Home
News

மோடி வெயிட்டிங்.. அமெரிக்க அரசாங்கத்தின் பறக்கும் கோட்டை.. ஜோ பிடனுக்காக இந்தியாவிற்கு வருகிறது!

ஜி20 மாநாடானது (G20 Summit) வருகிற செப்டம்பர் 9-10 தேதிகளில் இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் நடக்கவுள்ள நிலையில், அம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் (US President Joe Biden) வருகிற செப்.8 புது தில்லிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பிடனின் மனைவியும், ஃபர்ஸ்ட் லேடியுமான (First Lady) ஜில் பிடனுக்கு கோவிட்-19 தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து 80 வயதான ஜனாதிபதி பிடனுக்கும் கோவிட்-19 தொற்று சோதனை எடுக்கப்பட்டது. சோதனையில் முடிவில் ஜோ பிடன் கோவிட்-19 ஆல் பாதிக்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.

அமெரிக்க அரசாங்கத்தின் பறக்கும் கோட்டை.. இந்தியாவிற்கு வருகிறது!

அதை தொடர்ந்தே, ஜி20 மாநாட்டில் ஜோ பிடன் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தை பயன்படுத்தியே ஜோ பிடன் இந்தியாவிற்கு வரவுள்ளார்.

முன்னதாக ஏர்ஃபோர்ஸ் ஒன் என்பது அமெரிக்க ஜனாதிபதியை ஏற்றிச் செல்லும் எந்தவொரு விமானப்படை விமானத்திற்குமான ஒரு குறிப்பு பெயராக இருந்தது. ஆனால் இப்போது இரண்டு தனிப்பயனாக்கப்பட்ட போயிங் 747-200பி சீரீஸ் விமானங்கள், 28000 மற்றும் 29000 என்கிற டெயில் கோட்களுடன் உள்ளன.

நீளமும், உயரமும்! 63 அடி உயரம் கொண்ட இந்த விமானம் ஆறு மாடி கட்டிடம் அளவிற்கு உயரமாக உள்ளது. இந்த விமானத்தின் மொத்த நீளம் 232 அடி ஆகும், இதன் இறக்கைகளின் நீளம் 195 அடி ஆகும். உலகின் மிகவும் பிரபலமான இந்த விமானத்திற்கான விமானப்படை பெயர் போயிங் 747-200பி விசி-25ஏ ஆகும்.

எவ்வளவு செலவாகும்? இந்த விமானத்தில் பார்ப்பதற்காக 1 மணி நேரத்திற்கு 200,000 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் ஒரு விசாலமான உட்புறத்தை கொண்டுள்ளது. மொத்தம் 3 நிலைகளை கொண்டுள்ள இந்த விமானம் 4,000 சதுர அடி பரப்பளவையும் கொண்டுள்ளது.

எல்லோருக்கும் இடமுண்டு! மொத்தம் 70 பயணிகள் வரை தங்கும் வசதிகள் கொண்ட இந்த விமானத்தில் உள்ள ஜனாதிபதிக்கான சூட்டில் பெரிய அலுவலகம், கழிவறை மற்றும் கான்ஃப்ரென்ஸ் அறை ஆகியவைகள் உள்ளன. அதே நேரத்தில் மூத்த ஆலோசகர்கள், ரகசிய சேவை அதிகாரிகள், டிராவலிங் பிரஸ் மற்றும் பிற விருந்தினர்களுக்கான தூங்கும் அறைகளும் உள்ளன

மெடிக்கல் எமர்ஜென்சி மற்றும் உணவு: சுவாரசியமாக இந்த விமானத்தில், அறுவை சிகிச்சை அறையாக மாற்றப்பட கூடிய ஒரு மெடிக்கல் சூட்டும் உள்ளது. அங்கே மருத்துவர்களும் இருப்பர். ஒரே நேரத்தில் 100 பேருக்கு உணவளிக்கக்கூடிய 2 உணவு தயாரிக்கும் இடங்களும் இந்த விமானத்தில் உள்ளது.

ஏர்ஃபோர்ஸ் ஒன்-ஐ ஒரு பறக்கும் கோட்டையாக மாற்றுவது எது? வானத்தில் காலவரையின்றி இருக்க உதவுவதற்கு நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் இதன் திறன் தான் ஏர்ஃபோர்ஸ் ஒன்-ஐ ஒரு பறக்கும் கோட்டையாக மாற்றுகிறது. போதாக்குறைக்கு இது மணிக்கு 965 கிமீ வேகத்தில் (அதாவது ஒலியின் வேகத்தில் 92 சதவிகிதம்) பறக்கும் திறனையும் கொண்டது!

எல்லாவற்றை விட முக்கியமாக ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் ஆர்மர் பிளேட்டிங் (Armour Plating) ஆனது நியூக்ளியர் பிளாஸ்ட் ரெசிஸ்டென்ட்டையும் (Nuclear blast-resistant) கொண்டுள்ளது. அதாவது இதனால் ஒரு அணு வெடிப்பால் (nuclear explosion) ஏற்படும் மின்காந்த வெடிப்பை (electromagnetic blast) தாங்க முடியும்.

மேலும் இந்த விமானம் வெப்பத்தை தேடும் ஏவுகணைகளை திசைதிருப்ப உதவும் ஹிட்டன் எலெக்ட்ரானிக் ஜாமர்கள் (Hidden Electronic Jammers) மற்றும் ஃபிளேர்களையும் (Flares) கொண்டுள்ளது. கடைசியாக இது ஏர்-டூ-ஏர் மற்றும் ஏர்-டூ- கிரவுண்ட் தொடர்புகளை வழங்கும் மல்டி ப்ரெக்வென்சி ரேடியோக்களையும் கொண்டுள்ளது.

சரி ஜோ பிடனை வானத்தில் பாதுகாக்க ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் உள்ளது. தரையில் இறங்கிய பின் பாதுகாக்க எது இருக்கிறது? ஏர்ஃபோர்ஸ் ஒன் வந்து சேருவதற்கு முன்பாகவே சி-141 ஸ்டார்லிஃப்டர் என்கிற ஒரு சரக்கு விமானமானது ஜனாதிபதியின் குண்டு துளைக்காத காரை இந்தியாவில் தரை இறக்கி விட்டுவிடும்!

Best Mobiles in India

English summary
All You Need to Know About Air Force One Which Carry US President Joe Biden To India For G20 Summit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X