போச்சு.. ரூ.349 இனி ரூ.401.. ரூ.299 இனி ரூ.344.. 15% விலை உயர்வு? Jio, Airtel, Vi SIM கஸ்டமர்கள் தலையில் இடி!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பாரதி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விரைவில் தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plans) விலையை உயர்த்தக்கூடும் என்கிற தகவல் கிடைத்துள்ளது
எப்போது அமலுக்கு வரும்? டெலிகாம்டால்க் (TelecomTalk) வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி. 2027 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான (Q1 FY27) தொலைத்தொடர்பு மற்றும் இணைய துறை குறித்த 'சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச்' (Centrum Institutional Research) அறிக்கையின்படி, ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையில் 15% வரை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் அமலுக்கு வரலாம்.

என்ன காரணம்? கடந்த ஒன்று அல்லது இரண்டு காலாண்டுகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஏஆர்பியு (ARPU), அதாவது பயனருக்கான சராசரி வருவாய் (Average revenue per user) வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம் ஏதுவும் இல்லை. மேலும், கடைசியாக விலைகள் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
ரூ.349 இனி ரூ.401.. ரூ.299 இனி ரூ.344 ஆகும்? "டெலிகாம் சந்தையில் 3+1 நிறுவனங்கள் மட்டுமே இருப்பதால் விலை நிர்ணய சூழல் சாதகமாக மாறியுள்ளது. எனவே அடுத்த 3 முதல் 4 மாதங்களில் மேலும் 12-15% கட்டண உயர்வு இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில், அதாவது 15% விலை உயர்வு அமலுக்கு வரும் பட்சத்தில், தற்போது ஜியோவின் பேஸிக் ரீசார்ஜ்களில் ஒன்றாக இருக்கும் ரூ.349 ஆனது ரூ.401 ஆக விலை உயர வாய்ப்புள்ளது. இதேபோல ஏடெல்லின் பேஸிக் திட்டங்களில் ஒன்றான ரூ.299 ஆனது ரூ.344 ஆக விலை உயர வாய்ப்புள்ளது.
ஏஆர்பியு வளர்ச்சியின் பெரும்பகுதி, 2ஜி பயனர்கள் 4ஜி அல்லது 5ஜி சேவைக்கு மாறுவதாலும், அதிக டேட்டா பயன்பாட்டாலும் தான் கிடைக்கிறது. ஏஆர்பியு-வில் உண்மையான மற்றும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைய, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும். அது விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அடுத்த கட்டண உயர்வு எப்படி இருக்கும்? இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிர்வாகம் அளித்துள்ள தகவல்கள் மற்றும் குறிப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, அடுத்த கட்டண உயர்வு என்பது வெறும் நேரடி விலை உயர்வாக மட்டும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாறாக, விலை நிர்ணய கட்டமைப்பில் மாற்றத்துடன் கூடிய விலை உயர்வாக இது அமையும். தற்போதைய விலை நிர்ணய கட்டமைப்பில், வெவ்வேறு அளவிலான பயன்பாட்டிற்கும் மக்கள் ஒரே தொகையை செலுத்தும் நிலை உள்ளது. ஆனால் எதிர்காலத்தில், நுகர்வோரின் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படலாம்.
அதாவது, நீங்கள் அதிக டேட்டாவை பயன்படுத்தினால், அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம், நுகர்வோர் எவ்வளவு டேட்டாவை பயன்படுத்தினாலும் அதை வழங்குவதற்கான செலவு மாறாமல் இருப்பதால், தொலைத்தொடர்பு நிறுவனங்களால் தங்கள் ஏஆர்பியு, மொத்த வருவாய் மற்றும் சேவைக்கான லாப வரம்பு ஆகியவற்றை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்க முடியும்.
மார்ச் 2026-ல் முடிவடைந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7% ஆகக் குறைந்தது. இதன் பொருள், அடுத்த காலாண்டிலும் இந்த வளர்ச்சி விகிதம் மேலும் குறையக்கூடும் என்பதாகும். தற்போது நாம் 2027 நிதியாண்டின் முதல் காலாண்டின் (Q1 FY27) கடைசி மாதத்தில் இருக்கிறோம்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தால், 2024-ல் நடந்தது போலவே, 2027 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் (Q2 FY27) முதல் வாரத்தில் அந்த உயர்வு அறிவிக்கப்படலாம். வரவிருக்கும் கட்டண உயர்வானது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ஏஆர்பியு-வை அதிகரிக்க உதவும். ஒட்டுமொத்த வருவாயை உயர்த்துவதற்கும், EBITDA (வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தீர்ப்புச் செலவுகளுக்கு முந்தைய வருவாய்) வரம்புகளை மேம்படுத்துவதற்கும் இது மிக முக்கியமானது.


Click it and Unblock the Notifications