நீல திமிங்கலங்கள் பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத உண்மை! வெளிச்சத்திற்கு வந்த டிரோன் வீடியோ!

|

நீல திமிங்கிலங்கள் பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத உண்மையை நியூசிலாந்தில் ஒரு ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளது. இந்த உயிரினங்களின் உணவு சாப்பிடும் முறை மற்றும் வேட்டையாடும் முறையின் தந்திரங்கள் மற்றும் சூட்சமத்தைப் பற்றிய தகவலை ஆராய்ச்சியாளர்கள் டிரோன் வீடியோ மூலம் கண்டுபிடித்துள்ளனர். இந்த டிரோன் வீடியோ என்ன தகவல்களைப் பதிவு செய்துள்ளது என்று பார்க்கலாம்.

நீல திமிங்கிலங்கள்

நீல திமிங்கிலங்கள்

நீல திமிங்கிலங்கள் அவற்றின் வலிமையைப் பாதுகாக்க மற்றும் அதன் ஆற்றல் திறனையும் சேமித்து வைக்க, இந்த உயிரினங்கள் பெரும்பாலும் கடலின் மேற்பரப்புக்கு அருகில் தான் வேட்டையாடுகிறது என்பது தற்பொழுது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது. டிரோன் கைப்பற்றிய வீடியோவில் உள்ள மிரட்டலான காட்சியைப் பார்த்தால் உங்களுக்கே அது தெரியும்.

ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்

ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்

நியூசிலாந்தில் வசிக்கும் நீல திமிங்கிலங்கள் மேற்பரப்பு வேட்டையை அவற்றின் செயல்முறையில் ஒரு முக்கிய பகுதியாகப் பயன்படுத்துகின்றன என்பதை ஒரேகான் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து டைனோசர்களின் அளவைக் கூட மிஞ்சும் ஒரே உயிரினமாக நீல திமிங்கிலங்கள் மட்டுமே பூமியில் வாழ்ந்துவரும் மிகப்பெரிய பாலூட்டிகளாகத் திகழ்கிறது.

NASA சாட்டிலைட் புகைப்படத்தில் நம்பமுடியாத தகவலை வெளிப்படுத்திய இந்தியா!NASA சாட்டிலைட் புகைப்படத்தில் நம்பமுடியாத தகவலை வெளிப்படுத்திய இந்தியா!

ராட்சஸ உருவத்திற்கு ராட்சஸ உணவு

ராட்சஸ உருவத்திற்கு ராட்சஸ உணவு

நீல திமிங்கிலங்களின் ராட்சஸ உருவத்திற்கு ஏற்றார் போல் அவற்றின் அளவை ஆதரிக்க, அவைகளுக்கு ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அளவிலான உணவு தேவைப்படுகிறது. ஒரே நேரத்தில் அதிகப்படியான க்ரில் வேட்டையில் இந்த நீல திமிங்கிலங்கள் ஈடுபடுகின்றன என்றும், இரையை எளிதாக வேட்டையாட இவை நீரின் மேற்பரப்பை அதிகம் தேர்வு செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பெரிதளவில் ஆற்றலைச் சேமிக்க முடிகிறது

பெரிதளவில் ஆற்றலைச் சேமிக்க முடிகிறது

ஆழமற்ற நீரில் வேட்டையாடுவதற்கான செயல்முறை, திமிங்கிலங்களுக்கு டைவிங் செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் நன்மைகளைத் தருகிறது மற்றும் ஒரே நேரத்தில் உட்கொள்ள வேண்டிய மிகப் பெரிய அளவிலான உணவை எளிதில் அடைய இது வழி வழங்குகிறது. அதேபோல், அதிக நேரம் நீருக்கடியில் இருக்க வேண்டிய அவசியமில்லை, இதனால் நீருக்கடிக்கில் மூச்சுக்காற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதாலும், திமிங்கிலங்களால் பெரிதளவில் ஆற்றலைச் சேமிக்க முடிகிறது.

டாக்டர் டோரஸ் கூறியதாவது

ஒரேகான் மாநில பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரும், ஆய்வின் ஆசிரியருமான டாக்டர் லீ டோரஸ், திமிங்கிலங்கள் தங்கள் இரையைக் கண்டுபிடிக்க ஆழமாக டைவ் செய்ய வேண்டும் என்ற தவறான கருத்துக்கு தற்பொழுது பதில் கிடைத்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல், டாக்டர் டோரஸ் கூறியதாவது, இந்த உயிரினம் மேற்பரப்பில் வேட்டையாடப் பெரிதும் விரும்புகின்றன, இதன் மூலம் அவை தங்களின் ஆற்றலைச் சேமிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

Netflix-ன் தரமான வசதி அறிமுகம்.! உடனே எனேபிள் செய்யுங்கள்.!Netflix-ன் தரமான வசதி அறிமுகம்.! உடனே எனேபிள் செய்யுங்கள்.!

வேட்டையாடும் திறன் முழுமையாகப் புலப்பட்டுள்ளது

வேட்டையாடும் திறன் முழுமையாகப் புலப்பட்டுள்ளது

விஞ்ஞானிகள் நீல திமிங்கிலங்களின் பாதைகளைக் கண்காணிக்க ஜிபிஎஸ் டிராக்கர்களை வைத்துள்ளனர். மேலும் இந்த கம்பீரமான உயிரினங்களை நன்கு புரிந்துகொள்ள அவற்றின் வடிவங்களைப் படிக்க ஆராய்ச்சியாளர்கள் திமிங்கலகளை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கக் குழு டிரோனை பயன்படுத்திய போது தான் இவற்றின் வேட்டையாடும் திறன் முழுமையாகப் புலப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazing Drone Video Shows Blue Whales Feeding On Surface : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X