Amazfit GTR 2e மற்றும் Amazfit GTS 2e ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்..

|

அமேஸ்ஃபிட் அடுத்த வாரம் இந்தியாவில் ஜிடிஆர் 2 இ மற்றும் ஜிடிஎஸ் 2 இ ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்த உள்ளது. இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களும் CES 2021 இல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிறுவனம் அவற்றைக் குடியரசு தினத்திற்கு முன்பே இந்தியாவுக்குக் கொண்டு வருகிறது என்ற அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பற்றிய முழு விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Amazfit GTR 2e மற்றும் Amazfit GTS 2e

Amazfit GTR 2e மற்றும் Amazfit GTS 2e

பெயர் தன்னை குறிப்பிடுவதுபோல், Amazfit GTR 2e என்பது Amazfit GTR 2 வின் டவுன் வெர்ஷன் வாரிசு ஸ்மார்ட்வாட்ச் மாடலாகும். இது கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல், Amazfit GTS 2e மாடலும் Amazfit GTS 2 ஸ்மார்ட் வாட்சின் டவுன் வெர்ஷன் ஸ்மார்ட்வாட்ச் மாடலாகும். தற்போது, அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2 சாதனம் பிளிப்கார்ட் வழியாகவும், ஜிடிஎஸ் 2 சாதனம் அமேசான் வழியாகவும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச்

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச்

அமேசான் வழியாக அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e வாங்குவதற்குக் கிடைக்குமென்று அமேஸ்ஃபிட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்குக் கிடைக்கும் என்று அமேஸ்ஃபிட் தெரிவித்துள்ளது. இதுதவிர, வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு ஸ்மார்ட் வாட்ச் மாடல்களை அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாகவும் வாங்கிக்கொள்ளலாம்.

டெலிகிராம் செயலியில் இப்படியொரு சிக்கல் உள்ளதா? மக்களே உஷார்.!டெலிகிராம் செயலியில் இப்படியொரு சிக்கல் உள்ளதா? மக்களே உஷார்.!

அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர் 2e மற்றும் ஜி.டி.எஸ் 2e வாட்சில் என்ன எதிர்பார்க்கலாம்?

அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர் 2e மற்றும் ஜி.டி.எஸ் 2e வாட்சில் என்ன எதிர்பார்க்கலாம்?

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e, 1.39' இன்ச் வட்ட AMOLED டிஸ்பிளே 454 x 454 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது, அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e, 1.65' இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே 348 x 442 பிக்சல்கள் மற்றும் 341 பிபி பிக்சல் அடர்த்தி கொண்டது. அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e 246 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒரே சார்ஜில் 14 நாட்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரியை இது கொண்டுள்ளது.

அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e

அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e

அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e, 471 எம்ஏஎச் பேட்டரியை ஒரே சார்ஜில் 24 நாட்கள் வரை பேட்டரி ஆயுளைத் தருகிறது. ஸ்மார்ட்வாட்ச் இரண்டும் ஸ்லீப் மற்றும் ஆக்ட்டிவிட்டி கண்காணிப்புடன் வருகின்றது. இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு அம்சம் மற்றும் 24 மணி நேர இதயத் துடிப்பு கண்காணிப்புக்கு, பயோட்ராகர் பிபிஜி இதயத் துடிப்பு சென்சாரும் இதில் உள்ளது.

ஜியோ பயனர்கள் கவனத்திற்கு.. இனி ''இந்த'' நான்கு திட்டங்கள் ரீசார்ஜ் செய்யக் கிடைக்காது..ஜியோ பயனர்கள் கவனத்திற்கு.. இனி ''இந்த'' நான்கு திட்டங்கள் ரீசார்ஜ் செய்யக் கிடைக்காது..

NFC விருப்பம் இருக்கிறதா?

NFC விருப்பம் இருக்கிறதா?

இந்த இரண்டு புதிய அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்களும் 5ATM சான்றிதழுடன் வருகிறது. அதாவது இவை 50 மீட்டர் ஆழம் வரை நீருக்குள் பாதுகாப்பாக இருக்கும் வாட்டர் ப்ரூப் அம்சத்துடன் வருகிறது. இவற்றில் 4 ஜிபி உள் சேமிப்பு, ஜி.பி.எஸ், மியூசிக் மற்றும் அழைப்புகளைப் பெறுவதற்கான ஆதரவு ஆகியவை உள்ளது. இத்துடன் புளூடூத் 5.0 LE, NFC, GPS மற்றும் GLONASS ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 19 ஆம் தேதி விற்பனை

ஜனவரி 19 ஆம் தேதி விற்பனை

அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e ஒரு வட்ட டயல் உடன் ஸ்லேட் கிரேய், அப்சிடியன் பிளாக் மற்றும் மேட்சா கிரீன் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ் 2e அர்பன் க்ரெய், டெசர்ட் கோல்டு, மிட்நைட் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. அமாஸ்ஃபிட் ஜிடிஆர் 2e மற்றும் ஜிடிஎஸ் 2e ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வெளியீடு ஜனவரி 19 ஆம் தேதி அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக நடைபெறுகிறது.

Best Mobiles in India

English summary
Amazfit GTR 2e and GTS 2e Smartwatches to Launch in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X