வேற லெவல்: கொரோனா-வை ஒழிக்க ரூ.6000 கோடி நிதி வழங்கிய Google., சுந்தர்பிச்சை அதிரடி

|

COVID-19 வைரஸ் உலகை கடுமையாக பாதித்த நிலையில், உலகெங்கிலும் உள்ள கோடீஸ்வரர்கள் இந்த கடினமான காலங்களில் மக்களுக்கு உதவ ஒன்றிணைந்து உதவி செய்து வருகின்றனர். அலிபாபா, பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் டிம் குக் ஆகியோர் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உதவ முன்வந்து கொண்டிருப்பதை நாம் பார்த்து வருகிறோம்.

சுந்தர் பிச்சை அவர்கள்

சுந்தர் பிச்சை அவர்கள்

இந்த நிலையில் தற்போது சுந்தர் பிச்சை அவர்கள் தனது ஆல்பாபெட் நிறுவனம் 800 மில்லியன் டாலர் சுகாதார அமைப்புகள், சிறியது வணிகங்கள் மற்றும் COVID-19 வைரஸை ஒழிக்கும் முயற்சியில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளார்.

தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை

இந்த 800 மில்லியன் பணமானது விளம்பர வரவுகள் மற்றும் தேடுபொறி நிறுவனமான கிளவுட் சேவைகளுக்காது என்று ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

டாடா ஸ்கை நிறுவனம் அறிவிக்கப்போகும் இலவசம்! என்ன தெரியுமா?டாடா ஸ்கை நிறுவனம் அறிவிக்கப்போகும் இலவசம்! என்ன தெரியுமா?

இலவச விளம்பரங்களை ஆல்பாபெட் வழங்குகிறது

இலவச விளம்பரங்களை ஆல்பாபெட் வழங்குகிறது

மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு 340 மில்லியன் மதிப்புள்ள இலவச விளம்பரங்களை ஆல்பாபெட் வழங்குகிறது என்றும் இந்த சிக்கலான காலங்களில் தங்கள் வணிகத்தை உறுதிப்படுத்த கூகிள் நெட்வொர்க் என்றும் ஒரு பாலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூகிள் கிளவுட்

விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு, ஆல்பாபெட் நிறுவனம் 20 மில்லியன் டாலர் தருவதாக உறுதியளித்துள்ளது. கொரோனா வைரஸை ஒழிக்க கூகிள் கிளவுட் நிறுவனத்தை எப்போதும் பயன்படுத்தலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தயாரிக்க திட்டமிட்டுள்ளது

மேலும், ஆல்பாபெட் தனது நன்கொடைகளில் 10,000 டாலர்கள் வரை தனது நிறுவனத்தின் ஊழியர்கள் நிறுவனங்களுக்கும் நிதியுதவி செய்யவுள்ளது. தற்போது சுகாதார வழங்குநர்கள் எதிர்கொண்டுள்ள முகமூடிகள் பற்றாக்குறையை சமாளிக்க முகமூடிகள், கையுறைகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை அதிகரிக்க தனது பார்ட்னர்களுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

உற்பத்தியை அதிகரிக்க

மேலும் ஆல்பாபெட்டின் கூகிள், வெர்லி மற்றும் எக்ஸ் வென்டிலேட்டர்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் பொறியாளர்கள் மற்றும் சுகாதார சேவையை வழங்குதல் ஆகியவற்றையும் திட்டமிட்டுள்ளது.

ஒன்றாக இணைந்து நமது சமூகத்திற்கு உதவுவோம்

ஒன்றாக இணைந்து நமது சமூகத்திற்கு உதவுவோம்

இதுகுறித்து சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "ஒன்றாக இணைந்து நமது சமூகத்திற்கு உதவுவோம் என்றும், நமது வணிகங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் உட்பட அனைத்து சமூகங்களுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம் என்றும் நம்முன் நிற்கும் சவாலை எதிர்கொள்வோம்' என்றும் கூறியுள்ளார்.

Source:indiatimes.com

Best Mobiles in India

English summary
Alphabet CEO Sundar Pichai donates Rs 6000 Crore to support people in COVID -19 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X