வாட்ஸ்ஆப் - நீங்கள் அறிந்திராத புள்ளி விவரங்கள், இதெல்லாம் நம்பலாமா??
ஸ்மார்ட்போன் பயனாளிகளை பொருத்த வரை மிகவும் அத்தியாவசிமான குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்ஆப் கருதப்படுகின்றது. இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே இருக்கின்றது அனைவரும் அறிந்த ஒன்றே.
சமூக வலைதளங்கள் - வியப்பூட்டும் உண்மை ரகசியங்கள்!
அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியின் இன்றைய நிலையை துள்ளியமாக அறிந்து கொள்ள உதவும் சில தகவல்களை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்.

பயன்பாடு
மொத்த வாட்ஸ்ஆப் பயனாளிகளில் 72% பேர் தினமும் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர்.

உபயோகம்
ஏப்ரல் 18 ஆம் தேதி 2015 வரை வாட்ஸ்ஆப் செயலியின் மாதாந்திர பயனர்களின் எண்ணிக்கை 800 மில்லியன் ஆகும்.

பயனர்கள்
வாட்ஸ்ஆப் செயலியை 70% ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தி வருகின்றனர்.

தினசரி பயனர்கள்
வாட்ஸ்ஆப் செயலியை தினமும் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

புகைப்படம்
தினமும் சுமார் 700 மில்லியன் புகைப்படங்கள் வாட்ஸ்ஆப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

செல்பீ
இண்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளப்படும் 27% செல்பீகளுக்கு வாட்ஸ்ஆப் செயலி தான் காரணமாக இருக்கின்றது.

இந்தியா
வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருப்பதில் இந்தியர்கள் முன்னிலை வகிக்கின்றனர், வாட்ஸ்ஆப் பயனர்களில் சுமார் 10% அதிகமாக இந்தியர்கள் இருக்கின்றனர்.

வாட்ஸ்ஆப்
வாட்ஸ்ஆப் செயலியை சுமார் 23 முறை ஒருவர் சராசரியாக சரிபார்க்கின்றார்.

குறுந்தகவல்
மாதம் ஒன்றுக்கு ஒருவர் சராசரியாக சுமார் 1000 குறுந்தகவல்களை வாட்ஸ்ஆப் செயலியின் மூலம் அனுப்புகின்றார்.

வீடியோ
வாட்ஸ்ஆப் செயலியில் தினமும் சுமார் 100 மில்லியன் வீடியோக்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.


Click it and Unblock the Notifications