தினமும் Fast Charging செய்வதன் பின்னணியில் உள்ள பேராபத்து! இதுல 240W வேற?

|

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் யூசர்களுக்கு, இன்னமும் 20W - 30W என்கிற அளவிலான சார்ஜிங் ஸ்பீடையே வழங்கி வரும் மறுகையில், சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் சார்ஜிங் ஸ்பீட் என்று வரும்போது, அவர்களின் ஆட்டமே "வேற மாதிரி" இருக்கிறது!

ஏற்கனவே ஸ்மார்ட்போன் சந்தையில் 150W சார்ஜிங் ஸ்பீட்-ஐ வழங்கும் போன்கள் உள்ளன. ஆனால் அது "நிகழந்து கொண்டே" இருக்கும் சார்ஜிங் ஸ்பீட் யுத்தத்தின் ஒரு முடிவாக இருக்குமா என்று கேட்டால்? நிச்சயமாக இருக்காது!

200W-க்கே ஷாக் ஆகி விடாதீர்கள்.. அதுக்கும் மேல ஒன்னு இருக்கு!

200W-க்கே ஷாக் ஆகி விடாதீர்கள்.. அதுக்கும் மேல ஒன்னு இருக்கு!

வரவிருக்கும் மாதங்களில் வெளியாகும் சில ஸ்மார்ட்போன்களில் 200W சார்ஜிங் ஸ்பீட் இடம்பெறலாம் என்பதை வெளிப்படுத்திய சில அறிக்கைகளே உங்களுக்கு ஒரு ஷாக் ஆக இருந்தால், ஒப்போ நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கை ஒன்றை பற்றி அறிந்தால், என்ன ஆவீர்கள்?

தற்போது கிடைத்துள்ள ஒரு புதிய அறிக்கை, ஒப்போ நிறுவனம் தன் ஸ்மார்ட்போன்களுக்காக அதன் சொந்த 240W சார்ஜிங் தொழில்நுட்பத்தை தயார் செய்து வருவதாக தெரிவிக்கிறது.

முதலில் 20 நிமிடங்களில் 100% சார்ஜிங்!

முதலில் 20 நிமிடங்களில் 100% சார்ஜிங்!

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சார்ஜிங் தொழில்நுட்பமானது மிகவும் வேகமாக முன்னேறி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சியோமி நிறுவனம் அதன் சியோமி 11i ஸ்மார்ட்போனில் ஹைப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது, இது ஸ்மார்ட்போனை 20 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்யும் திறனை கொண்டு வந்தது.

வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?

இப்போது 12 நிமிடங்களில் 100% சார்ஜிங்!

இப்போது 12 நிமிடங்களில் 100% சார்ஜிங்!

சமீபத்தில் ஐக்யூ (​​iQoo) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஐக்யூ 10 ப்ரோ (iQoo 10 Pro) மாடலில் 200W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இணைத்தது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் 12 நிமிடங்களுக்குள் ஒரு ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்யும்.

ஒருவேளை இந்த அளவிலான சார்ஜிங் ஸ்பீட் ஆனது உங்களுக்குப் போதுமானதாக இல்லை என்றால், ஒப்போ நிறுவனத்தின் 240W சார்ஜிங் ஸ்பீட் தான் உங்களுக்கானதாக இருக்கும்.

240W சார்ஜிங்கின் வேகம் எப்படி இருக்கும்?

240W சார்ஜிங்கின் வேகம் எப்படி இருக்கும்?

வெளியான அறிக்கையின்படி, சீன ஓஇஎம் (OEM - original equipment manufacturer) ஆன ஒப்போ, அதனொரு புதிய தொழில்நுட்த்தின் கீழ் "தற்போதைய" அதிவேக சார்ஜிங் ஸ்பீட்-ஐ சுமார் 20 சதவீதம் மேம்படுத்த உள்ளது.

"தற்போதைய" அதிவேக சார்ஜிங் ஸ்பீட் என்றால், முன்னரே குறிப்பிட்டபடி, பிபிகே எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான ஐக்யூ- விடம் இருந்து கிடைக்கும் 200W பாஸ்ட் சார்ஜிங் தான்!

Windows யூசர்களே! அடுத்த 6 மாசத்துக்குள்ள Windows யூசர்களே! அடுத்த 6 மாசத்துக்குள்ள "இதை" பண்ணிடுங்க! இல்லனா? கெடு வைத்த Microsoft!

4500mAh பேட்டரியை 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும்!

4500mAh பேட்டரியை 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும்!

சீன சமூக ஊடக தளமான Weibo-வில் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக வெளியான ஒரு தகவலின்படி, ஒரு சீன ஸ்மார்ட்போன் நிறுவனம், அதன் மொபைல் சார்ஜிங் அடாப்டரில் 24V, 10A சார்ஜர் உடனாக 240W பாஸ்ட் சார்ஜிங் ஸ்பீட்-ஐ வழங்கும் திறனை பெறுகிறது.

ஊகங்களின்படி, அந்த சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஐக்யூ நிறுவனத்தின் சக பிபிகே எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான ஒப்போ-வாக இருக்கலாம்.

நினைவூட்டும் வண்ணம் இந்நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரியில், அதன் 240W பாஸ்ட் சார்ஜிங் ஸ்பீட்-ஐ டெஸ்ட் செய்து காட்டி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அப்போது வெறும் 9 நிமிடங்களுக்குள் 4,500mAh பேட்டரியானது முழுமையாக சார்ஜ் ஆனது!

பேட்டரியின் ஆயுளை குறைக்கும் பாஸ்ட் சார்ஜிங்?

பேட்டரியின் ஆயுளை குறைக்கும் பாஸ்ட் சார்ஜிங்?

இத்தகைய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பங்கள் நம் நேரத்தை மிச்சப்படுத்தும் அதே சமயம், ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள ஒரு பேட்டரியின் "ஆயுளையும்" பாதிக்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நிபுணர்களின் கூற்றுப்படி, பாஸ்ட் சார்ஜ் செய்வது உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியை வேகமாக அழித்துவிடும். ஏனெனில் லி-அயன் பேட்டரி வரையறுக்கப்பட்ட சார்ஜிங் சுழற்சிகளை கொண்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜ் செய்வதன் மூலம், நீங்கள் அந்த சுழற்சியை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள், மேலும் அடிக்கடி சார்ஜ் செய்கிறீர்கள். இது உங்கள் பேட்டரி விரைவில் செயலிழந்து போக வழிவகுக்கும்.

எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே எச்சரிக்கை! Google Chrome செட்டிங்ஸ்-க்கு போய் உடனே "இதை" செய்ங்க.. இல்லனா?

அதிவேக சார்ஜிங் என்றால் அதிவேக ஓவர் ஹீட்டிங்கும் கூட!

அதிவேக சார்ஜிங் என்றால் அதிவேக ஓவர் ஹீட்டிங்கும் கூட!

மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆனது அதிக வெப்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆபத்துகளையும் உள்ளடக்கியது. இது தொடர்பான கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் கூட, இது இன்னுமும் கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு பிரச்சினையாகவே உள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் தீவிரமாகி கொண்டே போனால், பேட்டரி ஹீட்டிங்-கும் தீவிரமாகி கொண்டே போகும். இது உங்கள் பேட்டரிக்கும், உங்கள் ஸ்மார்ட்போனிற்கும் மட்டுமல்ல, உங்களுக்கும் கூட தீங்கு விளைவிக்கலாம்.

Best Mobiles in India

English summary
Already Fast Charging technology has its own pros and cons Meanwhile OPPO working on 240W Fast Charging technology

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X