விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: எருக்கலம் பூ, விநாயகர் சிலை என அனைத்தும் ஆன்லைனில்- எப்படி வாங்குவது?

|

ஆன்லைன் ஆர்டர் வழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

நாடு முழுவதும் வருகிற 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்துள்ளது. அதில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டாம், ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டாம், வீட்டில் இருந்தபடியே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தனிநபராக சென்று கரைக்கலாம்

தனிநபராக சென்று கரைக்கலாம்

அதேபோல் வழிபட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் தனிநபராக சென்று கரைக்கவும், கோயில்களில் சிலைகளை வைத்து விட்டுச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் என்பதால் பாதுகாப்போடு பண்டிகைகளை கொண்டாட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தல்

கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தல்

இந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என தமிழ பாஜக வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

 தமிழக முதலமைச்சர் பதில்

தமிழக முதலமைச்சர் பதில்

அதேபோல் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ விநாயகர் சதுர்த்திக்கு விதித்த கட்டுப்பாடுகளை நீக்கும்படி வலியுறுத்தினார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். அதில் ஓணம், பக்ரீத் பண்டிகைக்கு அளித்த தளர்வுகளால் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்தது. இதை கருத்தில் கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பொது இடங்களில் சிலைகளை அமைத்து வழிபட தடை

பொது இடங்களில் சிலைகளை அமைத்து வழிபட தடை

கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தவில்லை மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒருசில இடங்களில் தொற்று பரவல் அதிகரிப்பதும் குறைவதுமாகவே இருக்கிறது. இதன்காரணமாகவே பொது இடங்களில் சிலைகளை அமைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வழிபடுவதற்கு கட்டுப்பாடுகள் இல்லை, இந்த கட்டுப்பாடுகளை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டார்.

வெளியில் சென்று பொருட்களை வாங்க அச்சம்

வெளியில் சென்று பொருட்களை வாங்க அச்சம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் வெளியில் சென்று பொருட்களை வாங்க அச்சம் காண்பிக்கின்றனர். இதனால் ஆன்லைன் விற்பனை அமோகமாக வளர்ந்தது. ஆன்லைனில் அனைத்து வகையான பொருட்களும் சலுகையோடு கிடைக்கிறது. குறிப்பாக தேங்காய் சிரட்டை முதல் வரட்டி வரை அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கின்றன.

தேவையான பூஜை பொருட்கள்

தேவையான பூஜை பொருட்கள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு தேவையான எருக்கம் பூ, விநாயகர் சிலை மற்றும் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஆன்லைன் தளங்களில் கிடைக்கின்றன. ஆன்லைன் டெலிவரி பொருட்கள் பாதுகாப்பாக உத்தரவாதத்துடன் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படுகின்றன. மேலும் அந்தந்த பண்டிகை தினத்தில் அதற்கு தேவையான அனைத்து பொருட்களும் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன.

பல்வேறு பொருட்களுக்கும் அதிரடி தள்ளுபடி

பல்வேறு பொருட்களுக்கும் அதிரடி தள்ளுபடி

பல்வேறு பொருட்களுக்கும் அதிரடி தள்ளுபடி வழங்கும் வகையிலான பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் சேல் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த தினங்களில் நிறுவனங்கள் பல்வேறு பொருட்களுக்கும் தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்கும்.

கொரோனா தொற்று ஏற்பட்ட நாளில் இருந்து பொதுமக்கள் வெளியே சென்று பர்ச்சேஸிங் செய்வதற்கு பதிலாக வீட்டில் இருந்தே ஆர்டர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எலெக்ட்ரானிக் பொருகளில் தொடங்கி மளிகை பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வணிகம்

வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வணிகம்

வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வணிகம்
ஆன்லைன் நிறுவன வணிகம் சற்று வேகமாக வளர்ந்து வருகிறது, ஆன்லைன் வர்த்தக நிறுவனம் சாதனை அளவிலான வருவாயை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்கள் அனைத்து விதமான பொருட்களையும் ஆன்லைனில் வாங்கவே விரும்புகின்றனர்.

Best Mobiles in India

English summary
All kinds of Ganesha Chaturthi Pooja items including Erukum Poo also available in online

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X