Home
News

Jio கஸ்டமர்கள் காட்டில் மழை.. 56 நாட்களுக்கு அன்லிமிடெட் 5G.. கூடவே டெய்லி டேட்டா.. அள்ளி கொடுத்த அம்பானி!

Jio Best Recharge Plan October 2024: டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) கூற்றுப்படி, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கீழ் 470 மில்லியனுக்கும் அதிகமான வயர்லெஸ் பயனர்கள் உள்ளனர். இவ்வளவு பெரிய அளவிலான பயனர்களை சமாளிக்கவும், தக்கவைக்கவும் ஜியோ கையாளும் முக்கிய "மந்திரம்" - பல்வேறு வகையான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விருப்பங்கள் தான்!

அவைகளில் மிகவும் வசதியான ஒரு விருப்பம் என்றால், அது 56 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் திட்டங்கள் தான். ஏனென்றால் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் திட்டங்கள் ஆனது முழுதாக 1 மாதம் (அதாவது 30 நாட்களுக்கு) நீடிக்காது. இது மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு சிக்கலாக அமைகிறது.

Jio: 56 நாட்களுக்கு அன்லிமிடெட் 5G.. கூடவே டெய்லி டேட்டா!

அதே சமயம் 1 ஆண்டு வேலிடிட்டி உடன் வரும் திட்டங்களின் விலைகள் அதிகமாக இருக்கின்றன. இது பட்ஜெட் வாசிகளுக்கு செட் ஆவதில்லை. இந்த இடத்தில் தான் 56 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் திட்டங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஜொலிக்கின்றன. ஆனால் ஜியோவிடம் 56 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் 2 ப்ரீபெய்ட் திட்டங்களும்,1 ஜியோபாரத் போன் ப்ரீபெய்ட் திட்டம் மட்டுமே உள்ளது.

அவைகளில் ரூ.629 மதிப்புள்ள ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம். ஏனென்றால் இது தான் 56 நாட்கள் வேலிடிட்டி பிரிவில் - மிகவும் சுவாரசியமான நன்மைகளை வழங்குமொரு திட்டமாகும். இது அப்படி என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதோ விவரங்கள்:

ஜியோவின் ரூ.629 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா என மொத்தம் 112 ஜிபி அளவிலான டேட்டா போன்ற நன்மைகளை மொத்தம் 56 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.

ஒருவேளை நீங்கள் இந்த திட்டத்தின் 2ஜிபி டெய்லி டேட்டாவை காலி செய்துவிட்டால், 64 கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா அணுக கிடைக்கும். கூடுதலாக, இந்த திட்டத்தின் கீழ் ஜியோ டிவி (JioTV), நான்-பிரீமியம் ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) ஆகியவற்றிற்கான சந்தாக்களை உள்ளடக்கிய ஜியோ ஆப்ஸ் நன்மைகளையும் வழங்குகிறது.

எல்லாவற்றை விட முக்கியமான இந்த திட்டம், ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது. அதாவது நீங்கள் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருந்தால், உங்களிடம் 5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் இருந்தால்.. உங்களுக்கு ஜியோவின் ட்ரூ 5ஜி அன்லிமிடெட் சலுகை அணுக கிடைக்கும்.

ரூ.629-ஐ போலவே ஜியோவின் ரூ.579 திட்டமும் கூட 56 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. ஆனால் இது டெய்லி 2ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 1.5ஜிபி டெய்லி டேட்டாவுடன் வருகிறது மற்றும் இதில் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா அணுக கிடைக்காது. மற்றபடி, ரூ.579-ன் மீதமுள்ள நன்மைகள் ரூ.629-ல் இருப்பதை போலவே இருக்கும்.

அதாவது ரூ.579 திட்டம் - அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், டெய்லி டேட்டாவை காலி செய்த பிறகு 64 கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டா, ஜியோ டிவி, நான்-பிரீமியம் ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் சந்தாக்களை உள்ளடக்கிய ஜியோ ஆப்ஸ் நன்மை போன்றவைகளை வழங்கும்.

56 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஜியோ திட்டமானது - ஜியோபாரத் போன் திட்டம் பிரிவின் கீழ் வருகிறது. இதன் விலை ரூ.234 ஆகும். ஜியோ போன் (JioPhone) அல்லது ஜியோ போன் ப்ரைமா (Jio Phone Prima) பயனர்களுக்கான இந்த திட்டம், 56 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ்

அன்லிமிடெட் வாய்ஸ் கால், 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள், ஒரு நாளைக்கு 0.5ஜிபி டேட்டா (மொத்தம் 28ஜிபி டேட்டா), அதிவேக தரவு வரம்பை அடைந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா, ஜியோ டிவி, நான்-பிரீமியம் ஜியோ சினிமா மற்றும் ஜியோ க்ளவுட் சந்தாக்களை உள்ளடக்கிய ஜியோ ஆப்ஸ் நன்மை போன்ற நன்மைகளை 56 நாட்களுக்கு வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
All Jio Customers Need to Know About these 3 Jio Prepaid Plans Comes with 56 Days Validity Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X