சாட்டிலைட் கனெக்ஷன்.. GPS ஆதரவுடன் Smartwatch.. கலக்கும் Amazfit விலை என்ன? எப்போ வாங்கலாம்?
நீண்ட நாள் காத்திருப்பு இப்போது நிறைவைடைய போகிறது போல் தெரிகிறது. காரணம் ஜிபிஎஸ் ஆதரவுடன் எதிர்பார்க்கப்பட்ட அமேஸ்ஃபிட் ஆக்ட்டிவ் எட்ஜ் (Amazfit Active Edge) ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) சாதனம் இப்போது அறிமுகமாக தயாராகிவிட்டது.
அமேஸ்ஃபிட் ஆக்ட்டிவ் எட்ஜ் (Amazfit Active Edge): கடந்த 2023 அக்டோபர் மாதத்தில், அமேஸ்ஃபிட் ஆக்ட்டிவ் எட்ஜ் (Amazfit Active Edge) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் உலகளவில் உள்ள ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த உலகளாவிய அறிமுகத்திற்குப் பிறகு, அமேஸ்ஃபிட் ஆக்ட்டிவ் எட்ஜ் (Amazfit Active Edge) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட தயாராகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

AI அசிஸ்டன்ட்: இது ஒரு ரக்டு வடிவமைப்பு டிசைன் மற்றும் AI ஒர்க்அவுட் அசிஸ்டன்ட் ஆதரவுடன் வருகிறது. தெரியாதவர்களுக்கு, இந்த மாத தொடக்கத்தில், இந்த பிராண்ட் Amazfit Active ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து நிறுவனம் இப்போது புதிய அமேஸ்ஃபிட் ஆக்ட்டிவ் எட்ஜ் (Amazfit Active Edge) ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
நீருக்குள் இயங்கும் உறுதியான வாட்ச்: அமேஸ்ஃபிட் ஆக்ட்டிவ் எட்ஜ் (Amazfit Active Edge) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ஒரு முரட்டுத்தனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 10 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் கொண்டு வருகிறது. அதாவது 100 மீட்டர் வரை நீச்சல் அல்லது டைவிங் செய்யும் போது கூட இந்த அமேஸ்ஃபிட் ஆக்ட்டிவ் எட்ஜ் (Amazfit Active Edge) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் நிலையாக செயல்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
டிஸ்பிளே: இது 1.32″ அளவு கொண்ட 360 x 360 பிக்சல்கள் உடைய LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 100+ வாட்ச் பேஸ் அம்சத்துடன் வருகிறது. இது மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் லாவா பிளாக் (Lava black), மிட்நைட் பல்ஸ் (Midnight pulse) மற்றும் மின்ட் க்ரீன் (Mint green) நிறங்களில் வெளிவரும் என்பதை நிறுவனம் அறிவித்துள்ளது. இது GPS ஆதரவை வழங்குகிறது.

சிஸ்டம்: அமேஸ்ஃபிட் ஆக்ட்டிவ் எட்ஜ் (Amazfit Active Edge) ஸ்மார்ட்வாட்ச் 5 சாட்டிலைட் பொசிஷனிங் சிஸ்டம் அம்சம் மற்றும் நேவிகேஷன் அம்சம் போன்றவற்றை ஆதரிக்கிறது. இது Zepp OS 2.1 இல் இயங்கும் Zepp Coact AI ஒர்க்அவுட் அசிஸ்டன்ட் உடன் இயங்குகிறது. இதுவொரு அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் சாதனமாக செயல்படுகிறது. அவுட்டோர் ரன்னிங், டிரெட்மில், வால்கிங், இண்டோர் ரன்னிங், சைக்கிலிங், போன்ற வெவ்வேறு விதமான 7 ஸ்போர்ட்ஸ் மோட்களை ஆதரிக்கிறது.
ஸ்போர்ட்ஸ் மோட்: இது 130+ ஸ்போர்ட்ஸ் மோட் ஆதரவுடன் வருகிறது. இந்த அமேஸ்ஃபிட் ஆக்ட்டிவ் எட்ஜ் (Amazfit Active Edge) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 25 ஸ்டெர்ந் எக்ஸர்சைஸ் உடன் இயங்குகிறது. இது வழக்கமான பயன்பாட்டுடன் 16 நாட்கள் பேட்டரி ஆயுள் வரை இயங்குகிறது. இது இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு மற்றும் மன அழுத்த கண்டறிதல் அம்சம் ஆகியவை கொண்டு சிறப்பாக இயங்குகிறது.
விலை: இந்த அமேஸ்ஃபிட் ஆக்ட்டிவ் எட்ஜ் (Amazfit Active Edge) ஸ்மார்ட்வாட்ச்சின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இது Amazon India இல் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்த மாத தொடக்கத்தில் ரூ.12,999 விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அமாஸ்ஃபிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்சை விட சற்று மலிவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications