Home
News

25,000 ரூபாய் Smartwatch மாதிரி தோன்றும் புது Amazfit வாட்ச்! விலை கம்மி ஆனா லுக் அல்டிமேட்!

அமேஸ்பிட் (Amazfit) நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச் போர்ட்போலியோவில் புதிதாக ஒரு மாடலை சேர்த்துள்ளது. இந்த மாடலை நிறுவனம் அமேஸ்பிட் பாப் 3ஆர் (Amazfit Pop 3R) என்ற ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பட்ஜெட் விலையில் சூப்பர் கூல் ஸ்மார்ட்வாட்ச் ஆக இந்த சாதனத்தை அமேஸ்பிட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Amazfit Pop 3R சாதனம் ப்ளூடூத் கால்லிங் அம்சத்துடன் குறைந்த விலையில் வருகிறது. Amazfit Pop 3S அறிமுகத்திற்கு பிறகு அறிமுகமாகும் சாதனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது 1.43″ HD AMOLED டிஸ்ப்ளே மற்றும் 100+ துடிப்பான வாட்ச் பேஸ்களை கொண்டுள்ளது.

25,000 ரூபாய் Smartwatch மாதிரி தோன்றும் புது Amazfit வாட்ச்!

ஆனால், 3S இல் உள்ள சதுர வடிவமைப்புடன் ஒப்பிடும்போது இது வட்ட வடிவ வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில் இதய துடிப்பு சென்சார், இரத்த-ஆக்ஸிஜன் செறிவு மற்றும் மன அழுத்த நிலைகளை வழங்குகிறது. ஆனால், இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் ஜிபிஎஸ் இல்லை. அவுட்டோர் உடற்பயிற்சிகளுக்கு ஃபோனில் இருந்து ஜிபிஎஸ் பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது.

Amazfit Pop 3S ஆனது 100 ஸ்போர்ட்ஸ் மோட் முறைகளை ஆதரிக்கிறது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அமத்திற்கான IP68 மதிப்பீடுகள் மற்றும் 12 நாட்கள் வரை பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. மறுபுறம், புதிதாக அறிமுகமான அமேஸ்பிட் பாப் 3ஆர் ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தின் சிறப்பம்ச விபரங்களை பற்றி பார்க்கையில், இது 1.43' இன்ச் அளவு கொண்ட 466 x 466 பிக்சல்கள் உடைய AMOLED 460PPI டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவாக வருகிறது. புளூடூத் 5.2 அம்சத்துடன் ஆண்ட்ராய்டு 7.0 மற்றும் அதற்கு மேற்பட்ட அம்சத்துடன் வருகிறது. iOS 12.0 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. புளூடூத் காலிங் அழைப்பிற்கான உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் மற்றும் ஸ்பீக்கர்களை இது ஆதரிக்கிறது. இது 24மணி நேர இதய துடிப்பு கண்காணிப்பு, SpO2 & மன அழுத்த கண்காணிப்பு கேலெண்டர் நினைவூட்டல், நோட்டிபிகேஷன் போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.

25,000 ரூபாய் Smartwatch மாதிரி தோன்றும் புது Amazfit வாட்ச்!

மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், போன்ற அம்சங்களையும் இது ஆதரிக்கிறது. இது சிலிக்கன் ஸ்ட்ராப் உடன் வருகிறது. டஸ்ட் மாற்று வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது. இது 12 நாட்கள் நீடிக்கும் பேட்டரி ஆயுள் கொண்ட 300mAh பேட்டரி உடன் வருகிறது. இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றி பேசுகையில், இந்த Amazfit POP 3R விலை ரூ.3,499 விலையில் வருகிறது.

இது சிலிக்கான் ஸ்ட்ராப் மாடலுக்கான விலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலிகான் ஸ்ட்ராப் பிளாக் மற்றும் ஸ்லிவர் வண்ணங்களில் வருகிறது. இது போல், மெட்டல் ஸ்ட்ராப் கொண்ட மெட்டாலிக் சில்வர் மாடலின் விலை ரூ. 3999 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் 29 முதல் Flipkart மற்றும் Amazfit India இணையதளத்தின் வழியாக வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Amazfit Pop 3R Launched In India At Rs 3499 With Bluetooth Calling Feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X