வெளிநாடுனா முடியும்., இந்தியானா முடியாதா?- Smartphone, iPhoneகளுக்கு விரைவில் வரும் செக்!

|

மின்னணு சாதனங்களுக்கு இந்தியாவில் பல சார்ஜர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மதிப்பிடுவதற்கு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களை அரசு சந்திக்க இருக்கிறது என அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அனைத்து சாதனங்களுக்கும் ஒரே சார்ஜர்

அனைத்து சாதனங்களுக்கும் ஒரே சார்ஜர்

ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் என அனைத்து சாதனங்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜரை பயன்படுத்த வைக்கும் முயற்சியை இந்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களும் ஒரே டைப் சார்ஜரை பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை முன்னதாகவே ஐரோப்பா அறிவுறுத்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஐரோப்பாவில் 2024 முதல் அமல்

ஐரோப்பாவில் 2024 முதல் அமல்

ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் உட்பட அனைத்து சாதனங்களும் ஒரே மாதிரியான சார்ஜரை பயன்படுத்த வைப்பதற்கான கொள்கையை இந்திய அரசு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதே கொள்கையை ஐரோப்பாவும் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த கொள்கை ஐரோப்பாவில் 2024 முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்த கொள்கையை இந்திய அரசும் அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்க இருக்கும் கூட்டம்

ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்க இருக்கும் கூட்டம்

ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் உட்பட அனைத்து சாதனங்களும் ஒரே மாதிரியான சார்ஜரை ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்க, இந்திய அரசு ஆகஸ்ட் 17 ஆம் கூட்டம் ஒன்றை நடத்த இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

இப்படி ஒரே டைப் சார்ஜரை கொண்டுவரவதால் என்ன பலன் என்று கேள்வி வருகிறதா?. அதற்கான பதிலை பார்க்கலாம் வாங்க.

பல்வேறு நன்மைகள்

பல்வேறு நன்மைகள்

ஸ்மார்ட்போன்களுக்கு ஒரே மாதிரியான சார்ஜரை பயன்படுத்துவதன் மூலம் மின்-கழிவுகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் அதோடு நுகர்வோர் மீதான சுமைகளும் குறைக்கப்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்கம், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களைச் சந்திக்க இருப்பதாக அமைச்சக அதிகாரி குறிப்பிட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

வெளிநாடுகளில் முடியும், இந்தியாவில் முடியாதா?

வெளிநாடுகளில் முடியும், இந்தியாவில் முடியாதா?

இதுதொடர்பாக நுகர்வோர் விவகார அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் PTI இடம் தெரிவிக்கையில்,

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இந்த சேவையை செய்ய முடியும் என்றால், இந்தியாவில் ஏன் அதைச் செய்ய முடியாது? ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் போன்ற சிறிய மின்னணு சாதனங்களுக்கு பொதுவான சார்ஜர் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் இந்த மாற்றத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்காவிட்டால், மின்னணு கழிவுகள் இங்கு கொட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெவ்வேறு ரக சார்ஜர்கள்

வெவ்வேறு ரக சார்ஜர்கள்

தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு சாதனத்திற்கும் தனித்தனியாக சார்ஜர்கள் வாங்க நிறுவனங்கள் பயனர்களை கட்டாயப்படுத்துகிறது.

வெவ்வேறு ரக போர்ட்களுடன் மொபைல்கள், டேப்லெட்கள், லேப்டாப்களுக்கு என தனித்தனி சார்ஜர்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனுக்கும் ஐபோனுக்கும் தனித்தனி சார்ஜிங் போர்ட்கள் இருக்கிறது.

இவை அனைத்துக்கும் ஒரே மாதிரியான சார்ஜர்கள் பயன்படுத்தப்பட்டால் மின் கழிவுகள் குறைக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஐபோன்கள் உட்பட அனைத்து சாதனங்களும் அடங்கும்

ஐபோன்கள் உட்பட அனைத்து சாதனங்களும் அடங்கும்

ஐரோப்பாவில் முன்னதாக இதுகுறித்து ஒரு புதிய சட்டமே நிறைவேற்றியதாக தகவல் வெளியானது.

அதில், ஆப்பிள் ஐபோன்கள் உட்பட அதன் அனைத்து சாதனங்களில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு போர்ட் அம்சத்தை நிறுவனங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆப்பிள் பயன்படுத்தும் லைட்னிங் போர்ட்களை இனி USB-C போர்ட் ஆக மாற்றம் செய்ய வேண்டும் என்பதை இந்த புதிய சட்டம் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

இந்தியாவில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், கேமராக்கள் என அனைத்துக்கும் ஒற்றை மொபைல் சார்ஜிங் போர்ட்டை கொண்டு வர வேண்டும் என ஐரோப்பாவில் சட்டம் இயற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்த பட்டியலில் லேப்டாப்கள், இ-ரீடர்கள், இயர்பட்கள், கீபோர்ட்கள், கம்ப்யூட்டர் மவுஸ்கள் மற்றும் போர்ட்டபிள் நேவிகேஷன் சாதனங்கள் என அனைத்தும் அடங்கும்.

இதன்மூலம் மின்னணு கழிவுகள் குறைக்கப்படும் என கணிக்கப்படுவதோடு நுகர்வோர்களுக்கும் பெருமளவு பயன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: indiatoday.in

Best Mobiles in India

English summary
All smartphones should arrive in India with a USb Type-C charging port: Source

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X