என்ன மா.. இப்படி 'அசத்து'றீங்களே மா..!!
"எப்போ பாரு அரசியல்.. எப்போ பாரு சண்டை.. எப்போ பாரு பிரச்சனை..! ஏன்ப்பா நிம்மதியா.. சந்தோசமா.. உலகத்துல எதுவுமே நடக்கலயாப்பா..?" - என்பது தான் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்றால்.. இதோ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கொள்ள ஒரு தொகுப்பு..!
நம்ம ஊரு குயவர்கள் களிமண்ணை கொண்டு.. எதையும், எந்தவொரு வடிவத்தை உருவாக்குவதையும், ஓரமாக.. ஒளிஞ்சி நின்னு வேடிக்கை பார்த்த வெள்ளைக்காரன் கண்டுப்பிடிச்சது தான் - 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம்..! (சும்மா கொளுத்திப் போடுவோம்..!)
அதை வச்சிக்கிட்டு அவனுங்க பண்ற 'அலம்பல்' இருக்கே.. ஏப்பா.. நீங்களே பாருங்க என்ன என்ன செஞ்சி வச்சிருக்காணுங்கனு..! ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது... வித்தைக்காரவுங்க தான்..!

01. துப்பாக்கிகள் :
செமி-ஆட்டோ (Semi-auto) மற்றும் ஃபுல்-ஆட்டோ (Full-auto) என இரண்டு வகைகளிலும் உருவாக்கப்பட்டுள்ள 3டி பிரிண்ட்டட் துப்பாக்கிகள்..!

02. கிதார் :
3டி பிரிண்ட்டட் கிதார் - பொதுவாக இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகளை மிகவும் காதலிப்பார்கள். இதை கண்டால் அது இன்னும் அதிகமாகும்.

03. கேமிரா லென்ஸ்கள் :
மிகவும் சிக்கலான அமைப்பை கொண்ட கேமிரா லென்ஸ்களை சும்மா உருவாக்குவதே கடினம். அதை 3டி பிரிண்ட்டட் முறையில் உருவாக்கி இருக்கிறார்கள் - செம்ம..!

04. ஷாக்குஹச்சி புல்லாங்குழல் :
ஜப்பானிய வகை புல்லாங்குழல் ஷாக்குஹச்சியின் 3டி பிரிண்ட்டட் வெர்ஷன்..!

05. தறி :
துணி நெய்து அணிந்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்களின் கனவாக இருக்கும் இந்த 3டி பிரிண்ட்டட் தறி..!

06. குழந்தைகளின் ஓவியம் :
இது செம்ம க்யூட்..! குழந்தைகள் பேப்பரில் வரைந்த ஓவியத்தை அப்படியே 3டி பிரிண்ட்டட் பொம்மையாக மாற்றுவது.

07. கரு :
கருவில் இருக்கும் குழந்தையை அப்பிடியே 3டி உருவத்தில் பிரிண்ட் செய்யும் முறை..!

08. மருத்துவ மாதிரிகள் :
மாணவர்கள் இன்னும் அருமையாக அதிகமாக கற்றுக்கொள்ள உதவும் 3டி பிரிண்ட்டட் மருத்துவ மாதிரிகள்..!

09. எலக்ட்ரிக் லைட் ஷூ :
அட்டகாசமான இந்த 3டி பிரிண்ட்டட் ஷூவின் விலை 5879.83 யுரோக்கள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

10. ஐபோன் 5 கேஸ் மற்றும் கார்ட் ஹோல்டர் :
பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கார்ட் ஹோல்டர்கள் கொண்ட 3டி பிரிண்ட்டட் ஐபோன் கேஸ்கள்.

11. கியர் விராப் :
யூஎஸ்பி வயர்களை அழகாக சுருட்டி வைத்துக்கொள்ள உதவும் 3டி பிரிண்ட்டட் கியர் விராப்..!

12. ஐபாட் ஸ்டாண்ட் :
பிரத்யேகமாக மற்றும் ரசனையுடன் உருவாக்கப்பட்ட 3டி பிரிண்ட்டட் ஐபாட் ஸ்டாண்ட்.

13. ஆண்ராய்டு பொம்மைகள் :
பக்ராய்ட்ஸ் எனப்படும் 3டி பிரிண்ட்டட் ஆண்ராய்டு பொம்மைகள்..!

14. தொங்கும் லைட்கள் :
பார்த்தவுடன் 'வாவ்' சொல்ல வைக்கும் 3டி பிரிண்ட்டட் தொங்கும் விளக்குகள்.

15. கலிடோஸ்க்கோப் கடிகாரம் :
மிகவும் வித்தியாசமான வடிவங்களில் பல வகையான 3டி பிரிண்ட்டட் கடிகாரங்கள் உள்ளன, இருப்பினும் இந்த கலிடோஸ்க்கோப் கடிகாரம் தான் ஸ்பெஷல்.

16. சிற்பம் :
மிகவும் பிரபலாமன அன்டோமிகா டி ரெவல்யூடிஸ்-ன் (Anatomica di Revolutis) 3டி பிரிண்ட்டட் சிற்பம்.

17. குளம்பி கோப்பைகள் :
எதிலும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க நினைக்கும் மக்களுக்கு, இந்த 3டி பிரிண்ட்டட் குளம்பி கோப்பைகள் கொஞ்சம் பிடிக்கும்.

18. ஹை - ஹீல்ஸ் :
தெரியுமா..? ஒரு ஜோடி 3டி பிரிண்ட்டட் ஹை-ஹீல்ஸ் செருப்பின் பெயர் - மார்ஃபோஜெனீஸிஸ் (Morphogenesis).

19. ஆடைகள் :
மிகவும் கச்சிதமாக உருவாக்கப்படும் 3டி பிரிண்ட்டட் ஆடைகள்..!

20. பிக்னி :
3டி பிரிண்ட்டட் பிக்னி - இதை, இந்த நூற்றாண்டின் ஹை-டெக் உள்ளாடை எனலாம்..!

மேலும் இது சார்ந்த செய்திகளை படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications
