Home
News

இவ்ளோ தானா? ஆளுக்கொன்னு வாங்கும் விலையில் GPS வாட்ச்.. 300mAh பேட்டரி.. TFT டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி, டிஃஎப்டி டிஸ்பிளே, ஜெப் ஓஎஸ் 2.0, 300mAh பேட்டரி, ஹெல்த் மானிட்டர்கள், கேமரா கன்ட்ரோல் போன்ற பட்டாசான அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் (Amazfit) நிறுவனத்தின் அமேஸ்ஃபிட் பிப் 5 (Amazfit BIP 5) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இப்போது வரும் ஸ்மார்ட்வாட்ச்களில் போன்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அம்சங்கள் கொடுக்கப்படுகின்றன. அந்த வரிசையில், சாட்டிலைட் உதவியுடன் கூடிய ஜிபிஎஸ் அம்சம் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அம்சம் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் குறைந்தது, ரூ.8,000க்கும் மேல் இருக்கும். ஆனால், அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய அமேஸ்ஃபிட் பிப் 5 (Amazfit BIP 5) ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் ஜிபிஎஸ் அம்சத்துடன் வெளியாக இருக்கிறது.

பட்ஜெட்டில் GPS கனெக்டிவிட்டி.. 300mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேஸ்ஃபிட் பிப் 5 அம்சங்கள் (Amazfit BIP 5 Specifications): இந்த அமேஸ்ஃபிட் வாட்ச் 1.91 இன்ச் (320 × 380 பிக்சல்கள்) டிஃஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 2.5டி டெம்பெர்ட் கிளாஸ் (Tempered Glass) பாதுகாப்பு மற்றும் ஆன்டி-ஃபிங்கர்பிரிண்ட் கோட்டிங் (Anti-Fingerprint Coating) வருகிறது.

ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டி வருகிறது. இந்த கனெக்டிவிட்டி ஆண்ட்ராய்டு 7.0 (Android 7.0) மற்றும் ஐஓஎஸ் 14.0 (iOS 14.0) ஆகிய ஓஎஸ்களுக்கு மேலுள்ள போன்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த அமேஸ்ஃபிட் வாட்ச் ஜெப் ஓஎஸ் 2.0 (Zepp OS 2.0) கொண்டுள்ளது. ப்ளூடூத் போன் காலிங் (Bluetooth Phone Calling) அம்சம் வருகிறது. அதற்காக, இன்-பில்ட் மைக்ரோபோன் (In-built Microphone) மற்றும் ஸ்பீக்கர்கள் வருகின்றன.

இதில் 70-க்கும் மேற்பட்ட வைப்ரண்ட் வாட்ச் பேஸ்கள் (Vibrant Watch Faces) மற்றும் 120-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. குறிப்பாக இந்த வாட்ச்சில் அதிகபட்சமாக 70 ஆப்களை டவுன்லோட் செய்து பயன்டுத்திக் கொள்ள முடியும். இதற்காக மினி ஆப் ஸ்டோர் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு அமேசான் அலெக்சா (Amazon Alexa) வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சப்போர்ட் வருகிறது. ஆக்சிலரோமீட்டர் சென்சார் (Accelerometer Sensor), ஹார்ட் ரேட் சென்சார் (Heart Rate Sensor), 3-ஆக்சிஸ் மோஷன் சென்சார் (3 Axis Motion Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் (GPS) வசதிக்காக 4 சாட்டிலைட் போசிஷனிங் சிஸ்டம்ஸ் (4 Satellite Positioning Systems) வருகிறது.

அதேபோல 24 மணி நேர ஹார்ட் ரேட் மானிட்டர் (24H Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) மற்றும் ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டர் (Stress Level Monitor) கொண்டிருக்கிறது. 300mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி தொடர்ந்து 10 நாட்கள் பேக்கப் கொடுக்கும். அதேபோல பேட்டரி சேவர் மோடில் (Battery Saver Mode) 26 நாட்கள் பேக்கப் கொடுக்கும்.

இதற்கு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. மேலும் காலண்டர் ரிமைன்டர் (Calendar Reminder), கால் நோட்டிஃபிகேஷன் (Call Notification), செடெண்டரி ரிமைன்டர் (Sedentary Reminders), ஸ்மார்ட்போன் ஆப்ஸ் நோட்டிஃபிகேஷன் (Smartphone Apps Notifications) உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாட்ச் மூலம் கேமரா கன்ட்ரோல், மியூசிக் கன்ட்ரோல் செய்துகொள்ள முடியும்.

இந்த அமேஸ்ஃபிட் பிப் 5 ஸ்மார்ட்வாட்ச் சாஃப்ட் பிளாக் (Soft Black), கிரீம் வைட் (Cream White) மற்றும் பாஸ்டல் பிங்க் (Pastel Pink) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இப்போது, சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.7,485 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் வாரங்களில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், இந்தியாவில் ரூ.5,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், இதேபோல அம்சங்களை கொண்ட அமேஸ்ஃபிட் பாப் 3எஸ் மற்றும் பாப் 3ஆர் ஸ்மார்ட்வாட்ச்கள் ரூ.3,499 பட்ஜெட்டில் வெளியாகியது அனைவரும் அறிந்ததே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazfit BIP 5 With GPS, Bluetooth Calling, 300mAh Battery India Soon Check Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X