இந்த அலுமினியம் பேட்டரி 60 நொடிகளில் முழுமையாக சார்ஜ் ஆகி விடும்

Posted By:

இன்று ஸ்மார்ட்போன் இல்லாத வாழ்க்கையை கற்பனையிலும் நினைக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. ஸ்மார்ட்போனை முழுமை படுத்துவது அதன் பேட்டரி தான். போன் எத்தனை சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சிறப்பாக இயங்க பேட்டரி மிகவும் முக்கியமானதாகும்.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் அலுமினியம் மூலம் இயங்கும் புதிய வகை பேட்டரியை வடிவமைத்துள்ளனர். இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 60 நொடிகளே போதுமானது.

இந்த அலுமினியம் பேட்டரி 60 நொடிகளில் முழுமையாக சார்ஜ் ஆகி விடும்

இந்த அலுமினியம் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கும், விலை குறைவு என்பதோடு லித்தியம் பயன்படுத்தும் பேட்டரிகளுக்கு மாற்றாக இருக்கும். மொபைல் போன் மற்றும் லாப்டாப்களுக்கும் விரைவில் பயன்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

போன்களை நொடிகளில் சார்ஜ் செய்யும் என்பதோடு லித்தியம் அயன் பேட்டரிகளை விட அலுமினியம் பேட்டரிகள் மிகவும் பாதுகாப்பானது, லித்தியம் பேட்டரிகளை போன்று வெடிக்காது என்றும் கூறப்படுகின்றது.

 

English summary
Aluminium Battery charges in one minute. aluminium battery that charges smartphone to full capacity in just 60 seconds.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot