ஆல் இந்தியா ரேடியோவின் புதிய சேவை!!!

Written By:

ஆகாஷ்வானி என்று அழைக்கப்படும் ஆல் இந்தியா ரேடியோவின் (AIR) செய்திகள் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இன்று தொலைகாட்சிகளின் ஆதிகத்தால் இன்றைய தலைமுறையினுருக்கு இதை பற்றி அதிகம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் ரேடியாக்களின் பயன்பாடுகள் அதிகம் இருந்த காலகட்டத்தில் இதன் சேவை மகத்தானது.

இப்பொழுது ஆல் இந்தியா ரேடியோ தொழில்நுட்ப வளர்ச்சிகேற்ப புதிதாக ஒரு சேவையை ஆரம்பித்துள்ளது. இலவசமாக எஸ்எம்எஸ்கள் மூலம் போன்களுக்கு செய்திகளை மெசேஜாக அனுப்புவதுதான் அந்த புதிய சேவை.

ஆல் இந்தியா ரேடியோவின் புதிய சேவை!!!

ஆறு மாதத்திற்க்கு முன்பு பைலட் பிராஜ்டெக்டாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை 2 லட்சம் சந்தாதாரர்களை கொண்டிருந்தது. இப்பொழுது இது பொது மக்களுக்கும் பயன்படும் வகையில் இலவச எஸ்எம்எஸ் சேவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்க்குள் இந்த புதிய சேவைக்கு 5 லட்சம் சந்தாதாரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல் இந்தியா ரேடியோவின் இந்த இலவச செய்தி சேவையை நீங்கள் பெற வேண்டுமானால் 'AIRNWS' <-space-> 'NAME' என மெசேஜ் டைப் செய்து 8082080820 என்ற நம்பருக்கு அனுப்பவும் அல்லது 08082080820 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் குடுத்தால் இந்த சேவையை நீங்கள் பெறலாம்.

இந்த மெசேஜில் 100 எழுத்துக்கள் கொண்ட அப்போதைய தலைப்பு செய்தி வரும் அதுனுடன் சில விளம்பர குறிப்புகளும் வரும் . விருபத்துடன் இந்த சேவையை மெசேஜ் அல்லது மிஸ்ட் கால் மூலம் கோரும் சந்தாதாரர்களுக்கு மட்டும் செய்திகள் மெசேஜாக அனுப்பப்படும். இதற்க்காக ஆல் இந்தியா ரேடியோ டிராய் அமைப்பிடம் ஒப்புதல் வாங்கியுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot