உங்க ஸ்மார்ட்போன் இதையும் செய்யும், நம்புங்கள்...

Posted By:

ஸ்மார்ட்போன் இன்று அனைவரது வாழ்க்கை முறை மற்றும் தகவல் பறிமாறும் முறையை முற்றிலபமாக மாற்றியமைத்திருக்கின்றது என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. இருந்து உங்களது ஸ்மார்ட்போன் மூலம் செய்ய கூடிய பல விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை, அவை எவை என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 வானிலை

வானிலை

ஆன்டிராய்டு போன்களில் இருக்கும் சில சென்சார்களை கொண்டு வானிலை அறிக்கையை அறிந்து கொள்ள முடியும்.

 செயற்கைக்கோள்கள்

செயற்கைக்கோள்கள்

சர்ரே பல்கலைகழக்கம் மற்றும் சர்ரே சாட்டிலைட் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட்போன் மூலம் சக்தியூட்டப்பட்ட "nanosatellite" நானோ சாட்டிலைட் ஒன்றை கண்டறிந்துள்ளனர், இதன் மூலம் விண்வெளியில் இருந்து தகவல்களை செயலிகளின் மூலம் பெற முடியும்.

காடுகள்

காடுகள்

இந்தோனேஷியாவில் இயங்கும் தொண்டு நிறுவனம் பழைய ஆன்டிராய்டு போன்களை கொண்டு சட்ட விரோதமாக மரம் வெட்டப்படுவதை தடுக்கின்றனர், இதற்கு ஆராய்சியாளர்களும் உதவி புரிந்து வருகின்றனர்.

 மருத்துவ ஆய்வுகள்

மருத்துவ ஆய்வுகள்

இல்லினோயிஸ் பலகலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஐபோன் க்ரேடிள் மற்றும் செயலி ஒன்றையும் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் போனின் கேமராவில் டாக்ஸின், பாக்டீரியா, வைரஸ் மற்றும் பல கருமிகளை கண்டறிய முடியும்.

 கார்

கார்

ஆஸ்திரேலியாவின் க்ரிப்பித் பல்கலைகழக மாணவர்கள் ஸ்மார்ட்போன் மூலம் கார்களை இயக்கும் ப்ரோடோ டைப் ஒனஅறை கண்டறிந்துள்ளனர்.

 இரசாயன தாக்குதல்

இரசாயன தாக்குதல்

Cell-All project என்ற திட்டத்தின் மூலம் ஸ்மார்ட்போன்களை ரசாயன தாக்குதல்களை கண்டறிய பயன்படுத்த முடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்

மொபைல் ஸ்கிரீன்களை மருத்துவர்களாக மாற்றும் திட்டத்தை கொரியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் மொபைல் ஸ்கிரீன்களை ஸ்வைப் செய்யும் போதே ப்ரோடீன் மற்றும் டிஎன்ஏ ஆகியவற்றை பதிவு செய்ய முடியும்.

குறி

குறி

இன்டெல்லோ ஸ்கோப் (Intelliscope) என்ற செயலி மூலம் துப்பாக்கியில் சுடும் போது குறி தவறாமல் பார்த்து கொள்ள முடியும்.

மெட்டல் டிடெக்டர்

மெட்டல் டிடெக்டர்

ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் மேக்னெட்டோமீட்டர்களை கொண்டு மெட்டல் டிடெக்டர்களாக பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போன்

குழந்தைகளுக்கு விளையாட்டு காண்பிக்க உங்களது போனை இப்படி பயன்படுத்தலாம், எப்படி என்று இந்த வீடியோவை பாருங்கள், கோபம் வேண்டாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Amazing things you never knew a smartphone could do. Check out here some interesting and amazing things you never knew a smartphone could do.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot