இந்த Oppo அல்லது OnePlus போன் உங்ககிட்ட இருக்கா? அப்போ உடனே 5G யூஸ் பண்ணலாம்.!

|

Airtel வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ் இப்போது வெளியாகியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் அதன் ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய 5ஜி நெட்வொர்க் சேவை இதுவரை குறிப்பிட்ட சில 5G ஸ்மார்ட்போன்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது.

ஆனால், இப்போது OnePlus மற்றும் Oppo நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து 5ஜி போன்களில் எடுக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

OnePlus மற்றும் Oppo ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்?

OnePlus மற்றும் Oppo ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்?

ஏர்டெல்லின் 5G நெட்வொர்க்குகள் இப்போது OnePlus இன் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இயங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. OnePlus இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக திகழ்கிறது.

இது தற்போது வாடிக்கையாளர்களுக்குப் பல 5G போன்களை வழங்குகிறது. OnePlus இன் தற்போதைய முதன்மையான OnePlus 10 Pro சிறிது காலத்திற்கு முன்பு 5G-க்கு ஆதரவைப் பெற்றது.

ஏர்டெல் 5ஜி சேவையை இனி நீங்கள் யூஸ் பண்ணலாம்.!

ஏர்டெல் 5ஜி சேவையை இனி நீங்கள் யூஸ் பண்ணலாம்.!

இது ஜியோ மற்றும் ஏர்டெல்லின் 5G இரண்டையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏர்டெல்லின் 5ஜியை ஆதரிக்காத ஒன்பிளஸின் சில சாதனங்கள் சரியான 5ஜி அப்டேட்டைப் பெறாமல் இருந்தது.

OnePlus மட்டுமல்ல, Oppo வின் ஸ்மார்ட்போன் மாடல்கள் கூட ஏர்டெல் 5ஜி சேவையை இயக்காமல் இருந்து வந்தது. இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

இலவசமாக 1TB Google கிளவுட் ஸ்டோரேஜ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன செய்ய வேண்டும்?இலவசமாக 1TB Google கிளவுட் ஸ்டோரேஜ்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன செய்ய வேண்டும்?

5G-யை ஆதரிக்கும் மற்றும் ஆதரிக்காத OnePlus மற்றும் Oppo போன்கள்.!

5G-யை ஆதரிக்கும் மற்றும் ஆதரிக்காத OnePlus மற்றும் Oppo போன்கள்.!

காரணம், இப்போது Oppo மற்றும் OnePlus நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போனகளின் பெரும்பாலான மாடல்கள் ஏர்டெல் 5ஜி சேவைக்கான அப்டேட்டை பெற்றுவிட்டன என்று கூறப்படுகிறது.

இதை அதிகாரப்பூர்வமாக OnePlus அறிவிக்கவில்லை, ஆனால் இதை பார்தி ஏர்டெல் இணையதளத்தில் நம்மால் காண முடிகிறது. சில நாட்களுக்கு முன், 5G-யை ஆதரிக்கும் மற்றும் ஆதரிக்காத OnePlus மற்றும் Oppo இன் சாதனங்களைப் பற்றி. பட்டியலை வெளியிட்டிருந்தோம்.

5ஜி ஆதரவைப் பெற்றுள்ளன OnePlus ஸ்மார்ட்போன்கள்

5ஜி ஆதரவைப் பெற்றுள்ளன OnePlus ஸ்மார்ட்போன்கள்

ஆனால் இப்போது, இந்தியாவில் உள்ள அனைத்து 5G சாதனங்களும் OnePlus மற்றும் Oppo வழங்கும் 5Gயை ஆதரிக்கின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த பிராண்டில் எந்தெந்த சாதனங்கள் 5ஜி ஆதரவைப் பெற்றுள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் 5ஜியை ஆதரிக்கும் ஒன்பிளஸ் 5ஜி போன்கள் பற்றிப் பார்க்கையில், ஏர்டெல்லின் 5G சேவைக்கான சமீபத்திய அப்டேட்டை பெற்ற சாதனங்களில் OnePlus 8, OnePlus 8T, OnePlus 8 Pro, OnePlus Nord 2 மற்றும் OnePlus 9R போன்றவை அடங்கும்.

5G போன் வாங்குனா 5G போன் வாங்குனா "இந்த" போன்களை தான் வாங்கணும்.! பட்ஜெட்டில் பெஸ்ட் இதான்.!

இந்த OnePlus போன்களில் 5ஜி ரெடி டு யூஸ்.!

இந்த OnePlus போன்களில் 5ஜி ரெடி டு யூஸ்.!

அதேபோல், ஏர்டெல்லின் 5G NSA நெட்வொர்க்குகளை ஆதரிக்கும் அனைத்து OnePlus ஸ்மார்ட்போன்களும் இப்போது 5ஜி சேவையுடன் செயல்படுகின்றன.

இதில் OnePlus 9 Pro, OnePlus Nord CE OnePlus Nord, OnePlus 9, OnePlus Nord CE Lite 2, OnePlus 10R, OnePlus 2, Nord, OnePlus 10 Pro 5G, OnePlus Nord 2T, OnePlus 10T, OnePlus 9RT, OnePlus 8, OnePlus 8T, OnePlus 8 Pro, OnePlus Nord 2 மற்றும் OnePlus 9R போன்ற மாடல்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த Oppo 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?

இந்த Oppo 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?

ஏர்டெல் 5ஜியை ஆதரிக்கும் ஒப்போ 5ஜி போன்களின் பட்டியலை பற்றிப் பார்க்கையில், அனைத்து Oppo சாதனங்களும் இப்போது பார்தி ஏர்டெல்லின் 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கின்றன.

ஏர்டெல் 5G சேவைக்கான ஆதரவைப் பெற்ற சமீபத்திய Oppo சாதனங்கள் - Oppo F19 Pro Plus, Oppo Reno5G Pro, Oppo Reno 6, Oppo Reno 6 Pro, Oppo A53s, Oppo A74, Oppo Reno 7 Pro 5G, Oppo F21 Pro 5G, Oppo Reno 7, Oppo Reno 8, Oppo Reno 8 Pro, Oppo K10 5G மற்றும் Oppo F21s Pro 5G மாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சடனாக விலை குறைந்த Oppo Reno 7 Pro 5G.! சடனாக விலை குறைந்த Oppo Reno 7 Pro 5G.! "இப்படி" செஞ்சா ரூ.13,490-க்கு தட்டி தூக்கலாம்.!

நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் அதிர்ஷ்டசாலி.!

நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால் அதிர்ஷ்டசாலி.!

Oppo அதன் சாதனங்களுக்கான புதுப்பிப்புகளை விரைவாக வெளியிடுகிறது. இந்த ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் உங்களிடம் இருந்தால் ஏர்டெல் 5ஜியை நீங்கள் பயன்படுத்தத் துவங்கலாம்.

நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால், உண்மையிலேயே நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். ஏர்டெல் தனது 5ஜி நெட்வொர்க்குகளை எட்டு நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிலும், உங்களிடம் ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் 5ஜி போன் இருந்தால் இரட்டிப்பு சந்தோஷம் தான்.

Best Mobiles in India

English summary
All OnePlus And Oppo 5G Smartphones Will Work On Airtel 5G Plus In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X