Home
News

ஆடிப் போவீங்க.. சாட்டிலைட் கனெக்சன்.. AI ரன்னிங் கோச்.. AMOLED டிஸ்பிளே.. 440mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஹாலிவுட் படங்களில் வரும் வாட்ச்களை போல, சில பிரம்மாண்ட அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் சீட்டா (Amazfit Cheetah) சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாட்டிலைட் ஜிபிஎஸ், செயற்கை நுண்ணறிவு ரன்னிங் கோச், ஹெல்த் மானிட்டர்கள் போன்ற வியக்க வைக்கும், இந்த வாட்ச்களின் முழு விவரம் இதோ.

அமேஸ்ஃபிட் சீட்டா அம்சங்கள் (Amazfit Cheetah Specifications): இந்த சீட்டா சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களில் 2 வேரியண்ட்கள் உள்ளன. ரவுண்ட் (Round) மற்றும் ஸ்குவேர் (Square) டயல் டிசைனில் விற்பனைக்கு வருகின்றன. இந்த ரவுண்ட் டயல் வாட்ச் 1.39 இன்ச் (454 × 454 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது.

Satellite கனெக்சன்.. AI ரன்னிங் கோச்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அதேபோல ஸ்குவேர் டயல் வாட்ச்சில் 1.75 இன்ச் (390 × 450 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த 2 டிஸ்பிளேக்களிலும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மற்ற அம்சங்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அவற்றை இப்போது, தெரிந்து கொள்வோம்.

இந்த சீட்டா சீரிஸ் வாட்ச் டச்ஸ்கிரீன் (Touchscreen) சப்போர்ட் கொண்டுள்ளது. இதற்கு டெம்பெர்ட் கிளாஸ் (Tempered Glass ) மற்றும் ஆன்டி-ஃபிங்கர் பிரிண்ட் கோடிங் (Anti-Fingerprint Coating) கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஹெல்த் டிராக்கிங் சென்சார்கள் வருகின்றன. ஆகவே, பயோடிராக்கர் பிபிஜி பயோமெட்ரிக் சென்சார்கள் (BioTracker PPG Biometric Sensor) சப்போர்ட் உள்ளது.

அதில் பிளட் ஆக்சிஜன் லெவல் டிராக்கிங் (Blood Oxygen Level Tracking), ஹார்ட் ரேட் டிராக்கிங் (Heart Rate Tracking), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் (Stress Level Tracking), ப்ரீதிங் லெவல் டிராக்கிங் (Breathing Level Tracking), மென்சுரல் டிராக்கிங் (Menstrual Tracking), ஸ்விம்மிங் ஹார்ட் ரேட் டிராக்கிங் (Swimming Heart Rate Tracking) உள்ளிட்டவை வருகின்றன.

இந்த சீரிஸ் வாட்ச்களில் 150+ ஸ்போர்ட் மோட்கள் (Sports Modes) வருகின்றன. அதோடு எந்தவொரு ஸ்மார்ட்வாட்ச்களிலும் கொடுக்கப்படாத வகையில், ஜெப் கோச் (Zepp Coach) என்னும் ஏஐ ரன்னிங் கோச் (AI Running Coach) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்களின் அன்றாட உடற்பயிற்சி விவரங்களை பகுப்பாய்பு செய்து, தேவையான ரன்னிங் நேரத்தையும், கலோரி பர்னிங்கையும் கண்காணித்து உங்களுக்கு டிப்ஸ்களை வழங்கும். கிட்டத்தட்ட கோச் போலவே செயல்படும்.

இவற்றில் அக்சிலரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோஸ்கோப் சென்சார் (Gyroscope Sensor), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor), பாரோமெட்ரிக் அல்டிமீட்டர் (Barometric Altimeter) மற்றும் ஆம்பியன் லைட் சென்சார் (Ambient Light Sensor) ஆகியவை வருகின்றன. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டி வருகிறது.

டூயல் பேண்ட் போசிஷனிங் மற்றும் 6 சாட்டிலைட் போசிஷனிங் சிஸ்டம் கொண்ட ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் உள்ளது. லைனியர் மோட்டார் (Linear Motor) வருகிறது. 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notifications) சப்போர்ட் உள்ளது. ரவுண்ட் மாடல் 32 கிராம் எடைக்கொண்டுள்ளது. அதேபோல ஸ்குவேர் மாடல் 34 கிராம் எடைக்கொண்டுள்ளது.

இவற்றை ஜெப் ஆப் (Zepp App) மூலம் பயன்படுத்தலாம். ரவுண்ட் மாடலில் 440mAh பேட்டரி வருகிறது. ஸ்குவேர் மாடலில் 240mAh பேட்டரி வருகிறது. இதற்கு மேக்னடிக் சார்ஜிங் (Magnetic Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் தொடர்ந்து 14 நாட்கள் பேட்டரி பேக்கப் கொடுக்கக்கூடியது. இந்த அமேஸ்ஃபிட் சீட்டா சீரிஸ் வாட்ச்கள் ஸ்பீடுஸ்டெர் கிரே (Speedster Grey) கலரில் விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் இன்று (செப்டம்பர் 21) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீலியோஸ் (Helios) மற்றும் ஜஸ்ட் இன் டைம் (Just In Time) ஆகிய ஆஃப் லைன் ஸ்டோர்களில் மட்டும் விற்பனைக்கு வருகிறது. வரும் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் இவற்றை வாங்கிக்கொள்ளலாம். சாட்டிலைட் ஜிபிஎஸ், ஏஐ ரன்னிங் கோச் போன்ற அல்ட்ரா பிரீமியம் அம்சங்கள் உள்ளதால், இதன் விலை ரூ.20,999 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazfit Cheetah Smartwatch With AMOLED Display, GPS, AI Powered Running Coach Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X