யூட்யூப் மாயாஜாலகள் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..!!
யூட்யூப் தளத்தினை மிகவும் எளிமையாக பயன்படுத்த உதவும் சில வழி முறைகள் குறித்த தொகுப்பு தான் இது. எந்த ஒரு விஷயத்தையும் விளையாட்டாக எடுத்து கொள்ள கூடாது, என்பதை இங்கு நீங்கள் புரிந்து கொள்வீர்கள். யூட்யூப் இணையதளத்தில் உங்களுக்கு தெரியாத சில எளிய பயன்பாடுகளை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு, தப்பிக்குமா சாம்சங்..??

தள்ளாட்டம்
யூட்யூப் திரையை தள்ளாட வைக்க 'Use the force Luke' என்ற வார்த்தையை சர்ச் டேபில் டைப் செய்து க்ளிக் செய்ய வேண்டும், க்ளிக் செய்தால் நிச்சயம் வியப்படைவீர்கள்.

வித்தியாசம்
Beam me up Scotty என டைப் செய்தால் வீடியோக்கள் திரையில் அழகாக தோன்றும்.

பதிவிறக்கம்
யூட்யூப் யூஆர்எல் பகுதியில் யூட்யூப் வார்த்தைக்கு முன் 'ss' என டைப் செய்து என்டர் செய்தால் குறிப்பிட்ட வீடியோவினை எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும் https://sswww.youtube.com

சைன் இன்
சில வீடியோக்களில் உங்களது வயதினை உறுதி செய்ய யூட்யூப் தரப்பில் சைன் இன் செய்ய வேண்டும் என்ற திரை காணப்படும், இந்த நேரத்தில் யூஆர்எல் பகுதியில் WATCH என்ற வார்த்தையை மட்டும் எடுத்து விட்டு அங்கு "v=" வார்த்தைக்கு பிதல் "v/" என டைப் செய்து வீடியோவினை சைன் இன் செய்யாமலே பார்க்க முடியும்.

நிறம்
யூட்யூப் தளத்தினை பல நிறங்களில் மாற்ற 'doge meme' என டைப் செய்யுங்கள்.

ஜிஃப்
யூட்யூப் வீடியோக்களை ஜிஃப் வீடியோக்களாக மாற்ற 'gif' என டைப் செய்தால் போதுமானது.

ஷார்ட்கட்
யூட்யூப் தளத்தினை ஷார்கட் மூலம் இயக்க சில பட்டன்கள்.

ஃபார்வேர்டு
வீடியோக்களை குறிப்பிட்ட நேரத்திற்கு ஃபார்வேர்டு செய்ய யூட்யூப் யூஆர்எல் இறுதியில் "#t=" டைப் செய்து தேவையான நேரத்தினை குறிப்பிட்டால் போதுமானது. உதாரணமாக வீடியோவினை 62 நொடிகளில் இருந்து பார்க்க "#t=62s" டைப் செய்ய வேண்டும்.

கீபோர்டு
யூட்யூப் தளத்தினை முழுவதுமாக கீபோர்டு மூலம் இயக்க "/leanback" என டைப் செய்ய வேண்டும்.

ஆட்டோப்ளே
யூட்யூப் தளத்தில் ஆட்டோப்ளே ஆப்ஷனினை ஆஃப் செய்ய டிக் மார்க் இருக்கும் இடத்தில் க்ளிக் செய்தால் போதும்.


Click it and Unblock the Notifications








