Home
News

இனி மொத்த இந்தியாவுக்கும் இந்த 2 ஓராண்டு 1 பிளான்கள் தான்!

சில மாதங்களுக்கு முன்னர், ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தும் யோசனை இல்லை.. மாறாக பயனர்களை அதிக அளவிலான டேட்டாவை பயன்படுத்த வைக்கும் வேலைகளில் ஈடுபடுவோம் என்று கூறிவந்த ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது.. பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் தனது திட்டங்கள் மீதான விலை உயர்வை (Recharge Price Hike) அறிவித்த வேகத்தில் ஜியோ கஸ்டமர்களின் கால்களை வாரியது. ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவும் தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் (Prepaid and Postpaid Plans) விலைகளை தாறுமாறாக உயர்த்தியது.

புதிய விலைகள் அமலுக்கு வந்த பின்னரே இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆப்ரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ மறைமுகமாக செய்து முடித்த வேலை ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது. ஜியோ ப்ரீபெய்ட் சேவையின் கீழ் பல வகையான பிரிவுகள் உள்ளன. அதில் 365 நாட்கள் அல்லது 1 ஆண்டு என்கிற வேலிடிட்டியை வழங்கும் திட்டங்களின் பிரிவும் அடக்கம். இந்த பிரிவில் தான், ஜியோ நிறுவனம் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது.

இனி மொத்த இந்தியாவுக்கும் இந்த 2 ஓராண்டு 1 பிளான்கள் தான்!

கட்டண உயர்வுகளுக்கு பிறகு இந்த பிரிவின் கீழ் 2 திட்டங்கள் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அதுமட்டுமின்றி 1.5 ஜிபி அல்லது 2 ஜிபி தினசரி டேட்டாவை வழங்கும் எந்தவொரு வருடாந்திர ப்ரீபெய்ட் பேக்கும் இப்போது ஜியோ நிறுவனத்திடம் இல்லை. வேறென்ன திட்டங்கள் உள்ளன? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? அவைகளின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

365 நாட்கள் அல்லது 1 ஆண்டு வேலிடிட்டி உடன் வரும் இரண்டு வருடாந்திர திட்டங்களுமே மிகவும் விலை உயர்ந்த திட்டங்களாக உள்ளன. அவைகள் ரூ.3599 மற்றும் ரூ.3999 ப்ரீபெய்ட் ரிசார்ஜ்கள் ஆகும். ரூ.3599-ன் நன்மைகளை பொறுத்தவரை, இது வரம்பற்ற வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 2.5ஜிபி டெய்லி டேட்டாவுடன் வருகிறது.

ஜியோவின் ரூ.3599 திட்டத்தின் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் போன்றவைகளை வழங்கும். இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 365 நாட்கள் அல்லது 1 ஆண்டு ஆகும்.

அடுத்ததாக உள்ள ரூ.3999 திட்டமானது ரூ.3599-ன் கீழ் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் அப்படியே வழங்குகிறது. அதாவது இது வரம்பற்ற வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 2.5ஜிபி டெய்லி டேட்டாவை வழங்கும். கூடவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் போன்றவைகளை மொத்தம் 365 நாட்கள் அல்லது 1 ஆண்டு என்கிற வேலிடிட்டியின் வழங்கும்.

ரூ.35999 க்கும் மற்றும் ரூ.3999 க்கும் இடையே உள்ள ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் ரூ.3999 ஆனது ஃபேன் கோட் (Fan Code) என்கிற ஓடிடி தளத்திற்கான இலவச அணுகலுடன் வருகிறது. இது ரூ.3599-ன் கீழ் சேர்க்கப்படவில்லை. இதுதவிர்த்து (முன்னரே குறிப்பிட்டபடி) இவ்விரு திட்டங்களும் ஒரே மாதிரியான நன்மைகளையே வழங்குகின்றன.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய வருடாந்திர திட்டங்களை எப்போது அறிமுகம் செய்யும், அவைகள் என்ன மாதிரியான நன்மைகளை வழங்கும் என்பதை பார்க்க நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால் இப்போது கிடைக்கும் இரண்டு திட்டங்களும் அனைவருக்கும் பொருந்தாது.

ஏனென்றால் இரண்டு திட்டங்களும் தினசரி 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன, எனவே தினசரி டேட்டாவை குறைவாக வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஜியோ நிறுவனம் உள்ளது. அத்தகைய திட்டங்கள் உங்களுக்கு தேவைப்பட்டால்.. டெய்லி 1.5ஜிபி டேட்டாவை வழங்கும் வருடாந்திர திட்டம் உங்களுக்கு தேவைப்பட்டால்.. நீங்கள் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்கிற கணக்கு எங்களிடம் இல்லை!

More from GizBot

Best Mobiles in India

English summary
All Jio Customers Now Have 2 Annual Packs Only Rs 3599 Vs Rs 3999 Which is Best 365 Days Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X