர் சேவை கிடைக்கிறது. 110க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்த சேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. அமேசான் விமான தளவாட திறன்களுக்காக நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது என தெரித்தார்.

வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
அமேசானின் இந்த சேவை மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வேகமாக டெலிவரி பெறுவார்கள். எனவே டெலிவரி செய்யும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால், தேவை இருக்கும்பட்சத்தில் வேலை வாய்ப்புகளும் தானாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆச்சரியப்பட ஒன்றுமில்லை..
அமேசான் சமீபத்தில் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அறிவித்து. இது பலருக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. காரணம் சமீப காலமாக பல முன்னணி நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கையில் களமிறங்கி இருக்கிறது.

தொழில்நுட்பத் துறையில் தொடரும் பணி நீக்கம்
கூகுள் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. மைக்ரோசாஃப்ட் அதன் பணியாளர்கள் எண்ணிக்கையை 10,000 ஆக குறைத்தது. கடந்த 6 மாதங்களாக தொழில்நுட்பத் துறையில் பணி நீக்கங்கள் என்பது தொடர் நடவடிக்கையாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








